ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

தமிழில் டைப் செய்ய

Kandupidi

தொழுகை முறை


நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)

தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)

(முஹம்மதே!) வேதத்தி­ருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)

இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்­மான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி­) நூல் : முஸ்­லிம்

நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி­) நூல்: நஸயீ

என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மா­க் பின் ஹுவைரிஸ் (ர­லி) நூல் : புகாரீ

இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.

கஅபாவை முன்னோக்குதல்

தொழுபவர் எந்தத் திசையை நோக்கியும் தொழக் கூடாது. மக்கா நகரில் உள்ள கஅபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். கஅபா ஆலயம் தமிழத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன.

நிய்யத் (எண்ணம்)

''அமல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உமர் பின் கத்தாப் (ரலி) நூல்கள் : புகாரி (1),

நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை. மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும். நான் இப்போது தொழப் போகின்றேன் என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. அவ்வாறு மொழிவது பித்அத் ஆகும். இது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழி காட்டியிருப்பார்கள்.

தக்பீர் தஹ்ரீமா

தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முத­ல் அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும். இதற்கு தக்பீர் தஹ்ரீமா (தொழுகைக்கு வெளியே நடைபெறும் காரியங்களைத் தடை செய்வதற்குரிய தக்பீர்) என்று கூறப்படும்.

இரு கைகளை உயர்த்துதல்

அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரையில் அல்லது காதின் கீழ்ப் பகுதி வரையிலும் உயர்த்த வேண்டும். அப்போது இரு கைகளையும் மடக்காமல் நீட்டிய வண்ணம் வைத்திருக்க வேண்டும். கைகளால் தோள்களையோ, காதுகளையோ தொடக்கூடாது. அதற்கு நேராகத்தான் இருக்க வேண்டும்.

(சரியான முறை)                                  (சரியான முறை)

கைகளை நெஞ்சின் மீது வைத்தல்

கைகளை உயர்த்தி வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும். (வலது கையை இடது கையின் மீது வைக்கலாம் அல்லது பிடிப்பதைப் போல் வைத்துக் கொள்ளலாம்.)
 
 கையைத் தொப்புளுக்குக் கீழ் வைப்பதோ, அல்லது வயிற்றில் வைப்பதோ, அல்லது நெஞ்சின் இடது புறம் வைப்பதோ கூடாது.

இரு கால்களுக்கிடையில் உள்ள இடைவெளி

இரு கால்களையும் மிகவும் விரித்து வைப்பதும் கூடாது. மிகவும் சேர்த்து வைப்பதும் கூடாது. அவரவர் உடல் அமைப்புக்கு தகுந்தவாறு நடுநிலையான முறையில் இரண்டு கால்களையும் வைக்க வேண்டும்.

       (தவறு)                      (தவறு)           (சரியான முறை)

பார்வை எங்கு இருக்க வேண்டும்?

தொழும் போது பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. முன்னால் உள்ளவர்களைப் பார்த்தால் எந்தக் குற்றமும் கிடையாது.

தொழுகையின் ஆரம்ப துஆ

கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும்.

''அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிகி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்"

ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க தபாரகஸ்முக்க வத.. என்று துவங்கும் ஸனாவை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்மான செய்திகள் இல்லை.

சூரத்துல் பாத்திஹா ஓதுதல்

தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் சூரத்துல் பாத்திஹா ஓத வேண்டும்.

''சூரத்துல் ஃபாத்திஹா ஓதாதவருக்குத் தொழுகையில்லை'' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர் : உபாதா (ர­லி), நூல்கள் : புகாரீ (756),

இமாமைப் பின்பற்றித் தொழுபவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டுமா?

ஜமாஅத்தாகத் தொழும் போது இமாம் சப்தமிட்டு ஓதும் ரக்அத்துகளில் இமாமைப் பின்பற்றித் தொழுபவர் மவுனமாக இமாமின் ஓதுதலைக் கேட்க வேண்டும். சப்தமில்லாமல் ஓதும் ரக்அத்களில் பின்பற்றித் தொழுபவரும் ஓத வேண்டும்.

ஆமீன் கூறுதல்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் ''ஆமீன்'' கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும்.

துணை சூராக்கள்

சூரத்துல் பாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த முழு அத்தியாயத்தையோ, அல்லது சில வசனங்களையோ ஓத வேண்டும்.

முதல் இரண்டு ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹாவும் துணை சூராவும் நபி (ஸல்) அவர்கள் ஓதியுள்ளார்கள். பிந்திய ரக்அத்களில் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதியுள்ளார்கள். சில சமயங்களில் துணை சூராவும் சேர்த்து ஓதியுள்ளார்கள்.

ருகூவு செய்தல்

நிலையில் சூரத்துல் பாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப் பகுதி வரை, அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய வேண்டும்.

ருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் மூட்டின் மீது வைப்பதாகும். அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலையையும், முதுகையும் சமமாக வைக்க வேண்டும். தலையைத் தாழ்த்தியோ உயர்த்தியோ இருக்கக் கூடாது.

