வெள்ளி, 15 ஏப்ரல், 2011

நெகிழ்வூட்டும் அறவுரைகள்



6412. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு 2
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
Volume :7 Book :81
6413. அனஸ்(ரலி) அறிவித்தார்.
(அகழ்ப் போருக்காக அகழ் தோண்டிக் கொண்டிருந்த போது) நபி(ஸல்) அவர்கள் 'இறைவா! மறுமை வாழ்க்கையைத் தவிர வேறு (நிலையான) வாழ்க்கை இல்லை; எனவே, அன்சாரிகளையும் முஹாஜிர்களையும் (அந்த நிலையான மறுமை வாழ்விற்காக) செம்மைப்படுத்துவாயாக!' என்று (பாடியபடி) சொன்னார்கள். 3
Volume :7 Book :81
6414. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாயிதீ(ரலி) அறிவித்தார்.
அகழ்ப் போரின்போது நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்தோம். அவர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மண் சுமந்து எடுத்து வந்து கொண்டிருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களைப் பார்த்துவிட்டு, 'இறைவா! மறுமையின் வாழ்க்கையைத் தவிர வேறு (நிரந்தரமான) வாழ்க்கை இல்லை; எனவே, (அதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக!' என்று (பாடியபடி) கூறினார்கள்.4
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
Volume :7 Book :81
6415. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
'சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (ம்டைப்பது), உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்.6 காலையில் சிறிது நேரம் அல்லது மாலையில் சிறிது நேரம் இறைவழியில் (போருக்குச்) செல்வது உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்'7 என்று நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
Volume :7 Book :81
6416. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என் தோளைப் பிடித்துக் கொண்டு 'உலகத்தில் நீ அந்நியனைப் போன்று, அல்லது வழிப் போக்கனைப் போன்று இரு' என்றார்கள்.
(அறிவிப்பாளர்களில் ஒருவரான முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)
'நீ மாலை நேரத்தை அடைந்தால் காலைவேளையை எதிர்பார்க்காதே! நீ காலை வேளையை அடைந்தால் மாலை நேரத்தை எதிர்பார்க்காதே! நீ நோய்வாய்ப்படும் நாளுக்காக உன்னுடைய ஆரோக்கியத்தில் சிறி(து நேரத்)தைச் செலவிடு. உன்னுடைய இறப்பு(க் குப் பிந்திய நாளு)க்காக உன்னுடைய வாழ்நாளில் சிறி(து நேரத்)தைச் செலவிடு' என்று இப்னு உமர்(ரலி) அவர்கள் கூறுவார்கள்.9
Volume :7 Book :81
6417. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
(ஒருமுறை) நபி(ஸல்) அவர்கள் (நிலத்தில்) ஒரு சதுரக் கட்டம் வரைந்தார்கள். பிறகு (பின்வருமாறு) கூறினார்கள்:
(நடுவிலுள்ள மையப் புள்ளியான) இதுதான் மனிதன். இந்தச் சதுரம் தான் அவனைச் 'சூழ்ந்துள்ள' அல்லது 'சூழ்ந்து கொண்டுவிட்ட' வாழ்நாளாகும். (நடுவிலிருந்து) வெளியே செல்லும் கோடுதான் அவனுடைய எதிர்பார்ப்புகளாகும். இதோ இந்தச் சிறிய கோடுகள் (மனிதனை வந்தடையும்) சோதனைகளாகும். (சோதனைகளில்) ஒன்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் மற்றொன்று அவனைத் தீண்டவே செய்யும். (இடையில் ஏற்படும் சோதனைகளான) இவற்றிலிருந்து அவன் தப்பிவிட்டாலும் இ(யற்கை மரணமான)து அவனைத் தீண்டவே செய்யும். 11
Volume :7 Book :81
6418. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (முந்தைய ஹதீஸில் உள்ளபடி) சில கோடுகள் வரைந்தார்கள். பிறகு '(சதுரத்தின் நடுவிலுள்ள கோட்டைக் காட்டி) இதுதான் (மனிதனின்) எதிர்பார்ப்புகள் (என்றும், சதுரத்தைக் காட்டி) இதுதான் அவனுடைய ஆயுள் (என்றும் கூறிவிட்டு,) இவ்வாறு அவன் (எதிர்பார்ப்புகளில்) இருந்து கொண்டிருக்கும்போது அரும்லுள்ள (மரணம் - ஆயுள் முடிவு எனும்) கோடு அவனை வந்தடைகிறது' என்று கூறினார்கள்.
Volume :7 Book :81
6419. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு மனிதனின் வயது அறுபது ஆண்டுகளை எட்டும் வரை வாழ்நாளைத் தள்ளிப் போட்ட பிறகு அவன் (ஆயுள் விஷயத்தில்) கூறும் சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Volume :7 Book :81
6420. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.
1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம்.
2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.
Volume :7 Book :81
6421. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:
1. பொருளாசை.
2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :81
6422. முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.
(நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்த) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிலிருந்து வாளி ஒன்றில் (ம்ணற்று) நீர் எடுத்து (தம் வாயில் ஊற்றி பரக்கத்திற்காக என் மீது) உமிழ்ந்தது எனக்கு நினைவுண்டு.15
இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) அறிவித்தார்.
Volume :7 Book :81
6423. (தொடர்ந்து) முஹ்மூத் இப்னு ரபீஉ(ரலி) அறிவித்தார்.
இத்பான் இப்னு மாலிக் அல்அன்சாரி(ரலி) அவர்கள் (பின்வருமாறு) சொல்ல கேட்டேன்.
(ஒருநாள்) அதிகாலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்திருந்தபோது 'அல்லாஹ்வின் திருப்தியை நாடி 'லா இலாஹ இல்லல்லாஹ்' (வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று கூறியவாறு மறுமை நாளில் ஓர் அடியார் வந்தால் அவரின் மீது நரகத்தை அல்லாஹ் தடை செய்யாமல் இருப்பதில்லை' என்று கூறினார்கள். 16
Volume :7 Book :81
6424. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ் கூறினான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றிவிடும்போது நன்மையை நாடிப் பொறுமை காத்தால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :7 Book :81
6425. மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி) அறிவித்தார்.
பனூ ஆமிர் இப்னு லுஅய் குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான அம்ர் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களை, ஜிஸ்யா(காப்பு) வரி வசூலித்துக் கொண்டு வரும்படி பஹ்ரைனுக்கு அனுப்பினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா இப்னு அல்ஹள்ரமீ(ரலி) அவர்களைத் தலைவராக ஆக்கியிருந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் (வரி வசூலித்துக்கொண்டு) பஹ்ரைனிலிருந்து நிதியுடன் (மதீனாவுக்கு) வந்தார்கள். அபூ உபைதா(ரலி) அவர்கள் வந்துவிட்டதைக் கேள்விப்பட்ட அன்சாரிகள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் செல்ல, அது சரியான ஃபஜ்ருத் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. அல்லாஹ்வின் தூதருடன் அன்சாரிகள் தொழுகையை நிறைவேற்றினார்கள். தொழுகை முடிந்து நபி(ஸல்) அவர்கள் திரும்ப, அன்சாரிகள் தங்கள் எண்ணத்தை சைகையால் வெளியிட்டனர். (ஆர்வத்துடன் இருந்த) அவர்களைக் கண்டதும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு 'அபூ உபைதா வந்துவிட்டார்; அவர் ஏதோ கொண்டு வந்திருக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்' என்றார்கள். அன்சாரிகள் 'ஆம், இறைத்தூதர் அவர்களே!' என்று பதிலளித்தார்கள். 'அவ்வாறாயின் ஒரு நற்செய்தி. உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்கும் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம்' என்று கூறிவிட்டு 'அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு உலகச் செல்வம் தாராளமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக்கும் தாராளமாகக் கொடுக்கப்பட்டு, அதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அது (மறுமையின் எண்ணத்திலிருந்து) அவர்களின் கவனத்தைத் திருப்பிவிட்டதைப் போன்று உங்களின் கவனத்தையும் அ(ந்த உலகாசையான)து திருப்பிவிடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.17
Volume :7 Book :81
6426. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்.
ஒருநாள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுகை நடத்துவதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழவைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து 'உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது ('அல்கவ்ஸர்' எனும்) என்னுடைய தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு 'பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது 'பூமியின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்' என்றார்கள்.18
Volume :7 Book :81
6427. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.
(ஒருநாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) 'இறைவன் உங்களுக்காக வெளிக் கொணரும் பூமியின் வளங்களைத் தான் உங்களின் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகிறேன்' என்றார்கள். 'பூமியின் வளங்கள் எவை?' என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் '(கனிமப் பொருள்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய இவ்வுலகக் கவர்ச்சிப் பொருள்கள் (தாம் அவை)' என்று பதிலளித்தார்கள். அப்போது ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் '(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?' என்று வினவியதற்கு (பதிலளிக்காமல்) நபி(ஸல்) அவர்கள் மெளனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தம் நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் 'கேள்வி கேட்டவர் எங்கே?' என்று வினவினார்கள். அம்மனிதர் '(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)' என்று கூறினார். (அவர் கேள்வி கேட்டதையடுத்து மக்களுக்குப் பயனளிக்கும்) அந்த பதில் வெளிப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.
நபி(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும் இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகிற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்னவைத்துக் கொன்று விடுகின்றன் அல்லது கொல்லும் அளவுக்குச் சென்றுவிடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பிவிடும்போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க் கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாம்) சாணமும் சிறுநீரும் வெளியேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.19
இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகிறவருக்கு அது நல்லுதவியாக அமையும். இதை முறையற்ற வழிகளில் சம்பாதிக்கிறவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.20
Volume :7 Book :81
6428. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் (-மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.
-இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் 'இதற்குப் பிறகு இரண்டாவது அல்லது மூன்றாவது தலை முறையினரை நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்களா என்று எனக்குத் தெரியாது' என்று கூறினார்கள்.
(தொடர்ந்து ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்')
இவர்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் சாட்சியமளிக்க தாமாக முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும் படி அவர்களை யாரும் கோரமாட்டார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் நேர்த்திக்கடன் செய்வார்கள். ஆனால், அதை நிறைவேற்றமாட்டார்கள். (அதிகமாக உண்டு குடித்ததால்) பருமன் (தொந்தி) விழும் நிலை அவர்களிடையே தோன்றும்.
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். 21
Volume :7 Book :81
6429. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். இவர்களுக்குப் பிறகு சில சமுதாயத்தார் வருவர். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியங்களையும் அவர்களின் சத்தியங்கள் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.22
Volume :7 Book :81
6430. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
கப்பாப் இப்னு அரத்(ரலி) அவர்கள் (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத்) தம் வயிற்றில் ஏழு முறை சூடுபோட்டிருந்தார்கள். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறக் கேட்டேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால் மரணத்தை தடை விதித்திருக்காவிட்டால் மரணத்தை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன். முஹம்மத்(ஸல்) அவர்களின் தோழர்கள் பலர் தம(து நன்மைகளு)க்கு இவ்வுலக வாழ்க்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திடாத நிலையில் (வாழ்ந்து) மறைந்துவிட்டார்கள். (ஆனால், அவர்களுக்குப் பின்) நாங்கள் (வீடு கட்ட) மண்ணுக்குச் செலவழிப்பதைத் தவிர வேறு தேவையே இல்லாத அளவுக்கு இவ்வுலக(ச் செல்வ)த்தைப் பெற்றுள்ளோம்.23
Volume :7 Book :81
6431. கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் (ஒருமுறை) கப்பாப்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தங்களின் (வீட்டுச்) சுவர் ஒன்றை எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: மறைந்துவிட்ட எம் தோழர்(கள் புரிந்த நன்மை)களை இவ்வுலக வார்க்கை எந்த வகையிலும் பாதித்துவிடவில்லை. (ஆனால்,) அவர்களுக்குப் பிறகு நாங்கள் (நிறைய) செல்வத்தைப் பெற்றுள்ளோம். (வீடு கட்டத் தேவைப்படும்) மண்ணைத் தவிர, அதைச் செலவழிக்க வேறு துறை எதையும் நாங்கள் காணவில்லை.

புதன், 23 மார்ச், 2011

பெண் உரிமை என்றால் என்ன ?


பெண் உரிமை என்றால் என்ன அரைகுறை உடை அணிவதும், நகங்களுக்கும், உதடுகளுக்கும், தலை முடிக்கும் சாயம் பூசுவதும், குட்டை பாவாடையுடன் குதி உயர்ந்த பாதணிகளை அணிந்து துள்ளி துள்ளி நடப்பதும், மாலையில் கிளப்களுக்கு செல்வதும், கண்டவருடன் கட்டுபாடற்ற பாலியல் உறவு கொள்ளவதும், இறுதியில் சீரழிந்து தான் உருவாக்கும் சந்ததிகளையும் சிரழிந்து போவதும்தான் சுதந்திரம் , உரிமை என்று மேற்கு போதிக்கின்றது இஸ்லாம் ஆணும் பெண்ணும் மனித சமூகம் என்ற பறவையின் இரு இறக்கைகள் என்று போதிக்கின்றது
இஸ்லாம் 7 ஆம் நூற்றாண்டில் , 1420 ஆண்டுகளுக்கு முன்பே பெண்ணுக்கும் சம உரிமைகளும், பொறுப்புகளும் உண்டு என சட்டமியற்றி பெண்ணுக்கு அவர்களின் உரிமைகளை வழங்கி பலமான சமூகம் ஒன்றையும் உருவாக்கி காட்டியது ஆனால் மேற்குலகில் 17 ஆம் நூற்றாண்டில்தான், 400 வருடங்களுக்கு முன்னர் தான் பெண்ணுக்கும் உயிர் உண்டா? என்ற விவாதம் நடத்தவே தொடங்கினார்கள் அதற்கு முன்னர் பெண்கள் மனித இனமே அல்ல அவர்கள் பிசாசுகளின் வாரிசுகள் என்றார்கள்
ஆனால் இஸ்லாம் 1420 ஆண்டுகளுக்கு முன்பே இயற்கைக்கு மாற்றம் இல்லாத வகையில் ஆணும் பெண்ணும் சம உரிமை உடையவர்கள் என்றது இஸ்லாமிய கோட்பாட்டில் எல்லா தினங்களும் பெண்கள் தினம்தான் , எல்லா தினங்களும் முதியவர் தினங்கள்தான்
இஸ்லாத்தை சமூக வழக்காறுகளையும், மூட நம்பிக்கைகளையும் புறம் தள்ளி தூய இஸ்லாத்தை மட்டும் பின்பற்றும் சமூகங்களில் முதியோர் இல்லங்களையும், பெண் அடிமைத்தனதையும் காணமுடியாது இங்கு இஸ்லாம் கொள்கைப்படுத்தும் கருத்துகள் அனைவரையும் உண்மையான மகிழ்ச்சியல் வைத்துகொள்ளும். உரிமைகள் தொடர்பான  ஒரு அல் குர்ஆன் வசனம்
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்; பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்; ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) – நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (04:01)
மனித சமூகம் இஸ்லாத்தை சரியாக விளங்க முற்படுகின்றது முஸ்லிம் சமூகம் அதன் அடிப்படைகள் நோக்கி வேகமாக வந்து கொண்டிருகின்றது இஸ்லாம்தான் முழு மனித சமூகத்துக்குமான உண்மையான விடுதலையை, சுதந்திரத்தை, உரிமையை கொள்கைப்படுத்தியுள்ளது  அது சரியாக அமுல்படுத்தப்படும் சமூகங்களில் அதை மனிதர்கள் அனுபவிப்பர்.
இனி கவிதையை கவனியுங்கள்:
மாற்றம் தேடும் உரிமைகள்
ஹாரூன் மூஸா -22-03-2011
தாயே!
முதியோர் இல்லத்தில்
வாழ்ந்து கொண்டே சாகிறாய்..
செத்துக் கொண்டே வாழ்கிறாய்.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
தாயே!
கண்ணின் இமையும்
அன்பின் இமயமும் நீ தானே,
பிள்ளை மனம் கல்லென்பது
பார் போற்றும் மெய் தானோ?
தாய்மார் தினத்தில் மட்டுமே
வந்து போகிறார்கள்.
மகளிர் தினத்தில் மட்டுமே
வாழ்த்துச் சொல்கிறார்கள்.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
மகளே!
வேலை வாய்ப் பென்றும்,
பட்டம் பதவியென்றும்,
தாயாகும் பாக்கியத்தைத்
தள்ளிப் போடுகிறார்கள்.
மகளே!
காலா காலமாக
மறைத்துப் பார்த்த அழகை,
அழகு ராணியாக
அம்பலப்படுத்துகிறார்கள்.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
மகளே!
‘பெஷன்’ மோகமோ..
செல்வத்தோடு செழிப்பையும்;
உழைப்போடு ஊதியத்தையும்
கொள்ளை அடிக்கின்றது.
வரவில்லாத செலவையும்
உவப்பில்லாத பிழைப்பையும்
கொள்கை என்கின்றது.
மகளே!
அன்று..விளம்பரமின்றி
வியாபாரமில்லை என்றார்கள்.
இன்று..பெண்ணின்றி
விளம்பரமில்லை என்கிறார்கள்.
இது..விலை போகும் மாதருக்கு
ஊரார் வைத்த புதுப் பெயரா?
உலகத்தார் அமைத்த புதுத் தொழிலா?
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
மகளே!
கட்டில் காட்சியும்,
காமக் கதையும்,
மலிந்த சினிமாவில்
சிலிர்க்கிறார்கள்.
முத்தக் காட்சியும்
நீச்சல் உடையும்
நிறைந்த தெருவில்
சீவிக்கிறார்கள்.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
செல்வம் செழித்தாலும்
சனமே குறைந்தாலும்
வாரிசு வராமல்
வரம்புகள் கட்டுகிறார்கள்.
திருமண உறவோ
பணத்தால் பாலாகிறது.
சிறு சிறு பிளவால்
விவாகரத்து நடக்கிறது.
மறுமணமின்றியே
மற்றக் குடி கெடுகிறது.
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
பாலுறவைப் பலரோடும் பகிரலாம்..
சிசுவைக் கருவிலே கலையலாம்..
தாய்மையைத் தள்ளிப் போடலாம்..
தாய்ப் பாலைத் தர மறுக்கலாம்..
தனித் தாயாக காலம் கடத்தலாம்..
தந்தையின்றியே பிள்ளை வளர்க்கலாம்..
இரு பெண்களே தம்பதியாய் வாழலாம்..
இவை போல் ஏராலம் காணலாம்..
நவ யுகத்தின் நாகரீகம்
இது தானம்மா..
நம் பெண்களின் உரிமையும்
இது தானம்மா..
தாயே!
உனது காலடியில்
சுவனம் இருக்குது,
நம்புகின்றேன்.
சகோதரியே! உனது உறவில்
உயர்வுகள் உண்டு,
நேசிக்கிறேன்.
மகளே! உன் வளர்ப்பில்
நபியின் நட்பு கிடைக்கிறது
யாசிக்கிறேன்.
மனைவியே!
உன் அரவணைப்பில்
‘ஆகிரா தெரிகிறது,
ஆசிக்கின்றேன்.
பெண்களே!
உங்கள் உரிமை காப்பதால்
உயர்த்தப்படுகிறேன்.
உங்களைக் கனிவாய்ப் பார்ப்பதால்
வார்க்கப்படுகிறேன்.
வல்ல அல்லாஹ்வின் அடிமையாய்ப்
பார்க்கப்படுகிறேன்.
பெண்ணே!
இறைவன் தந்த
வளமின்றி
உன்னால் வாழலாமா?
இறைவன் கூறும்
வாழ்வின்றி
உன்னால்
உயரலாமா?
பெண்ணே!
மனம் போன போக்கில்
போகாதே!
மனிதன் போற்றும் உரிமையில்
மாளாதே!
கானல் நீரின் பின்
ஓடாதே!
கடவுள் கீரிய கோட்டைத்
தாண்டாதே!
முற்றும்

வெள்ளி, 18 மார்ச், 2011

வட்டி உயிரைக்கொள்ளும் உயிர்க்கொல்லி.