   (பிடித்தல்)  (சரியான முறை)      (தவறான முறை)

ருகூவிலும், ஸஜ்தாவிலும் எவர் தமது முதுகை (வளைவின்றி) நேராக நிறுத்தவில்லையோ அவரது தொழுகை செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமஸ்வூத் அல்அன்சாரீ (ரலி­), நூல் : திர்மிதீ (245),

''திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, ''அல்லாஹ்வின் தூதரே! தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்?'' என நபித்தோழர்கள் கேட்டனர். ''தனது ருகூவையும் சுஜூதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி­) நூல்: அஹ்மத் (11106)

ருகூவில் ஓதவேண்டியவை

பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக்கூடாது.

சுப்ஹான ரப்பியல் அழீம் (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) மூன்று தடவை கூற வேண்டும்.

ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மக்ஃபிர்­ (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)

ஸுப்பூஹுன் குத்தூஸுன் ரப்புல் மலாயிகதி வர்ரூஹ் (வானவர்களுக்கும், ரூஹ்(ஜிப்ரீலுக்கும்) இறைவன் பரிசுத்தமானவன்; தூய்மையானவன்)

ருகூவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பி அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் இந்த துஆக்களை அதிகமாகவே ஓதியுள்ளார்கள்.

ருகூவி­ருந்து எழும் போது

ருகூவி­ருந்து எழும் போது ஸமிஅல்லாஹு ­மன் ஹமிதா (புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்) என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்திக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து (எங்கள் இறைவனே! உனக்கே புகழனைத்தும்) என்று கூற வேண்டும். அல்லது ரப்பனா லக்கல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபார(க்)கன் ஃபீஹீ என்ற துஆவையும் ஓதலாம்.

ஸமிஅல்லாஹு ­மன் ஹமிதா எனும் போது புறங்கைகள் மேல் நோக்கியவாறுதான் உயர்த்த வேண்டும். உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு உயர்த்துவது கூடாது.

 (சரியான முறை)               (தவறான முறை)
ருகூவுக்குப் பின்னர் கைகளைக் கட்டலாமா?

சிலர் ருகூவுக்குப் பின்னர் எழுந்தவுடன் மீண்டும் கைகளைக் கட்டிக் கொண்டு பின்னர் ஸஜ்தாச் செய்கின்றனர். இது நபி வழிக்கு மாற்றமானதாகும். கைகளை நேராக தொங்க விடுவதே சரியான முறையாகும்.

 
(தவறான முறை)

ஸஜ்தா செய்தல்

கைகளை முதலி­ல் வைக்க வேண்டும்.

ரப்பனா லக்கல் ஹம்து என்று கூறிய பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் செய்ய வேண்டும். ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முத­ல் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்த பின்னர் தமது மூட்டுக்களை வைக்க வேண்டும்.

''உங்களில் ஒருவர் ஸஜ்தாச் செய்யும் போது தனது மூட்டுக் கால்களை வைப்பதற்கு முன் தனது கைகளை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­), நூல்: நஸயீ (1079)

 1வது கைகளை                      2வது மூட்டுக் கால்களை

ஸஜ்தாச் செய்யும் போது நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.

கால் விரல்களை வளைத்து கிப்லாத் திசையை முன்னோக்கும் விதமாக வைக்க வேண்டும். இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும்.

ஆடையோ, முடியோ தரையில் படாதவாறு தடுக்கக் கூடாது. மேலும் ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும். இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும். மேலும் தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும்.

                            (சரியான முறை)

தொடைகளை வயிறுடன் ஒட்டாமல் அகற்றி வைக்க வேண்டும். நாய் அமர்வது போன்று முன்கைகளைத் தரையில் பரப்பி வைக்கக் கூடாது.

                         (இரண்டுமே தவறான முறை)

ஸஜ்தாவில் ஓத வேண்டியவை

ஸஜ்தாவில் பின் வரும் துஆக்களில் அனைத்தையுமோ அல்லது ஒன்றையோ ஓதிக் கொள்ளலாம். குர்ஆன் வசனங்களை ஓதக் கூடாது.

சுப்ஹான ரப்பியல் அஃலா (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) மூன்று தடவை கூற வேண்டும்.

ஸுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க அல்லாஹும்மக்ஃபிர்­ (இறைவா! நீ தூயவன்; எங்கள் இறைவா உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு)

ஸுப்பூஹுன் குத்தூஸுன் வரப்புல் மலாயிகதி வர்ரூஹ் (வானவர்களுக்கும், ரூஹ் (ஜிப்ரீலுக்கும்) இறைவன் பரிசுத்தமானவன், தூய்மையானவன்)

ஸஜ்தாவில் ஓதும் துஆக்களை மூன்று முறை தான் ஓத வேண்டும் என்பதில்லை. நாம் விரும்பி அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம்.

ஒருவர் ஸஜ்தாவில் இருக்கும் போது தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே கேட்கலாம்.

ஸஜ்தாவில் அதிகம் பிரார்த்தனை செய்யுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்கப்பட அது மிகவும் தகுதியானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி­), நூல் : முஸ்லி­ம் (824)

இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில்

முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் ''ரப்பிக் ஃபிர்லீ ரப்பிக் ஃபிர்லீ'' என்ற துஆவை ஓத வேண்டும்.

இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையே அமரும் முறை

          (சரியான முறை)

இந்த துஆவை ஓதி முடித்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் செய்தவாறு அனைத்தையும் இரண்டாம் ஸஜ்தாவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

இரண்டாம் ரக்அத்

முதல் ரக்அத்தை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காக எழ வேண்டும். எழும் போது இரண்டு ஸஜ்தாக்களுக்கிடையில் அமர்ந்ததைப் போல் அமர்ந்து இரு கைகளையும் தரையில் ஊன்றி நிலைக்கு எழ வேண்டும். பின்னர் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். ஸஜ்தாவி­ருந்து எழும் போது இரு கைகளையும் மாவு குழைப்பதைப் போல் மடக்கி தரையில் ஊன்றி எழுவது கூடாது.

கைகளை தரையில் ஊன்றி எழும் முறை

   (சரியான முறை)                              (தவறான முறை)

இரண்டாம் ரக்அத்தில் முதல் ரக்அத்தில் ஓதியதைப் போலவே அனைத்தையும் ஓத வேண்டும். எனினும் முதல் ரக்அத்தில் ஸþரத்துல் பாத்திஹாவிற்கு முன் ஓதிய ஆரம்ப துஆக்கள் இரண்டாம் ரக்அத்தில் கிடையாது.

இரண்டாம் ரத்அத்தில் முதலாவதாக சூரத்துல் பாத்திஹாவை ஓத வேண்டும். அத்துடன் துணை சூராவையும் ஓத வேண்டும்.

பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அதில் ஓதவேண்டிய துஆக்களையும் ஓத வேண்டும்.

அத்தஹிய்யாத் இருப்பு

இரண்டாவது ரக்அத்தில் இரண்டாம் ஸஜ்தாவை முடித்தவுடன் இருப்பில் அமரும் போது அதற்குத் தனியான முறை இருக்கிறது.

கடைசி இருப்பாக இருந்தால் ஒரு விதமாகவும், இருப்பிற்குப் பிறகு தொழுகை தொடர்ந்தால் வேறு விதமாகவும் அமர வேண்டும்.

மூன்று, நான்கு ரக்அத் தொழுகைகளின் போது முதலாம் இருப்பில் இடது கால் மீது அமர்ந்து வலது காலை நாட்டி வைத்து அதன் விரல்களை கஅபாவை நோக்கி மடக்கி வைக்க வேண்டும். பார்க்க படம்


கடைசி இருப்பில் மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை, வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி அதன் விரல்களை கஅபாவை நோக்கி வைக்க வேண்டும். பார்க்க படம்


(சரியான முறை)       (தவறான முறை)    (தவறான முறை)

இருப்பின் போது அமரும் முறைகள்

இருப்பின் போது வலது கையை வலது தொடையின் மீது வைக்க வேண்டும். இடது கையை இடது தொடை மற்றும் மூட்டின் மீதும் இருக்குமாறு வைத்து முழங்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

வலது கையை வலது தொடையின் மீதும் இடது கையை இடது தொடையின் மீதும் வைக்க வேண்டும்.

வலது கையை வலது மூட்டின் மீதும், இடது கையை இடது மூட்டின் மீதும் வைக்க வேண்டும்.


விரலசைத்தல்

ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி அசைத்துக் கொண்டு இருக்க வேண்டும். அப்போது, பார்வை ஆட்காட்டி விரலையே நோக்கி இருக்க வேண்டும்.


அத்தஹிய்யாத் துஆ

''அத்தஹிய்யா(த்)து ­ல்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபரகாதுஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸா­ஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு

அல்லாஹும்ம ஸல்­ அலா முஹம்மதின் வஅலா ஆ­ முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி­ இப்ராஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆ­லி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்னக ஹமீது(ன்)ம் மஜீத்.

''அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரீ வமின் ஃபித்னதில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி பித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.

''அல்லாஹும்ம இன்னீ ளலம்து நஃப்ஸீ ளுல்மன் கஸீரன் வலா யக்ஃபிருத் துனூப இல்லா அன்த ஃபக்ஃபிர்லீ மக்ஃபிர(த்)தன் மின் இந்திக வர்ஹம்னீ இன்னக அன்தல் கஃபூருர் ரஹீம்''

மூன்றாம் ரக்அத்

இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் சூரத்துல் பாத்திஹா மட்டும் ஓதினால் போதுமானது. விரும்பியவர் வேறு துணை சூராக்களை ஓதிக்கொள்ளலாம்.

நான்காம் ரக்அத்

மூன்றாம் ரக்அத் முடித்த பின்னர் நான்காம் ரக்அத்திற்காக அல்லாஹு அக்பர் என்று கூறி எழ வேண்டும். மூன்றாம் ரக்அத்தில் கைகளை உயர்த்தியதைப் போல் நான்காம் ரக்அத்துக்கு எழும் போது கைகளை உயர்த்தாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். மற்றவை மூன்றாம் ரக்அத்தில் செய்ததைப் போன்றே செய்ய வேண்டும்.

நான்காம் ரக்அத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் செய்த பின்னர் இருப்பில் அமர வேண்டும்.