பெயர்: வட்டி
புனைப்பெயர்: இரத்தம் உறிஞ்சும் அட்டைப்பூச்சி, உயிரைக்கொள்ளும் உயிர்க்கொல்லி.
உடன்பிறந்தோர்: ஒரு பைசாவிலிருந்து பல பைசா வட்டிகள், கந்துவட்டி,மீட்டர்வட்டி, இன்சூரன்ஸ்,லோன், பைனான்ஸ்.
நண்பர்கள்: பணக்காரர்கள்,சேட்டுகள், வட்டிக்காகக் கடன் கொடுப்போர், லாவாதேவிக்காரர்கள்.
எதிரி: தர்மம்,ஸகாத்.
தொழில்: பொருட்களைச்சுரண்டுதல்.
உபதொழில்: உயிரைப்பரித்தல்,நஷ்டஈடாக கற்பை சூறையாடுதல்.
சுற்றுலாத்தலம்: பேங்க், நகைக்கடை,அடகுக்கடை.
அலர்ஜி: வட்டியில்லாக்கடன்.
விரும்புவது: உயிர்,சொத்து.
விரும்பாதது: தனக்கெதிரான பிரச்சாரம்.
எதிர்காலத்திட்டம்: கோடிக்கணக்கான பணம்சேர்ப்பது, பொருள்சேர்ப்பது.
சாதனை: உலக வங்கியில் கடன் வாங்கியதில் இந்தியாவிற்கு முதலாவது இடம்.
பரிசு: நிரந்தர நரகம்.
எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, எந்தவிதமான கஷ்ட காலங்களிலும் வட்டியின்பக்கம் மட்டும் தலைசாய்த்து விடாதீர்கள். ஏனெனில் வட்டி சம்பந்தப்பட்ட அனைத்தையும் அல்லாஹ் வெறுக்கின்றான்.
இதைப்பற்றி, அல்லாஹ் தன்திருமறையில்,

2:276 يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ ۗ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.

3:130 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُّضَاعَفَةً ۖ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ

3:130. ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்; இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.
இன்னும் அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்:
‘வட்டி வாங்குபவர்கள், வட்டி கொடுப்பவர்கள், அதை எழுதுபவர்கள் மற்றும் ஸதகா கொடுக்க மறுப்பவர்கள் – இவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். ஆதாரம் : திர்மிதி.
5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்:
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
இப்படி அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் வெறுக்கின்ற வட்டியின் பக்கம் நாம் ஏன் போக வேண்டும்.
சிலர், பிறரிடம் உதவி கேட்டால் தர மறுக்கிறார்கள்.வட்டியில்லா கடனும் கொடுக்க மறுக்கிறார்கள்.பிறகு என்ன தான் செய்வது? வட்டிகுதான் கடன் வாங்க வேண்டி வருகிறது என்று கூறுகிறார்கள். பணம் இல்லாவிட்டால் வட்டிக்குப்பணம் கிடைக்கும் என்ற எண்ணம் இருப்பதால்தானே வட்டியின் பக்கம் போகிறோம்.வட்டி என்பதே கிடையாது என்று நினைத்தால் போவோமா? சற்று சிந்தியுங்கள். பன்றிமாமிசம் ஹராம் என்று எல்லோருக்கும் தெரியும். எந்த அளவு பசியிருந்தாலும் பன்றி மாமிசத்தை உண்ண மாட்டோமல்லவா? உணவு எதுவும் கிடைக்காத உயிர்போகும்பட்சதில் பன்றிமாமிசத்தை உண்ணலாம் என்று சலுகை இருந்தும் நாம் உண்ண மாட்டோம். அதே போன்றே இந்த வட்டியையும் ஒரு பன்றிமாமிசமாகக் கருத வேண்டும்.
ஏனெனில் இந்த வட்டியின் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் தான் எத்தனை? தனது கற்பைப் பரிகொடுத்த பெண்கள் தான் எத்தனை? தனது பெற்றோர், பிள்ளைகள், உறவினர்களை இழந்தோர் தான் எத்தனை? இவை யாவற்றையும் கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு இந்த வட்டியின் கொடுமை தலை விரித்தாடுகிறது. வட்டிக்காகப் பணம் கொடுப்பதும், வட்டிக்குப் பணம் வாங்குவது மட்டுமல்ல. அதற்காக சாட்சிக் கையெழுத்துப் போடுவதும் பாவமேயாகும். இதற்கு மறுமையில் மிகப்பெரும் வேதனை மட்டுமல்ல, நிரந்தர நரகமும் கூட. இதைப்பற்றி அல்லாஹ் தன திருமறையில்,

2:275 الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ فَمَن جَاءَهُ مَوْعِظَةٌ مِّن رَّبِّهِ فَانتَهَىٰ فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ ۖ وَمَنْ عَادَ فَأُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ

2:275. யார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்: இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.
இன்னும் 2085. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்த தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றிருந்தார். ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து நின்றிருந்தார். ஆற்றிலே உள்ளவர் வெளியேற முனையும்போது. அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும் போதெல்லாம் இவர் அவரின் வாயில் கல்லை எறிய. அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்!
“அவர் யார்?’ என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) கேட்டேன். அதற்கவர்கள் ‘ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்!” எனக் கூறினார்கள்.” என ஸமுரா(ரலி) அறிவித்தார்.
எனவே அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,
நம்மில் வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக வட்டியில்லாக்கடன் கொடுக்க முன்வர வேண்டும்.வசதியற்றவர்கள் வட்டிக்காகப் பணம் வாங்குதலும், நகை அடகு வைத்தலும் செய்யாமல் இருக்க வேண்டும். வட்டியை ஒழிக்கப்போராட வேண்டும். வட்டியில்லாக்கடன் திட்டத்தை ஒவ்வொரு ஊரிலும் ஏற்ப்படுத்த வேண்டும். அப்போது இந்த உயிர்க்கொல்லி இந்தஉலகை விட்டு ஒழியும்.இன்ஷா அல்லாஹ்.
நிச்சயமாக நல்லது செய்வோருக்கு அல்லாஹ் எப்போதும் துணையிருப்பான்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்).
ஹாஜிரா தாஜுன். நவி மும்பை

புதன், 16 மார்ச், 2011

மனிதன் மண்ணறையில்


நபி(ஸல்) கூறினார்கள்: மனிதன் மண்ணறையில் வைக்கப்பட்டு அவனுடைய நண்பர்கள் அவனை விட்டும் திரும்பிச் செல்லும் போது அவன் அவர்களின் செருப்பின் ஓசையைக் கேட்பான். இரு மலக்குகள் அவனை உட்காரவைத்து(ஒரு மனிதரைக் காண்பித்து) இம் மனித ரைப்பற்றி நீ என்ன கூறிக்கொண்டிருந்தாய்? என அவனிடம் கேட்பார்கள். ஒரு முஃமின் இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாவார் என நான் சாட்சி கூறினேன் என்று கூறுவான். நரகத்தில் உனது இருப்பிடத்தைப் பார். இதற்குப் பகரமாக சுவர்க்கத்தில் ஒரு இருப்பிடத்தை அல்லாஹ் உனக்கு ஏற்படுத்தி விட்டான் என அவனிடம் கூறப்படும்;. அவ்விரண்டையும் அவன் பார்ப்பான். ஒரு காஃபிர் அல்லது நயவஞ்சகனிடம் இம்மனிதரைப்பற்றி நீ என்ன கூறிக் கொண்டிருந்தாய்? எனக் கேட்கப்படும் அதற்கவன் எனக்குத் தெரியாது மக்கள் கூறியதைக் கூறிக்கொண்டிருந்தேன் எனக் கூறுவான். அப்போது அவனிடம் நீ அவரை அறிந்து கொள்ளவுமில்லை பின்பற்றவுமில்லை எனக் கூறப்படும். பிறகு அவன் இரும்புச் சம்மட்டியால் ஓங்கி அடிக்கப்படுவான். அப்போது அவன் சப்தமிடுவான். அதை மனிதர்களையும் ஜின்களையும் தவிர அனைவரும் கேட்பார்கள்.(நஸயீ)
மண்ணறையில் உடலுக்கு மீண்டும் உயிர் கொடுக்கப்படுவது உலகில் மனித அறிவு விளங்கிக் கொள்ள முடியாத மறுமை விஷயமாகும். மனிதன் மண்ணறையில் நற்பாக்கியத்திற்குத் தகுதியானவனாக இருந்தால் நற்பாக்கியம் வழங்கப்படுவான். வேதனைக்குத் தகுதியானவனாகயிருந்தால் வேதனை செய்யப்படுவான்
அல்லாஹ் கூறுகிறான்: காலையிலும் மாலையிலும் அவர்கள் நரக நெருப்பு முன் கொண்டு வரப்படுவார்கள். மேலும் மறுமைநாள் வந்துவிடும்போது ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை கடினமான வேதனையில் புகுத்துங்கள் எனக் கூறப்படும்.(40:46) மண்ணறை வேதனையிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
தெளிவான அறிவு மண்ணறை வேதனையை மறுக்காது. காரணம் இதுபோன்ற நிலையை மனிதன்; தன் வாழ்வில் பார்க்கத்தான் செய்கிறான். உதாரணமாக தூங்கக் கூடிய ஒருவன் கனவில் கடினமாக வேதனை செய்யப்படுவதாக உணர்ந்து சப்தமிடுகிறான் உதவியும் தேடுகிறான். ஆனால் அவனுக்கருகில் இருப்பவன் இதை உணர்வதில்லை. உயிரோடு உறங்கக்கூடியவனுடைய வேதனையையே அருகிலிருப்பவன் உணர முடியவில்லை என்பது போல மரணித்தவனின் மண்ணறை வேதனையை உயிருள்ளவன் நேரடியாக உணரமுடியாது. மண்ணறை வேதனை உடலுக்கும் உயிருக்கும் சேர்ந்ததேயாகும்.
 நிச்சயமாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை மறுமையின் தங்குமிடங்களில் ஆரம்ப இடமாகும். இதிலிருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்று விட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதை விட மிகக் கடினமானதாகும். எனவே மண்ணறை வேதனையிலிருந்து முஸ்லிம்கள் பாதுகாப்புத்; தேடுவது அவசியமாகும். குறிப்பாக தொழுகையில் ஸலாம் கொடுப்பதற்கு முன் பாதுகாவல் தேடுவது அவசியமாகும். இவ்வாறே நரகத்திலும் மண்ணறையிலும் வேதனை செய்யப்படுவதன் முதற்காரணமான பாவங்களிலிருந்து தூரமாகுவதற்கு முயல வேண்டும். இதற்கு மண்ணறை வேதனையென சொல்லப்படுவதற்குரிய காரணம் பெரும்பாலும் மக்கள் மண்ணறையில்தான் அடக்கம் செய்யப்படுகிறார்கள் என்பதாகும். ஆனால் தண்ணீரில் மூழ்கியவர்கள் நெருப்பில் எரிந்துபோனவர்கள் மிருகங்களால் தின்னப்பட்டவர்கள் இன்னும் இதுபோன்றவர்கள் திரைமறைவான வாழ்க்கையில் வேதனை செய்யப்படுவார்கள் அல்லது நற்பாக்கியம் வழங்கப்படுவார்கள்.
மண்ணறை வேதனை என்பது இரும்பாலான அல்லது வேறு ஏதாவது சம்மட்டியலால் அடிக்கப்படுவது அல்லது இறந்தவரின் விலா எலும்புகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணையும் அளவிற்கு நெருக்கப்படுவது மண்ணறையில் இருள் நிரப்பப்படுவது நெருப்பாலான விரிப்பு விரிக்கப்படுவது நரகிலிந்து ஒரு வாசல் திறந்து வைக்கப்படுவது அவனின் தீய செயல்கள் துர்நாற்றமுள்ள அருவருப்பான முகமுடைய மனிதன் போன்று உருவெடுத்து அவனுடன் அமர்ந்திருப்பது இப்படிப் பல வகைகள் உள்ளன.
அடியான் காஃபிராகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் வேதனை நிரந்தரமாக இருக்கும். பாவியான முஃமினாக இருந்தால் அவனது பாவம் அளவிற்கு வேதனை மாறுபாடும். சிலசமயம் வேதனை நிறுத்தப்படும். ஆனால் முஃமின்; மண்ணறையில் அருள்பாலிக்கப்படுவான். அதாவது அவனது மண்ணறை விசாலமாக்கப்பட்டு ஒளி நிரப்பப்படும். சுவர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அதன் நறுமணம் வீசிக்கொண்டிருக்கும். சுவர்க்கத்தின் விரிப்பு விரிக்கப்படும். அவனது நற்செயல் அழகிய மனித வடிவில் உருவெடுத்து மண்ண றையில் அவனை மகிழ்விக்கும்.

ஞாயிறு, 13 மார்ச், 2011

அழைப்புப்பணி நம் அனைவருக்கும் கடமையான பொறுப்பு


RASHEED ABUDHABI
தங்களது தாயகத்தை விட்டு விட்டு அந்நிய பூமியில் வசிக்கக் கூடிய முஸ்லிம்கள், தற்பொழுதுள்ள கால கட்டத்தில் இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடிய முஸ்லிம்களாக தங்களை சொல்லாலும், செயலாலும் மாற்றிக் கொள்வது அவசியமானதொன்றாகும்.
ஏனெனில், இன்றைய மேலை நாட்டுச் சமூகம் இதற்கு முன் வாழ்ந்த வாழ்க்கையை விட்டு விட்டு உண்மையான வாழ்க்கையை வாழ்வதற்காக ஒரு ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நீங்களும், உங்களது பழக்க வழக்கங்களும், பண்பாடுகளும் இஸ்லாத்திற்குச் சான்று பகர வேண்டுமே ஒழிய, இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களை ஏற்படுத்தி விடக் கூடாது. இதற்கான காரணம் மிகவும் பாரதூரமானது. பல புதிய சகோதரர்களிடம் உங்களை இஸ்லாத்தில் கவர்ந்த அம்சம் எது என்று கேட்கும் பொழுது, பலர் தங்களுடன் பழகும் நபர்கள் மூலமாக, அதைப் போலவே வணக்க வழிபாடுகள் மூலமாக ஈர்க்கப்பட்டதாக விளக்கமளித்திருக்கின்றார்கள்.
எனவே, பெரும்பான்மை சமூகத்தில் சிறுபான்மையினராக வாழக் கூடிய முஸ்லிம்கள் இஸ்லாத்திற்குச் சான்று பகரக் கூடியவர்கள் தங்களது நடத்தைகளை மாற்றிக் கொள்வதே ஒரு மிகப் பெரிய அழைப்புப் பணியாகும்.
சில அறிவுரைகள்
உங்களது சொல்லும் செயலும் இறைவனுக்கு அடிபணிந்து இருக்கட்டும். உங்களது செயல்பாடுகள் எப்பொழுது இறைவனையும் அவனது தண்டனையையும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கட்டும். இதன் மூலம் நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தையும் பிற சமூக பழக்கவழக்கங்களின் பாதிப்பிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும். மற்ற கலாச்சாரங்களுக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதையும், மற்ற கலாச்சாரங்களினால் ஏற்படும் தீங்குகள் பற்றியும் தன்னுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு விளக்கிக் கூறுவது அவசியமாகும்.
ஷரீஆ அங்கீகரிக்காத எந்தவொரு வணக்க வழிபாடுகள், பழக்க வழக்கங்களை சற்றும் அனுமதிக்கக் கூடாது. இதற்கு ஷரீஅத் அனுமதித்த மற்றும் அனுமதி வழங்காத அம்சங்கள் பற்றிய தெளிந்த அறிவு இருப்பது அவசியமாகும். இன்னும் பிக்ஹு போன்ற இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படைச் சட்டங்கள் (ஒளு, குளிப்பு, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்.. இன்னும்) போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவும், தகுந்த சந்தர்ப்பங்களில் இவற்றைக் கையாண்டு, சிறு உரைகள் வழங்கக் கூடிய திறமையும் பெற்றிருத்தல் அவசியமாகும்.
திருமறைக் குர்ஆனை தெளிவாக ஓதக் கூடிய மற்றும் அதன் சில வசனங்களுக்காகவாவது பொருளுடன் விளக்கமளிப்பதற்கு தங்களை பயிற்று வித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
சமூகத்தில் உள்ளவர்களை ஒர் அணியில் நின்று, கூட்டுத் தொழுகை (ஜமாத்) நிறைவேற்றுவதற்கு தூண்டிக் கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தின் அனைத்துச் செய்திகளும் அனைவருக்கும் பொதுவானவை, அனைத்து மக்களுக்கும் அருளப்பட்டவை என்பதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்வதோடு, இது நமக்கு மட்டும் அருளப்பட்ட மார்க்கம் என்ற சுயநலத்தைக் கைவிட்டு, இஸ்லாமியச் செய்திகள் அடையாத உள்ளங்களுக்கு அவற்றை எடுத்துச் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்கள் பற்றி தெளிவான விளக்கத்தை மாற்றுமத நண்பர்களுக்கு வழங்க வேண்டியது, முஸ்லிம்களின் மீதுள்ள கடமையாகும். இன்றைக்கு மாற்றுமத நண்பர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி தவறான அறிமுகம் செய்யப்பட்டு, அவர்களது உள்ளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தவறாக புரிந்துணர்வு நிறைந்து கிடக்கின்றது. அவற்றை உரிய முறையில் விளக்கமளித்துக் களைய வேண்டியது, அவர்களைச் சுற்றி உள்ள முஸ்லிம்களின் மீதான கடமையாகும்.
என்னைப் பற்றி ஒரு செய்தி தெரிந்திருந்தாலும் அதைப் பிறருக்கு எத்திவையுங்கள். நீஙகள் பனூ இஸ்ரேவலர்களைப் பற்றி பேசுவது குற்றமில்லை. எவர் என் மீது வேண்டுமென்று பொய்யுரைப்பாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகில் ஆக்கிக் கொள்ளட்டும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) ஆதாரம்: புஹாரி ‘(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியை விட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.” (அந்நஹ்ல் 16: 125).
தூதர்கள் வந்தபின் அல்லாஹ்வுக்கு எதிராக மக்களுக்கு (சாதகமாக) ஆதாரம் எதுவும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, தூதர்கள் (பலரையும்) நன்மாரயங் கூறுபவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பினான்), மேலும் அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாகவும், பேரறிவாளனாகவும் இருக்கின்றான்.” (4: 165).
காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல் அஸ்ர் 103: 1-3).
மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள், (ஏனெனில்) நீங்கள் நல்லதைச்செய்ய ஏவுகிறீர்கள், தீயதை விட்டும் விலக்குகிறீர்கள், இன்னும் அல்லாஹ்வின் மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள், வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கைகொண்டோராயும் இருக்கின்றனர், எனினும் அவர்களில் பலர் (இறைக்கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.” (ஆலு இம்ரான் 3: 110).
‘(நபியே!) நீர் சொல்வீராக! “இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும், நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன், நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம், அல்லாஹ் மிகத் தூய்மையானவன், ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்.” (யூசுப் 12: 108).
‎4838. அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்
‘(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 48:8 வது) குர்ஆன் வசனத்தையே ‘தவ்ராத்’ வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:
‘நபியே! நிச்சயமாக, நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (‘முத்தவக்கில்’) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்.)
(என் தூதரான) அவர் கடின சித்தமுடையவராகவோ, முரட்டுத்தனம் கொண்டவராகவோ, கடைவீதியில் கூச்சலிட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்கமாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காணமாட்டார். மாறாக, மன்னித்துவிட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரின் உயிரைக் கைப்பற்றமாட்டான். மக்கள் ‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை’ என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.
Volume :5 Book :65
எனக்கு முன்னர் உள்ள சமுதாயங்களில் அனுப்பப்பட்ட நபிமார்களுக்கும், அவர்களது சமூகத்திலிருந்து (ஹவாரிய்யூன்கள்) தோழர்கள் இருந்தனர். அந்தத் தோழர்கள் அவரது வழிமுறைகளை பின்பற்றுவர், அவரது கட்டளையை நடைமுறைப்படுத்துவர். அவர்களுக்குப் பின் சமூகங்கள்,… அவர்களைத் தொடர்ந்து சமூகங்கள் வந்தன, அவர்கள் செய்யாதவற்றை அந்த சமூகங்கள் சொல்ல ஆரம்பித்தன, அவர்கள் சொல்லாதவற்றை செய்ய ஆரம்பித்தனர். இப்படிப்பட்டவர்களுடன் யார் தனது கரத்தால் போரிடுவாரோ அவர் முஃமினாவார், அவர்களுடன் தனது நாவால் போரிடுபவர் முஃமினாவார், அவர்களுடன் தனது உள்ளத்தால் போரிடுபவர் முஃமினாவார், இதற்குப் பின் ஈமானில் தாணிய வித்தளவவாது இல்லை” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), முஸ்லிம்).
நிச்சயமாக மார்க்கம் (இஸ்லாம்) பரதேசமான முறையில் ஆரம்பித்தது, அதே நிலையை மறுபடியும் அடையும். பரதேசிகளுக்கு சுப சோபனம் உண்டாகட்டுமாக! அவர்கள் யாரெனில் எனக்குப் பின் எனது வழிமுறைகளை விட்டும் சீர்கெட்டு இருந்தவர்களை சீராக்குபவர்கள் தான் அவர்கள்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மில்ஹா தனது தந்தை, பாட்டன் வழியாக அறிவிக்கின்றார். திர்மிதி).
அல்லாஹ்வின் மீது சத்தியமாக (அலியே!) உன் மூலம் ஒருவருக்கு நேர்வழி கிடைப்பது என்பது செவ்வகை ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள். புஹாரி).
மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். தப்பு செய்யும் போது நடுநிலையில் சிந்திக்கும் ஆற்றலை மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்துள்ளான் .மனிதனை நேரான பாதையில் பயணிக்க அழைப்புப்பணி இன்றியமையாதது.
“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதைவிட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மீது திடமாக நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3:110)
மனிதன் தப்பு பண்ணும்போது அதை தடுக்கா விட்டால் அல்லாஹ்வின் தண்டனை எல்லோரையும் பாதிக்கும் .அழைப்புப்பணி அவசியமான பணியாகும். அது மார்க்கக் கடமை மட்டுமல்ல, இம்மையில் தவறுகளின் தீங்குகளிலிருந்து நம்மையும் , மனித சமூகத்தையும் காக்கும் பணியாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப இப்பணியில் பங்கேற்க வேண்டும். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமையில் பயன் பெறலாம்
அழைப்புப்பணி நம் அனைவருக்கும் கடமையான பொறுப்பு