இருப்பில் அமரும் போது மண்டியிட்டுத் தரையில் இருப்பிடம் படியுமாறு அமர்ந்து இடது காலை வலது காலுக்குக் கீழ் வெளிப்படுத்தி வலது காலை நாட்டி வைக்க வேண்டும். இதை முன்னரே விளக்கியுள்ளோம்

அத்தஹிய்யாத் ஓதிய பின்னரோ அல்லது மேற்கூறிய துஆக்கள் ஓதி முடித்த பின்னரோ நமக்கு ஏற்படும் தேவைகளை நமது தாய் மொழியிலேயே கேட்டு துஆச் செய்யலாம்.

ஸலாம் கூறி முடித்தல்

பிரார்த்தனை ஓதி முடித்த பின்னர் தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூற வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் தமது வலது பக்கமும், இடது பக்கமும் ஸலாம் கூறும் போது அவர்களின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்குத் திரும்பியதைக் கண்டேன். அறிவிப்பவர்: ஸஅது (ரலி­), நூல்: முஸ்லி­ம்

நிதானமாகச் செய்தல்

தொழுகையில் மேற்கூறிய காரியங்கள் அனைத்தையும் நிதானமாகச் செய்ய வேண்டும். அவசரம் காட்டக் கூடாது. அவ்வாறு தொழும் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

குர் ஆன்

Tanzil - Quran Navigator

இஸ்லாமிய சகோதரத்துவம்


இஸ்லாமிய சகோதரத்துவத்தை பற்றியும், சகோதரத்துவத்தை பேணுவதற்கான வழிமுறைகளை பற்றியும், இஸ்லாமிய சமூகத்தை ஒற்றுமையோடும், வலுவோடும் காப்பதற்கான அணுகுமுறைகள் பற்றியும் நாம் எண்ணுவதற்கு முன்னால் அந்த சமூகத்தின் முக்கியத்துவத்தை அறிய வேண்டும். இந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணிகளைப் பற்றியும், இந்த சமூகம் அல்லாஹ்விடத்தில் எத்தகைய கண்ணியத்தையும், சிறப்பையும் பெற்றிருக்கிறது என்பதையும், கடந்த கால வரலாற்றிலும் சரி, சமகாலகட்டத்திலும் சரி இந்த உம்மத் எத்தகைய பங்காற்றி இருக்கிறது, எத்தகைய பங்களிப்பை, பணியை செய்ய வேண்டி இருக்கிறது என்பதையும் அறிந்தால்தான், அந்த அவசியத்தை உணர்ந்தால்தான் சகோதரத்துவம் என்பது சாத்தியம் மட்டுமல்ல, அதை பேணுவது நம்முடைய கடமை என்பதையும் உணர முடியும்.