சனி, 26 பிப்ரவரி, 2011

சீரமைப்பின் அவசியம்


-அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தனமானது, அவனது அருளும், சாந்தியும் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழி நடந்த ஸஹாபாக்கள், தாபீயீன்கள் தபவுத்தாபியீன்கள் அனைவர் மீதும் நிலையான சாந்தியும், சமாதானமும் நிலைக்கட்டுமாக!

சீரமைப்பின் அவசியம்

முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் மார்க்கம் தொடர்பான முரண்பாடுகளை இனம் கண்டு அவற்றை காத்திரமான வழிமுறைகள் மூலம் சீரமைப்பது தகுதியும், அறிவும் உள்ள இஸ்லாமிய அழைப்பாளர்கள் மீதுள்ள கடமையாகும்.
முன்னோர்களான அறிஞர்கள் நம்மை விட அறிவிலும், ஒழுக்கத்திலும், சட்டங்களை அகழ்ந்தெடுப்பதிலும் தமது காலங்களைத் தியாகம் செய்தவர்கள், அவர்கள் தமது பொன்னான நேர காலங்களை ஏன்? எதற்காக தியாகம் செய்தார்கள், எந்த அடிப்படைகளை எட்டுவதற்காக தம்மை அற்பணித்தார்கள் போன்ற கேள்விகளை நமக்கு நாம் எழுப்பிக் கொள்வதால் மார்க்கம் தொடர்பான நமது முரண்பாடுகளுக்கும் அலட்சியமாக நாம் விட்டுவிடும் மார்க்க அமச்ங்களுக்கும் தீர்வு காண வழி பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சமூக நல்லிணகத்தையும், ஐக்கியத்தையும் காரணம் காட்டிக் கொண்டு செத்துப் போன பித்அத்துக்கள் உயிரோட்;டம் பெறுவதையும், சவக்குளிக்குள் தள்ளப்பட்ட மௌட்டீகங்கள் புத்துயிர் பெறுவதையும் சீரமைப்பு என்ற போர்வையில் அரங்கேறுவதை உண்மையான ஒரு அழைப்பாளன் அங்கீகரிக்கமாட்டான்.

وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَى مَا أَنْهَاكُمْ عَنْهُ إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ  [هود : 88]

நான் உங்களைவிட்டும் எதைத் தடுக்கின்றேனோ அதில் உங்களுக்கு மாறாக நடக்க எனக்கு விருப்பம் கிடையாது. முடியுமானவரை சீர் திருத்துவதையே நான் விரும்புகின்றேன். எனக்குரிய அருள்பாலிப்பு அல்லாஹ்வைக் கொண்டே நடந்தேறும், அவன் மீதே நான் பூரண நம்பிக்கை வதை;துள்ளேன், அவன் பக்கமே மீளுவேன் (ஹுத்: வசனம்: 88) என இறைத்தூதர்களில் ஒருவரான ஷுஐப் (அலை) அவர்கள் கூறினார்கள்.
அடிப்படை அம்சங்களில் நபிமார்கள் முரண்படவில்லை. முரண்பாடு என்பது சட்ட விவகாரங்களில்தான் ஏற்பட்டிருக்கின்றது

شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ  [الشورى : 13]

நூஹுக்கு எதனை நாம் (மார்க்கமாக) உபதேசித்தோமோ அதையும், உமக்கும், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு எதனை வஹியாக அறிவித்தோமோ அதையே உமக்கு (அல்லாஹ்) மாரக்கமாக்கியுள்ளான். (அது) நீங்கள் (அனைவரும்) மார்க்கத்தை நிலை நாட்டுங்கள், அதில் பிரிந்துவிடாதீpர்கள் (என்பதாகும்).(அஷ்ஷுரா: வசனம்: 13).
இங்கு நபிமார்கள் அனைவரும் நிலைநாட்டிய மார்க்கத்தை முஹம்மத் நபிக்கும் மார்க்கமாக்கினான் எனக் கூறப்படுவது அடிப்படையான அம்சமான (தவ்ஹீதுல் உலூஹிய்யா) சார்ந்த வணக்க அம்சங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். (பார்க்க: இப்னு கஸீர்). இதை பின்வரும் நபி மொழியின் மூலம் இன்னும் தெளிவாக அறியலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَالْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَّاتٍ أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِد (صحيح البخاري / باب قَوْلِ اللَّهِ { وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذْ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا] (مسلم / فضائل عيسى عليه السلام)

மர்யமின் ஈஸாவிற்கு இம்மையிலும், மறுமையிலும் மிகவும் அருகதையயுடையவன் (நெருக்கமானவன்)நானே! நபிமார்கள் தந்தைவழிச் சகோதரர்கள், அவர்களின் அன்னையர் வௌ;வேறானவர்கள், அவர்களின் தீன் -மார்க்கம்- ஒன்றாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இந்தச் செய்தியின் அடிப்படையில் நபிமார்கள் போதித்த அடிப்படை அம்சமான அத்தவ்ஹீத் எனப்படும் ஓரிறைக் கோட்பாட்டின் நபிமார்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒன்று என்பதையும், சட்டம் சார்ந்தவைகளில் வேறுபாடுகளும், வேற்றுமைகளும் காணப்பட்டுள்;ளன என்ற உண்மையினையும் புரிந்து கொள்ளலாம்.

கருத்து முரண்பாடுகள் காலத்தால் அழியாதவை

இதைக் காரணமாகக் கூறிக் கொண்டு முரண்பாடற்ற கருத்துக்களை முரண்பாடுள்ளவைகள் எனக் கூறி சமூகத்தில் மார்க்கமாக அங்கீகரிக்கலாமா? அதை அறிவார்ந்த வாதமாகக் கொள்ளலாமா என்று அறிஞர் பெருமக்கள் சிந்திக்க வேண்டும். இதைக் காரணம் காட்டி மார்க்க அங்கீகாரமற்ற எத்தைனையோ விடயங்கள் மார்க்கமாகிவிட்டன, எத்தனை நவீன அனுஷ்டானங்கள் தொடர் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன என்று சிந்திக்க வேண்டும்.

وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ

நீங்கள் எந்த ஒரு விஷயத்தில் முரண்பட்டாலும் அதற்கான தீர்வு அல்லாஹ்விடம் உண்டு (அஷ்ஷுரா. வச: 10.) என்ற வசனத்தின் அடிப்படையில் சிந்தித்தால் அந்த விதி முரண்பாடாகத் தெரியவில்லையா?

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ  إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ

உமது இரட்சகன் அருள் செய்;தவர்களைத் தவிர (ஏனைய) அனைவர்களும் தமக்குள் முரண்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ( ஹுத் : வசனம்:118,119). என்ற வசனம் முரண்பாடு அல்லாஹ்வின் அருளை இல்லாதொழிக்கும் சக்தியுடையது என்பதை அறிய வேண்டும்.