முஸ்லிம் உம்மத்தின் முக்கியத்துவம்:
சிறந்த சமுதாயம்:
                    மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; 
(திருக்குர்ஆன் 3: 110)
மேற்கணட வசனத்திலிருந்து நாம் ஒன்றை புரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய சமூகம், இந்த உலகத்தை சீர்படுத்தி, மக்களை இறைவனின் பக்கம் திருப்ப, சமூகத்தில் நீதியையும், அமைதியையும் நிலைநாட்ட, மறுமை என்ற விசாலமான வாழ்வை குறித்த தெளிவை ஏற்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்க்ப்பட்ட சமூகம். முஸ்லிம் உம்மத், சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பெரும் பங்காற்றி, மக்களை வழிநடத்துவதற்காக உள்ள ஒரு சமூகம் என்றும் புலனாகிறது. அதுமட்டுமல்ல, முஸ்லிம்களுடைய இருப்பு, இஸ்லாத்தின் இருப்பு, முஸ்லிம்களின் வலிமை, இஸ்லாத்தின் வலிமை, முஸ்லிம்களுடைய வீழ்ச்சி, இஸ்லாத்தின் வீழ்ச்சி என்ற விஷயத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
                    அதைத்தான், பெருமானார் (ஸல்) அவர்கள், பத்ர் போரின் போது, அல்லாஹ்விடத்தில் , “இறைவா! இந்த கூட்டம் அழிக்கப்பட்டுவிட்டால், இந்த உலகத்தில் உன்னை நினைவுகூறுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள். நீ வாக்களித்த வெற்றியை எங்களுக்கு வழங்குவாயாக” என்று பிரார்த்திக்கின்றார்கள். அதுமட்டுமல்லாமல், பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்தை கட்டமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். சமூகம் ஒற்றுமையோடும், பரஸ்பர புரிந்துணர்வுடனும் இருப்பதற்கு அதிக அக்கறை செலுத்தினார்கள்.
பெருமானார் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தவுடன், அங்கு பள்ளிவாசலை கட்டுகின்றார்கள், பின்னர் முஹாஜிர்கள், அன்சாரிகளை அழைத்து நீங்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற ஈமானிய உறவு முறையை ஏற்படுத்துகிறார்கள்.
அல்லாஹ் சுப்ஹானஹுத ஆலா தன்னுடைய திருமறைக்குர்ஆனில் கூறுகின்றான்:
                    ”நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” – (திருக்குர்ஆன் 49:10)
எந்த நிலையிலும், இந்த சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல் இருந்ததில்லை. அவர்களுக்குள் அவ்வபோது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை களைவதில் மிகுந்த அக்கறை செலுத்தினார்கள். அவர்களிடையே ஏற்பட்டுவிட்ட கருத்து வேறுபாடுகளை, தாமதிக்காமல் உடனே அதை நிவர்த்தி செய்தார்கள். அது போர்க்களமாக இருந்தாலும் சரியே.
உதாரணத்திற்கு, ஹுனைன் போரின் வெற்றியின் போது கிடைத்த கனீமத் பொருட்களை பெருமானார் (ஸல்) அவர்கள் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கு, குறிப்பாக மக்கா வாசிகளுக்கு, போரில் கலந்து கொண்ட மதீனாவின் அனசாரித் தோழர்களை விட கூடுதலாக பங்கீடு செய்கிறார்கள், இந்த பங்கீட்டில் அன்ஸாரித் தோழர்களில் உள்ள சில இளைஞர்கள் அதிருப்தி அடைகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவாசிகளை முக்கியத்துவப் படுத்துகிறார்களோ என்ற ரீதியில் சில கருத்து வேறுபாடு அவர்களிடையே தோன்றுகின்றன. இதை பெருமானார் (ஸல்) அவர்கள் கேள்விப்படுகிறார்கள். உடனே அன்சாரித்தோழர்களை ஒரு இடத்தில் கூடுமாறு கட்டளையிடுகின்றார்கள். பின்னர் பெருமானார் (ஸல்) அவர்கள் அங்கு வந்து, அல்லாஹ்வை புகழ்ந்து விட்டு, கருத்து வேறுபாட்டைப் பற்றி அன்ஸாரித் தோழர்களிடத்தில், கேட்டுவிட்டு இவ்வாறு கூறினார்கள் , “இதோ, என்னிடமிருந்து கனீமத் பொருட்களை பெற்றுக்கொண்ட மக்கள, அந்த பொருட்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்று, அவற்றை தங்கள் வீடுகளில் நிரப்ப தயாராகிகொண்டிருக்கிறார்கள். அன்ஸாரி தோழர்களே!, இதோ உங்கள் முன்னால், அல்லாஹ்வின் தூதராகிய நான் நிற்கின்றேன்.உங்களோடு வருவதற்கு தயாராக நிற்கின்றேன், என்னை அழைத்து செல்லமாட்டீர்களா? என்னைக் கொண்டு உங்கள் வீடுகளை நிரப்ப மாட்டீர்களா? என்று சொல்லிவிட்டு, மேலும் கூறினார்கள்- “மக்கள் அனைவரும் ஒரு பாதையிலும், அன்ஸாரித்தோழர்கள் ஒரு பாதையிலும் சென்றால், நான் அன்ஸாரிகள் செல்லக்கூடிய பாதையில் வருவதற்கு விரும்புகின்றேன். ஹிஜ்ரத் மட்டும் இல்லையென்றால் நான் அன்ஸாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன்” என்று கூறியமாத்திரத்தில், அன்ஸாரித்தோழர்களிடத்தில் இருந்த கருத்து வேறுபாடு கலைந்தது. மேலும் அவர்கள் இவ்வாறு நினைத்ததற்கு மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாகித் தங்களுடைய தாடி நனையும் அளவுக்கு அழ ஆரம்பித்தார்கள். கருத்து வேறுபாடும் கலையப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வுகளிலிருந்து நாம ஒன்றை விளங்கிக் கொள்ள வேண்டும், கருத்து வேறுபாடுகளை முக்கியத்துவப்படுத்தி பிரிவினைகளை ஏற்படுத்த கூடாது மற்றும் இஸ்லாமிய சமூகத்தில் முதன்மையானது சகோதரத்துவம். ஓரிடத்தில் முஸ்லிம்கள் அனைவரும் சமூகமாக வாழ அல்லது வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிலையில் சகோதரத்துவத்தை முதலில் உருவாக்க வேண்டும் அல்லது மேம்படுத்த வேண்டும். அப்படி உருவாக்கப்பட்ட சகோதரத்துவத்தில் பிரச்சினைகள், பிணக்குகள் இல்லாமல் கொண்டு செல்வதற்கு பல வழிமுறைகளை இஸ்லாம் நமக்கு கற்றுத்தருகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்…..
நன்றி இக்ரா . நெட் 

வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

‘ஜகாத்’ செலுத்தாதவர்களின் நிலை


உலக மக்கள் கொஞ்சம் நிதானமாக சிந்தித்தால் 1421 வருடங்களூக்குமுன் மனிதன் நாகரீகமடையாத அந்தக்காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி இஸ்லாம். இன்று இந்த நாகரீகக் காலத்திலும் அதன் நிலை மங்காமல் எந்த மாற்றத்திற்கும் அவசியமில்லை என்று நிலை நாட்டிக்கொண்டிருப்பது அதியசமன்றோ. அது மட்டுமல்ல உலகம் அழியும் வரை மக்கள் கடைபிடிக்க எளிதாகவும் தெளிவாகவும் இருப்பதும் அதிசமன்றோ.
      இதற்குக் காரணம் என்ன? மனிதனால் அல்லது மனிதர்களில் அறிஞர்கள் அடங்கிய குழுவினரால் திட்டமிடப்பட்ட ஒரு வாழ்க்கை நெறியாக அது அமைந்திருந்தால் அது சாத்தியமா? நிச்சயமாக இல்லை. இஸ்லாம் அப்துல்லாஹ்வின் மகனார் முஹம்மது(ஸல்) என்ற தனி மனிதராலோ அல்லது அவர்களும், அவர்களது தோழர்களும் இணைந்த ஒரு குழுவினராலோ அலசி ஆராயப்பட்டு அமைக்கப்பட்ட ஒரு வாழ்க்கை நெறித் திட்டம் அல்ல. மாறாக இஸ்லாம் அகில உலகங்களையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து பரிபாலித்து வரும் சர்வ வல்லமை மிக்க இறைவனால், அவனது இறுதித்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் அகில உலக மக்களுக்கும் நிறைவு செய்யப்பட்ட வாழ்க்கை நெறியாகக் கொடுக்கப்பட்டதாகும்.
     அந்த வல்லோனாகிய ஏக இறைவன் இவ்வுலக வாழ்க்கையை மனிதர்களுக்கு  இவ்வுல வாழ்க்கை ஒரு சோதனை என்று தனது இறுதி மறை அல்குர்ஆனில் தெளிவுபடுத்தியுள்ளான். உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும 67:2 எனவே இவ்வுலக வாழ்க்கையில் ஏழை பணக்காரன், தொழிலாளி முதலாளி, அதிகாரம் வகிப்பவன் அதற்கு கட்டுபடுபவன் போன்ற பாகுபாடுகளுடன் நடமாடவிட்டிருப்பது சோதனையின் காரணமாகவே.
    கணக்கில் அடங்காத மறு உலக வாழ்க்கையோடு விரல் விட்டு எண்ணும் ஆண்டுகளுடைய இவ்வுலக வாழ்க்கையை அதாவது மிக மிக அற்பமானதொரு வாழ்க்கையை ஒப்பிட்டு அறிபவர்களே இந்த உண்மையை ஏற்க முடியும். தினசரி கோடிக்கணக்கான ரூபாய்களுடன் புழங்கும் ஒருவனே சில சில்லறை நோட்டுகளை புறக்கணிக்கதக்க நிலையை உணர முடியும். அன்றாடம் சில சில்லறைக் காசுகளை மட்டும் பார்த்து வருபவனுக்கு அதுவே பெரும் சொத்தாகத் தெரியும்.
    இதே போல நிரந்தரமான கணக்கிலடங்காத மறு உலக வாழ்க்கையில் உறுதியான நம்பிக்கை உடையவர்களுக்கே அற்பமான புறக்கணிக்கத்தக்க இவ்வுலக வாழ்க்கையின் நிலை புரியும். மறு உலக வாழ்க்கையில் நம்பிக்கை இல்லாதவர்கள் அழிந்து போகும் இவ்வுல வாழ்க்கையைவிட பெரியதொரு வாழ்க்கை இருப்பதை ஏற்க முடியாதுதான். அவர்களுக்கு இவ்வுலகமே சர்வமும்.
    இவ்வுலகின் ஆசாபாசங்களுக்கும், சொத்து சுகங்களுக்கும், பணம் காசுக்கும் அடிமைப்பட்டு கிடப்பவன், மறுமையின் அழியாத நித்தியமான பதவிகளையும் சுகங்களையும் அறியாதவனாகத்தான் இருப்பான். அந்த அளவுக்கு அவனது அக புற கண்கள் குருடாகத்தான் இருக்கும். எனவே அவனிடமே கஞ்சத்தனமும், அற்பத்தனமும் நிறைந்து காணப்படும்.
    மறுமையின் நிறந்தர நித்திய வாழ்க்கையை அறிந்து வைத்திருப்பவன் இவ்வுலகில் தனக்கு அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டிருக்கும் சொத்து சுகங்களும், செல்வங்களும் சோதனைக்காக கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏழை எளியவர்களின் மற்றும் தேவையுடையோரின் பங்கும் இருக்கிறது. அவற்றை முறைப்படிக் கணக்கிட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அப்படி ஒப்படைக்கத் தவறினால் வைகோல் போரை நாய் காத்து கிடந்த கதையாகத்தான் முடியும் என்பதை உணர்ந்து கொள்வான்.
    இவ்வுலக சொத்து சுகங்களை, பணங்காசை உரியவர்களுக்குப் பங்கிட்டு கொடுக்காமல் கஞ்சத்தனத்தால் அவற்றைக் கட்டிக்காத்தவன் நிச்சயமாக ஒரு நாளைக்கு அவற்றைத் துறந்து மரணிக்கத்தான் போகிறான். அவற்றை பிரிவது மட்டுமல்ல, அவற்றை உரியவர்களுக்குக் கொடுக்காமல் கட்டிக்காத்து கிடந்ததற்குறிய தண்டனையை இனிமேல்தான் அடையப் போகிறான். ஆயினும் இப்படிப்பட்ட கடுந்தண்டனையை அவன் இங்கு உணர்வதாக இல்லை. அங்கு நேரில் கண்கூடாகக் கண்ட பின்னர்தான் அழுது பிரலாபிக்கப் போகிறான். ஆயினும் அது அவனுக்குப் பலன் தராது.
    ஏழை எளியவர்கள் மற்றும் தேவையுடையவர்களுக்குரிய பங்கை – ஜகாத்தை கணக்கிட்டு கொடுக்காததின் காரணமாக அவன் சேர்த்து வைத்த தங்கமும் வெள்ளியும் உருக்கி காய்ச்சப்பட்டு அவனது நெற்றியிலும் விலாப்புறங்களிலும் முதுகிலும் சூடு போடப்படும். அல்லாஹ் அளித்துள்ள செல்வத்திலிருந்து ஜகாத்தை முறைப்படிச் செலுத்துவதன் அவசியம் பற்றியும் அதை முறையாக செலுத்தாதவர்களின் நிலை பற்றியும் கீழ் வரும் வசனங்களை படித்து உணர வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமான ஆண் பெண் மீது நீங்காக் கடமையாகும். அவையாவன: 2:43,83,110,177,277 4:77,162 5:12,55 7:156 9:5,11,18,34,35,60,71 19:31,55 21:73 22:41,78 27:3 30:39 31:4 33:33 41:6,7 58:13 73:20 98:5
    இவற்றில்
    
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். ”அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு” என்று எச்சரிப்பீராக!அல்குர்ஆன் 9:34அல்குர்ஆன் 9:35
   அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ”இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)

    ஆகிய இரு கடுமையான எச்சரிக்கைகளையும் உண்மையான முஸ்லிம்கள் தங்கள் நெஞ்சில் நிறுத்தி இந்தக் கொடுமையான தண்டனையிலிருந்து விடுபட தங்கள் சொத்துக்களிலிருந்து ஜகாத்தை முறையாக கணக்கிட்டுக் கொடுத்துவிட கடமைப்பட்டிருக்கிறார்கள்.

திங்கள், 20 பிப்ரவரி, 2012

ஜகாத்


ஜகாத் என்பது இஸ்லாத்தைத் தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இது பல தனித்தன்மைகளைத் தன்னகத்தே கொண்ட ஓர் அரிய அமைப்பாகும். திருக்குர்ஆனில் வரும் ‘ஜகாத்’ என்ற சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்தும் ஒரே தமிழ்ச்சொல் இல்லை. இதுபோலவே இதன் முழுப்பொருளையும் உணர்த்தும் ஒரே சொல் வேறுமொழிகளிலும் இல்லை.
தர்மம், கொடை, இனாம், அன்பளிப்பு, வரி என்ற சொற்கள் ‘ஜகாத்’ என்ற சொல்லின் முழுப்பொருளையும் வெளிப்படுத்துபவையாக இல்லை. இது மிகவும் விரிவான பொருளைக் கொண்டதாகும்.
‘ஜகாத்’ என்பது ஒருவருடைய சொத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தைக் குறைத்து விடுவது என்பதல்ல. ‘ஜகாத்’ கொடுப்பதால் ஒருவருடைய செல்வம் குறைந்து விடுவதல்ல. மாறாக அது மேலும் செல்வத்தில் செழிப்பை ஏற்படுத்துகின்றது. ஜகாத் கொடுப்பது ஒரு ஆன்மீக முதலீடாகும்.
ஜகாத் யாரோ ஒருவருக்காகத் தரப்படும் ஒரு அன்பளிப்பு என்பதல்ல. பலர் அரசாங்கத்திற்குத் தருவதிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார்களே அதுபோன்றதொரு (வருமான) வரியுமல்ல. ஜகாத் இறைவனால் பணிக்கப்பட்டதாகும். ஒவ்வொரு முஸ்லிமும் முன்வந்து மனமுவந்து சமுதாயத்தின் நலனுக்காக நிறைவேற்றும் கடமையாகும். ஜகாத் என்பதற்கு ஆன்மீக நோக்கமுண்டு. பொருளாதாரத் தனித்தன்மைகளுண்டு. இறை உணர்வும், தெய்வீக உள்ளமும் அதன் இன்றியமையாத தேவைகள். நன்கொடை, அன்பளிப்பு, இனாம், வரி இவற்றின் சிறப்புகளும் அதிலுண்டு. ஆதலால் தான் ஜகாத் என்ற சொல்லுக்கு இணையானதொரு சொல் வேறு எந்தமொழியிலும் இல்லை.
பொதுவாக ஜகாத் என்ற சொல்லுக்குத் தூய்மை என்று பொருள். வசதியுள்ள முஸ்லிம்கள் வறியவர்களுக்கு வழங்க வேண்டிய தொகையையும் குறிக்கும். ஜகாத் என்ற சொல்லின் ஆன்மீகப் பொருள் மிகவும் ஆழமானதாகும். ஜகாத்தின் பொருளை பின்வருமாறு விளக்கலாம்:
1. ஜகாத் செல்வந்தர்களின் செல்வத்தை சுத்தப்படுத்துகின்றது.
ஒருவர் எவ்வளவு பணத்தை அல்லது பொருளை ஜகாத்தாக தரவேண்டுமோ அவ்வளவுபணம் அல்லது பொருள் அவருக்குச் சொந்தமானதல்ல என்றே கொள்ள வேண்டும். அது ஏழைகளுக்குச் சொந்தமானது. ஆகவே ஒருவர் ஜகாத் தரவில்லை என்றால் அவர் ஏழைகளுக்குச் சொந்தமானதை அபகரித்துக் கொண்டார் என்றே பொருள். இது வெளிப்படையானதொரு சமுதாய ஆக்கிரமிப்பேயாகும். இஸ்லாம் தந்த ஆன்மீக உணர்வுகளுக்கு எதிரானதாகும். இறைவனின் சட்டத்தை மீறுகின்ற செயலாகும்.