மலக்குமார்களே கருத்து முரண்பட்டுக் கொண்டனர் ???

நூறு கொலை செய்த மனிதனின் உயிரைக் கைப்பற்ற வந்த வானவர்களே தமக்குள் கருத்து முரண்பட்டுக் கொண்டனர் என ஒரு ஷேக் கூறி குசியாக்கினாராம் சபையை. இவ்வாறு கூறுவதால் அ மலக்குகள் தமக்குள் முரண்பட்டுக் கொண்டனர் என்று முடிவுமில்லை, அவர்களின் முரண்பாட்டிற்கு தீர்வு இல்லாதிருந்தது என்ற அர்த்தமும் இல்லை.
மாற்றமாக, யார் இவ்வாறு கூறுகின்றார்களோ அவர்களே தொடர்ந்தும் முரண்பாட்டை விரும்புகின்றனர், தீர்வை விரும்பவில்லை என்பது அர்த்தமாகும். மலக்குகளின் முரண்பாட்டிற்கு அதில் தீர்வு எட்டப்பட்டது போல முரண்பாடானவற்றிற்கு தீர்வுகள் எட்டப்படும் என்பதை அவர் அறிந்து கொண்டே இவ்வாறு சொதப்பி இருக்கின்றார்.
இது இவரினதும், இவர் போன்ற பலரதும் பழக்கமும், இயல்பும். அதை நம்மால் மாற்ற முடியாது. இவரே ஒன்றும், ஒன்றும் இரண்டு என்றும் கூறலாம், ஒன்றும் ஒன்றும் பதின் ஒன்று கூறலாம் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் கூறி இருந்தார். இது கணக்குப் பாடத்திற்கு வேண்டுமானால் சரிவரலாம், மார்க்க விவகாரங்களில் உள்ள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஒருக்காலும் உதவாது. இவர்தான் நபி (ஸல்) அவர்கள் டைலரின் சொல்லிக் கொடுக்கவா வந்தார்கள் என ஏழளமாகக் கேள்வியும் கேட்டாராம் அவரது உரை ஒன்றில்.

முரண்பாடுகளின் தன்மைகள்

முரண்பாடுகள் கொள்ள முடியாத அம்சங்கள்
(அல்லாஹ், மறுமை, சுவர்க்கம், நரகம், ஷீஆ, சன்னி போன்ற அகீதா சார்ந்த அம்சங்கள். சுபஹ் குனூத், கூட்டு துஆ, கத்தம், பாத்திஹா. ஆடையை கரண்டைக்குக் கீழால் தொங்கவிடுதல் போன்ற ஊர்ஜிதம் செய்யப்பட்ட வழிமுறைகள்)
முரண்பாடுகள் கொள்ள முடியுமான அம்சங்கள்
(பிறை விவகாரம், உறுப்புக்களைத் தானமாக வழங்குதல், இரத்ததானம், தாடியின் அளவு போன்ற அம்சங்கள்).

முரண்பாடுகள் வரவேற்கப்பட்டதா?

பொதுவாக முரண்பாடுகள் வரவேற்கத்தக்கதன்று, மாத்திரமின்றி மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட அம்சங்களில் முக்கியமானதாகும். தொழுகையில் வரிசையில் நிற்போர் சீராக நிற்க வேண்டும் எனக் கட்டளையிடும் நபி (ஸல்) அவர்கள்

عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ (صحيح مسلم / 654 ترقيم المكتبة الشاملة/  صحيح مسلم / بَاب تَسْوِيَةِ الصُّفُوفِ وَإِقَامَتِهَا وَفَضْلِ الْأَوَّلِ فَالْأَوَّلِ مِنْهَا وَالِازْدِحَامِ عَلَى الصَّفِّ الْأَوَّلِ وَالْمُسَابَقَةِ إِلَيْهَا وَتَقْدِيمِ أُولِي الْفَضْلِ وَتَقْرِيبِهِمْ مِنْ الْإِمَامِ )

‘தொழுகையில் எங்களது தோழப்புயங்;;களைத் தடவியவர்களாக நீங்கள் சரியாக நின்று கொள்ளுங்கள், முரண்பட்டுக் கொள்ளாதீர்கள், அதனால் உங்கள் இதங்களும் முரண்பட்டுக் கொள்ளும் எனக் கூறுவார்கள். (முஸ்லிம்) இங்கு முரண்பாடு என்பது வரிசையில் சீரற்று நிற்பதையும், இமாம் செய்வதற்கு மாற்றமாக செய்வதையும் கூறப்படும். இருந்தும் அதில் கூட முரண்பாடு விரும்பத்தக்கதல்ல என்பதே அந்தக் கூற்றின் உள்ளர்த்தமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ (صحيح البخاري / الاقتداء بسنن رسول الله  / 6744 ترقيم الشاملة)

நான் உங்களை விட்;ட வழியில் என்னை விட்டுவிடுங்கள். (பின்பற்றுங்கள்), உங்களுக்கு முன்பு வாழ்ந்தோர் தமது நபிமார்கள் மீது கருத்து முரண்பாடு கொண்டதும், அவர்களிடம் அதிகப்படியான கேள்விகள் கேட்டதும்தான் அவர்களை அழிவுக்கு இட்டுச் சென்றது, நான் ஒன்றை விட்டும் உங்களைத் தடுத்தால் அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள், ஏதாவது ஒரு கட்டiயையைக் கொண்டு ஏவினால் முடியுமானவரை அதில் இருந்து பின்பற்றுங்கள் (புகாரி). என்று அல்லாஹ்வின் தூதர் எச்சரிக்கின்றார்கள் என்றால் முரண்பட்டுக் கொள்வது சரிதானா என்ற கேள்வி நியாயமற்றதல்லவே!

இப்படி ஒரு ஆதாரம்

((اختلاف أمتي رحمة)). موضوع. “الأسرار المرفوعة” (506) . “تنزيه الشريعة” (2/402) . وقال الألباني: لا أصل له. “الضعيفة” (11) .( يراجع كتاب : مائة حديث مشهورة على ألسنة الخطباء )

எனது சமுதாயத்தவர் கருத்து முரண்பாடு கொள்வது அருளாகும் என்று நபியின் மீது கூறப்படும் பொய்யான செய்தியை வைத்துக் கொண்டு முரண்பாடுகளுக்கு தீர்வை விரும்பாதவர்களால் ஷிர்க்குகளும், பித்அத்துக்களும் நியாயப்படுத்தப்பட்டு இப்போதும் பார்க்கின்றோம். நபியின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்டதை அமுதவாக்காகக் கொண்டு செயல்படும் இது போன்ற நடைமுறைகளும் கருத்து முரண்பாடுகள் வளரக் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.

மற்றொரு ஆதாரம்

ஹாரூன் (அலை) அவர்களின் பிரச்சாரம் பற்றி அல்அஃராஃப் அத்தியாயம் 142 வது வசனம் முதல் 156 வது வசனம் வரை இடம் பெறுகின்றது. அவற்றில் காளைமாட்டை வணங்குவதை எச்சரித்து ஹாரூன் நபி (அலை) அவர்கள் தெளிவாக பிரச்சாரம் செய்தார்கள் என்பதைப் பார்க்கின்றோம்.
தாஹா அத்தியாம் 86 முதல் 98 வரையுள்ள வசனங்களில் காளைமாட்டை வணங்குவதை அல்லாஹ் விரும்பாத செயல் என்பதை எச்சரித்து மூஸா நபி பிரச்சாரம் செய்ததை இன்னும் தெளிவாகக் காணலாம்.
அந்த சரித்தரின் தொடரில் ‘எனது பேச்சை நீ கவனிக்காமல் பனூஇஸ்ரவேலர்கள் மத்தியில் பிரவினையைத் தோற்றுவித்தாய்’ என்று ஒரு இடத்தில் வரும் வசனத்தைத் தலை கீழாகப் புரிந்து ஹாரூன் நபி சமூக ஐக்கியத்தை நிலைநாட்டிட சிலை வழிபாட்டை அங்கீகரித்ததாக விளக்குகின்றனர்.
அல்குர்ஆனில் இக்திலாஃப் என்ற சொற்றொடரை ஆய்வு செய்தால் நபித்துவப் பிரச்சாரத்தின் பின்பே அப்போதய மக்கள் தமக்குள் முரண்பட்டுக் கொண்டனர் என்பதையும், நபித்துவத்தை நிராகரித்தனர் என்பதையும் அந்தச் சொல் அதிகம் விளக்குகின்றது.
குர்ஆன் பற்றிய இந்த அறியாமை மூலம் தமது கொள்கைகளை காய் நகர்த்த முணைவது எவ்வளவு பெருமம் அநீதி என்று என்று சிந்தியுங்கள், எப்போதுதான் இவர்கள் சத்தியத்தைச் சரியாகப் புரிவார்களோ தெரியவில்லை. பட்டதாரி சேக்குகளை உருவாக்கும் கலா நிலையத்தின் பிரதிப்பணிப்பாளராக இருப்பவர் கூட இதில் மூக்கை நுழைத்திருந்தாராம்.
உலகில் ஐக்கியத்தை நிலைநாட்டுவதில் பாரிய இடை வெளியினை இஸ்லாமியக் கொள்கைகள் தொற்றுவிப்பதாக கூச்சலிடும் ஐரோப்பியர்களும், யூதர்களும் அதன் பின்னணியின் இருப்பதாக கொக்கரிகின்றனர். அது தீக்கரையாக்கப்பட வேண்டும் என்றும் கோஷமிடுகின்றனர், குரல் கொடுக்கின்றனர் என்பது ஆச்சரியமான ஒன்றல்ல. மாற்றமாக, சமுதாய ஐக்கியத்தில் அகீதா பாரிய குந்தகத்தை ஏற்படுத்துகின்றது என்று ஐக்கியப் பிரியர்களும், கமால் அதாதுர்கின் அடிவருடிகளும் தூர நோக்கு தாயிக்களும் சொல்வதுதான் ஆச்சரியம்.

கருத்து முரண்பாடுகளைக் கழைய காத்திரமான வழிமுறைகள் வேண்டும்

மார்க்கத்தில் முரண்பாடு தோற்றுவதற்கான அணுகூலங்கள் இருக்கவே செய்கின்றன. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனை ஓதும் முறையில் இரு ஸஹாபாக்கள் மத்தியில் முரண்பாடு தோன்றியது. ஒருவர் ஓதியமுறைக்கு மாற்றமாக மற்றவர் ஓதினார், தான் ஓதிய முறையே சரியானது என இருவரும் பிடிவாதமாக வாதிட்டுக் கொண்டனர், மாத்திரமின்றி அது ஒரு சர்ச்சையாகவும் காட்சியளித்தது, அதற்கான தீர்வை அல்லாஹ்வின் தூதரிடம் வேண்டிய போது:

عن عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو قَالَ هَجَّرْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قَالَ فَسَمِعَ أَصْوَاتَ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ فَقَالَ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِاخْتِلَافِهِمْ فِي الْكِتَابِ  صحيح مسلم / باب النهي عن اتباع متشابه القرآن / 4818 ترقيم الشاملة)

நபி (ஸல்) அவர்களிடம் நான் ஒரு நாள் காலையில் சென்றிருந்தேன், இரு மனிதர்கள் ஒரு ஆயத்தில் முரண்பட்டுக் கொண்டதை செவியேற்ற நபி (ஸல்) அவர்களின் முகத்தில் வெறுப்பால் கோபம் பொங்கியது. உங்களுக்கு முன்பிருந்தோர் அல்லாஹ்வின் வேதத்தில் முரண்பட்டே அழிந்து கொண்டார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
குர்ஆனை விளங்குவதில் முரண்பட்ட விளக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுக் கொண்டாலும், அதுவும் விரும்பத்தக்க ஒன்றல்ல.

عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ صحيح البخاري /باب كراهية الخلاف / 6816 ترقيم المكتبة الشاملة)  صحيح بخاري / بَاب اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ

உங்கள் இதயங்கள் ஒன்றுபடும் அம்சங்களில் குர்ஆனை ஓதுங்கள், நீங்கள் (அதை ஓதுகின்ற போது) முரண்பட்டுக் கொண்டால் அதை விட்டு விலகிக் கொள்ளுங்கள். (புகாரி – 6816) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனை ஓதும் முறை இரண்டு விதமாக இருப்பதுண்டு, அதில் கூட முரண்பாடு ஏற்படுகின்ற போது உடன்பாடனது என முடிவு செய்யப்பட்ட முறையில் ஒன்றுபடுவதையும், முரண்படுகின்ற போது அதிலிருந்து விலகிக் கொள்வதையும் இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

மூன்றாம் கலீபாவிற்கு ஹுஸைஃபா (ரழி) அவர்களின் அறிவுரை

அல்குர்ஆனை ஒரே ஓசையின் அமைப்பில் முதலாவது தொகுத்துவர் என்ற பெயர் மூன்றாம் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் அவர்களுக்குண்டு. அவர்களின் ஆட்சியில் ஈராக்கின் கவர்ணராக இருந்து அர்மீனியா, அஸர்பைஜான் போன்ற பிரதேசங்களை வெற்றி கொள்வதற்காக ஈராக் மக்களை இணைத்து ஷாம் வாசிகளுக்கு எதிராக ஹஸுஸைஃபா இப்னில் யமான் (ரழி) அவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் குர்ஆனை ஓதும் முறையில் தமக்குள் குழம்பிக் கொள்வது ஹுஸைஃபா (ரழி) அவர்ளைத் திகில் கொள்ளச் செய்தது. கலீஃபா அவர்களுக்கு பின்வருமாறு அறிவுரை அனுப்பினார்கள்.

فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الْأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلَافَ الْيَهُودِ وَالنَّصَارَى (صحيح البخاري)

அமீருல் முஃமினீன் அவர்களே! யூத, கிரிஸ்தவர்கள் (தமது) வேதத்தில் முரண்பட்டுக் கொண்டதைப் போல் இவர்கள் முரண்பட்டுக் கொள்வதற்கு முன்னதாகவே இந்த உம்மத்தை நீர் அடைந்து கொள்ளும்’ (புகாரி).
அல்குர்ஆன் எளிமைக்காக ஊழு முறைகளில் அருளப்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). இந்த ஏழு முறைகளையும் உள்ளடக்கி அமைப்பிலேயே இரண்டு கலீபாக்களின் காலம் வரையும் மக்கள் ஓதி வந்தனர். அரபுக்கள் அல்லாதவர்கள் இஸ்லாத்தில் இணைந்த போது ஓதும் முறைகளை அறியாதரவர்களாக இருந்தார்கள், குர்ஆனை அவர்கள் ஓதுவதில் பல பிரச்சினகைளை எதிர் நோக்கினார்கள். இது அவர்கள் மத்தியில் காலப்போக்கில் பாரிய பிளவை ஏற்படுத்தும் என தளபதி ஹுஸைபா அவர்கள் அஞ்சியதால் அனுமதிக்கப்பட்டிருந்த பல முறைகளில் ஒரு முறையிளன் மீது மக்களைப் பழக்கும்படி கலீஃபா அவர்களைப் பணித்தார்கள். முரண்பாடுகளின் போது எட்டப்பட முடியுமான வழிழமுறைகள் மூலம் முரண்பாடுகளை தாயிக்களும் அணுக வேண்டிய தேவை இருக்கின்றது.

கலந்தாலோசனை செய்தல்

கருத்து முரண்பாடுகளைக் கழைய இதுவும் முக்கியமானதொரு வழியாகும். இதை இரண்டாவது கலீபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் கடைப்பிடித்தார்கள். சிரியாவில் தாவூன் என்ற பிளேக்கை ஒத்த கொடிய நோய் பரவியது. அவர்கள் ஸரஹ் என்ற இடத்தை அடைந்த போது அங்கு நோய் ஏற்பட்டது தெரிய வந்தது. பயணத்தைத் தொடர்வதா? இல்லையா என்ற நிலையில் ஆரம்ப முஹாஜிரீன்களை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார்கள், அவர்கள் முரண்பட்ட கருத்தைத் தெரிவித்தனர், அன்ஸாரிகளை அழைத்து ஆலோசனை செய்தார்கள், அவர்களும் முஹாஜிர்களைப் போன்று நடந்து கொண்டனர், அவர்களது கருத்தையும் உதாசீனப்படுத்தி விட்டு குரைஷியர்களில் தலைவர்களாக உள்ள மக்கா வெற்றிக்கு முன்னர் ஹிஜ்ரத் செய்து வந்தோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள், அவர்களில் இருவர் வேறுவிதாமான கருத்தைக் கூறி இருந்தனர், இறுதியில் கலீபா அவர்கள் மக்களிடம் நாளை மதீனா திரும்பப் போவதாக அறிவித்தார்கள். படைகளின் தளபதியாக அபூ உiதா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் கத்ரில் இருந்தா வெருண்டோடுகின்றீர் எனக் கேட்டதற்காக கோபத்தை கொப்பளித்தவர்களாக , ஆத்திரமாகப் பதிலளித்த கலீபா அவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் அப்;துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் தன்னிடம் அது பற்றிய அறிவு ஞானம் இருப்பபதாகக் கூறி இவ்வாறான நோய் ஏற்பட்ட பிரதேசத்தில் வெளியில் இருப்போர் உள்ளே நுழைவதையும், உள்ளே இருப்பவர் அங்கிருந்து வெளியேறுவதையும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விரும்பவில்லை என்ற செய்தியை எடுத்துரைத்தார்கள்;. இதைக் கேட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்த கலீபா உமர் (ரழி) அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள் (புகாரி 5188- ஷாமிலா நூலகம்).
நேரடியான சான்றுகள் இல்லாதபோதே கருத்துக் குழப்பங்கங்கள் எழ வாய்ப்புண்டு. அதனைக் கலந்தாசோனை செய்கின்ற போது நேரடியான சான்றுகள் இன்றி கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால் சான்றுகள் தெளிவாகக் கிடைத்த பின்பும் அதன் பக்கம் உடனே திரும்பி விடவேண்டும் என்பதை இந்த வரலாறு போதிக்கின்றது.

ஆதாரத்துடன் அமைந்த இரு கருத்துக்களை முகமலர்வுடன் ஏற்றுக் கொள்ளுதல்

இரு கருத்துக்களுக்கு இடம்பாடான விஷயங்கள் ஆதாரபூர்வமான செய்திகளில் வந்த பின்னர், அவற்றில் இரண்டையும் செய்யலாம் என்ற கொள்கைக்கும், மனப்பக்குவத்திற்கு அழைப்பாளராக இருப்பவர் முதலில் முன்வர வேண்டும். இது தாயிக்களிடம் இல்லாத பண்பாக இருப்பதால்தான் கருத்துக்களில் விரிசல்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.
ஒரு வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காண்பித்த முறைக்கு மாற்றமாக ஒரு மனிதர் ஓதுவதை நான் செவியுற்றேன், அவரை உடனே நபி அவர்களிடம் அழைத்துக் கொண்டு வந்து, விபரத்தைக் கூறிய போது, அவர்களின் முகத்தில் வெறுப்புத் தென்பட்டது,

وَقَالَ كِلَاكُمَا مُحْسِنٌ وَلَا تَخْتَلِفُوا فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ اخْتَلَفُوا فَهَلَكُوا (صحيح البخاري)

நீங்கள் இருவரும் ஓதியது சரிதான் எனக் கூறிவிட்டு, நீங்கள் முரண்பட்டுக் கொள்ளாதீர்கள், உங்களுக்கு முன்பிருந்தோர் முரண்பட்டுக் கொண்டதால்தான் அழிந்து போனார்கள் என எச்சரித்தார்கள். (புகாரி)

முஸ்லிம் உம்மத்தில் அறிமுகற்ற சட்டத்தைக் கூறுவோரை சமூகத்தை விட்டும் விலக்குதல்

மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சியில் அபுதர் அல்கிஃபாரி (ரழி) அவர்கள் தங்க நகை சேமித்து
ஸைத் பின் வஹ்ப் என்பவர் கூறுகின்றார்கள்: நான் ரப்ஸா என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன், அங்கு அபூ தர்அல்கிஃபாரி (ரழி) அவர்களைக் கண்டேன், அவர்களிடம், நீர் இங்கு இடத்தில் (தனிமையில்) தங்கி இருப்பதற்கான காரணம் என்ன எனக் கேட்டேன், அவர்கள், நான் ஷாமில் இருக்கின்ற போது நானும், முஆவியா அவர்களும் ‘ எவர்கள் தங்கம், மற்றும் வெள்ளியை சேமித்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவில்லையோ என்ற வசனத்தில் முரண்பட்டுக் கொண்டோம். முஆவியா அவர்கள் ( நீர் கூறுவது போன்றல்ல), இது வேதக்காரர்கள் மீது இறங்கிய வசனமாகும் என்றதும், இல்லை. நம்பேரில்தான் இறங்கியது என்றேன். இதனால் அவருக்கும் எனக்கும் இடையில் இது விஷயமாக (சர்ச்சை) இருந்து வந்தது. என்னைப் முறைப்பாடு செய்து உஸ்மான் (ரழி) அவர்களுக்கு கடிதம் அனுப்பினார்கள், என்னை மதீனா வரும்படி உஸ்மான் (ரழி) அவர்கள் பணித்தார்கள், மக்கள் என்னை இதற்கு முன்னால் காணதாவர்கள் போல என்னிடம் மக்கள் அதிகமாக வந்தார்கள், உஸ்மான் அவர்களிடம் எனது கருத்தைக் கூறினேன், என்னிடம் உஸ்மர்ன அவர்கள்,

فَقَالَ لِي إِنْ شِئْتَ تَنَحَّيْتَ فَكُنْتَ قَرِيبًا فَذَاكَ الَّذِي أَنْزَلَنِي هَذَا الْمَنْزِلَ وَلَوْ أَمَّرُوا عَلَيَّ حَبَشِيًّا لَسَمِعْتُ وَأَطَعْتُ

‘நீ விரும்பினால் ஒதுங்கி, கொஞ்சம் தூரத்தில் இருந்து கொள்ளலாம் என்றார்கள். அதற்காவே நான் இங்கு வசித்து வருகின்றேன், ஹபஷி ஒருவரைத்தான் எனக்கு தலைவராக நியமித்தாலும் நானும் கேட்டு, வழிப்பட்டு நடப்பேன் எனக் கூறினார்கள். (புகாரி).
தங்கம், வெள்ளியை யாரும் சேமித்துக் கொள்ளக் கூடாது, அவ்வாறு சேமித்து வைப்பதால் அவர்கள் அல்லாஹ் எச்சரிக்கின்ற தண்டனையைப் பெறுவார்கள் என தலைகீழாக விளங்கிய அபூதர் (ரழி) அவர்களின் கருத்து முஸ்லிம் உம்மத்திற்கு அன்னியமான, அறிமுகமற்ற கருத்து என்பதாலும், ஸஹாபாக்கள் மத்தியில் அவ்வாறானதொரு கருத்து சரியான கருத்தில்லை என்பதாலும் இவருக்குப் பின்னால் மக்கள் செல்வதைத் தடுப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை அவசியமாகின்றது. இதை இன்றைய தவ்ஹீத் வட்டம் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
காஃப் அத்தியாயம் ஓதாவிட்டால் ஜும்ஆக் கூடாது, மூன்று மிம்பர் படிகள் பித்அத், வழையலாகத் தயாரிக்கப்பட்ட தங்க நகைகள் பெண்கள் அணிவது ஹராம், திடலில் தொழுகின்ற போது ஸஃப் வரிசையை அடையாளப்படுத்துவதற்காக கட்;டப்படும் கயிர்கள் பித்அத் போன்ற பைத்தியங்கள் சமுதாயத்தில் உலா வருகின்றது.
இவ்வாறான ஆதாரமற்ற, சமூகத்தில் அறிமுகமற்ற கருத்துக்களால் நவீன முஃப்திகளால் கிளப்பப்படும் புரளிகளுக்கு குர்ஆன், ஹதீஸ் பேசுகின்ற மக்கள் இரையாகின்றனர், துண்டாடப்படுகின்றனர். இதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை போன்று குர்ஆன், நுன்னா பேசுவோர் முடிவெடுக்காத வரை தொடரவே செய்யும்.

நஸ்ஸுடன் நின்று செயல்படல்

நஸ் என்ற நேரடியான சான்று கிடைக்காத போது அறிஞர்கள் இஜ்திஹாதின் அடிப்படையிலான முடிவை முன்வைக்க மார்க்கம் அனுமதிக்கின்றது. சிலவேளை அதில் அவர் தவறிழைத்தாலும் பூதாகரமாக்க முடியாது.

عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ صحيح مسلم  3240

அறிஞர் ஒருவர் சட்டத்தீர்ப்பில் இஜ்திஹாத் செய்து தீர்ப்பளிக்கின்றார், சரியாகவும் அதை அணுகுகின்றார் என்றால் அவருக்கு இரு கூலிகள் அவருக்குண்டு. அதேவேளை, இஜ்திஹாத் செய்வதால் ஏற்படும் தீர்ப்பில் தவறிழைப்பாராயின் அவருக்கு ஒரு கூலி உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்). ஆனால் நேரடியாக சான்றாகிய குர்ஆனில் தெளிவாக வந்திருப்பதை திரித்துக் கூறவதை, அதில் இருந்து விலகுவதை ஆலிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَرْضَى لَكُمْ ثَلَاثًا وَيَكْرَهُ لَكُمْ ثَلَاثًا فَيَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَيَكْرَهُ لَكُمْ قِيلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةِ الْمَالِ  (صحيح مسلم / باب :  الشاملة3236 ترقيم / القضاء باليمين، والشاهد)

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று அம்சங்களைப் பொருந்திக் கொள்கின்றான், மற்றும் மூன்று அம்சங்களை உங்களுக்கு வெறுக்கின்றான், நீங்கள் அவனுக்கு எந்த ஒன்றையும் கொண்டு இணைகற்பிக்காது, அவனை வணங்க வேண்டும், அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) நீங்கள் பற்றிக் கொள்ள வேண்டும், பிரிந்து விடக்கூடாது ஆகியவற்றை உங்களுக்கு அவன் பொருந்திக் கொள்கின்றான், சொல்லப்பட்டது- கூறப்பட்டது, அதிகமதிகமதிகம் (அவசியமற்ற) கேள்விகள் கேட்பது, பொருட்களை வீண்விரயம் செய்வது ஆகியவற்றை உங்களுக்கு அவன் வெறுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ قَالَ أَتَى ابْنُ مَسْعُودٍ فِي رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً فَمَاتَ عَنْهَا وَلَمْ يَفْرِضْ لَهَا وَلَمْ يَدْخُلْ بِهَا فَسُئِلَ عَنْهَا شَهْرًا فَلَمْ يَقُلْ فِيهَا شَيْئًا ثُمَّ سَأَلُوهُ فَقَالَ أَقُولُ فِيهَا بِرَأْيِي فَإِنْ يَكُ خَطَأً فَمِنِّي وَمِنْ الشَّيْطَانِ وَإِنْ يَكُ صَوَابًا فَمِنْ اللَّهِ لَهَا صَدَقَةُ إِحْدَى نِسَائِهَا وَلَهَا الْمِيرَاثُ وَعَلَيْهَا الْعِدَّةُ فَقَامَ رَجُلٌ مِنْ أَشْجَعَ فَقَالَ أَشْهَدُ لَقَضَيْتَ فِيهَا بِقَضَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بِرْوَعَ ابْنَةِ وَاشِقٍ قَالَ فَقَالَ هَلُمَّ شَاهِدَاكَ فَشَهِدَ لَهُ الْجَرَّاحُ وَأَبُو سِنَانٍ رَجُلَانِ مِنْ أَشْجَعَ مسند أحمد17732 -

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் திருமணமாகி மஹரை நிர்யமும் செய்யாது, மனைவியுடன் இல்லத்திலும் ஈடுபாடாது மரணித்தவரின் மனைவி பற்றி வினவப்பட்ட போது ஒரு மாத காலம் அது பற்றி எதுவும் கூறாதிருந்தார்கள். பின்பு அவர்களிடம் (அது பற்றி) கேட்ட போது எனது கருத்தினைக் கூறுகின்றேன், அது தவறாக இருப்பின் என்னாலும் (திறமைக்குறைவால்), ஷெதானின் மூலம் ஏற்பட்டதாகும். அது சரியானதாக இருக்குமானால் (அது) அல்லாஹ்விடம் இருந்துமுள்ளதாகும் எனக் கூறிவிட்டு .அந்தப் பெண்ணுக்கு அவளது சகோதரிகளின் மஹர் போன்று கொடுக்கப்படவேண்டும், அவளுக்கு மீராஸ் சொத்தில் பங்குண்டு, அவள் இத்தாவிலும் இருக்க வேண்டும் எனக் கூறினார்கள். உடனே அஷ்ஜஃ கோத்திரித்தைச் சேர்ந்த ஒரு மனிதர் எழுந்து, வாஷிக் என்பவரின் மகள் பர்வஃ என்பவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தீர்ப்பளித்தது போன்றதொரு தீர்ப்பையே நீங்கள் தீர்ப்பாக முன்வைத்துள்ளீர்கள் என்றார். அதற்;கு இரு சாட்சிகளை வேண்டினார்கள், அதற்கு ஜர்ராஹ், அபூஸினான் என்ற இருவர் சாட்சியம் கூறினார்கள். (அஹ்மத்) இது அபூதாவூத், திர்மிதி போன்ற கிரந்தங்களிலும் பதிவாகி இருக்கின்றது.