இப்படி ஒருவர் ஏழைகளுக்குச் சொந்தமானதைத் தமதாக்கிக் கொண்டால் அவர் தமது செல்வம் முழுவதையும் அசுத்தபடுத்திக் கொண்டார் என்றே பொருள். இது அவருக்கு இம்மையிலும், மறுமையிலும் பெரிய இழப்புகளையே ஏற்படுத்தும்.
ஆனால் அவர் ஏழைகளுக்குச் சொந்தமானதைத் தனது செல்வத்திலிருந்து பிரித்தெடுத்து உரியவர்களுக்கு வழங்கி விடுவாரேயானால், அவரது செல்வம் முழுவதும் தூய்மையாகி விடும். தூய்மையான முதலீடும் செல்வமும் நிரந்தர முன்னேற்றத்தின் நிலையான ஏற்பாடன்றோ!
2. ’ஜகாத்’ அதைக் கொடுப்பவர்களின் செல்வத்தை தூய்மைப்படுத்துகின்றது. அது கொடுப்பவரின் உள்ளத்தையும் தூய்மைப்படுத்துகின்றது. கொடுப்பவரின் உள்ளம் சுயநலம், பணஆசை போன்றவற்றிலிருந்து விடுதலைப் பெறுகின்றது.
’ஜகாத்’ அதைப் பெறுபவரின் உள்ளத்தையும் சுத்தப்படுத்துகின்றது. அதைப் பெறுபவர் பொறாமை, வஞ்சகம், வெறுப்பு, விரக்தி இன்னும் இவை போன்றவற்றைத் தனது உள்ளத்திலிருந்து அகற்றி, தனது உள்ளத்தை சுத்தப்படுத்துகின்றார். அவர் தனது உள்ளத்தை நயவஞ்சகத்திற்குப் பதில் நன்றியால் நிரப்புகின்றார். ஜகாத்தைக் கொடுக்கும் வசதி படைத்தவர்களிடம் பொறாமையுடனல்லாமல் பாசத்துடன் நடந்து கொள்கிறார். இதனால் ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலுள்ள இடைவெளி சுருங்குகின்றது. வர்க்கப் போராட்டத்திற்கு வழியில்லாமல் ஆகின்றது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையேயுள்ள காழ்ப்புணர்வுகள் அகற்றப்பட்டு, அவர்களிடையே பாசமும், பரிவும் பரிமாறப்படுகின்றது.
3. ‘ஜகாத்’ ஏழைகளின் ஏக்கத்தைப் போக்குகின்றது. வறியவர்களின் வாட்டத்தை நீக்குகின்றது. இதனால் சமுதாய உறுப்பினர்களின் துயரங்கள் துடைக்கப்படுகின்றன. வாழ்வின் அவசிய தேவைகளைப் பெற்றிடும் வாய்ப்பினைப் பெறாதவர்களுக்கு ‘ஜகாத்’ ஒப்பற்ற விதத்தில் உதவி செய்கின்றது. அதே நேரத்தில் ஒவ்வொருவரும் தனது முன்னேற்றத்திற்கு உழைத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றது. ‘ஜகாத்’ வாழ்க்கையில் ஏதேனுமொரு சிறுதுடுப்பு கிடைத்தால் முன்னேறி விடுவார்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு இஃது ஒரு பெரும் துடுப்பாக துணை நிற்கின்றது. பலருக்கு ‘ஜகாத்’ ஒரு அவசரக்கால உதவியாகவே அமைகின்றது. ஜகாத்தையே அவர் சார்ந்திராமல் தானும் முன்னேறிட, முன்னேறி பிறருக்கு ஜகாத் கொடுப்பவராக மாறிட, அது ஊக்கமளிக்கின்றது.
ஜகாத்தைக் கொடுப்பவருக்கும் அது ஊக்கம் தருகின்றது. ஜகாத்தைக் கொடுப்பது இறைவனின் அருளைப் பெற்றுத் தருவதனால் கொடுப்பவர் இன்னும் அதிகம் உழைத்து அதிகம் ஜகாத் கொடுக்க வேண்டும், அல்லாஹ்வின் அருளை அதிகமாகப் பெற்றிட வேண்டும் என முனைந்து செயல்படுகின்றார்.
இருப்பவர்களும், இல்லாதவர்களும் பயன்பெறும் ஒரு சிறந்த கருவூலமே ஜகாத்.
இருப்பவர்கள் ஆண்டவனின் அருளை அறுவடை செய்கின்றார்கள். இல்லாதவர்கள் அல்லாஹ்வின் திட்டத்தின் கீழ் வாழ்க்கையில் உதவி செய்யப் பெறுகிறார்கள்.
4. சுயநலம், பேராசை, இன்னும் இவற்றால் சமுதாயத்தில் ஏற்படும் பிளவு, சமுதாய அமைப்பில் வேற்றுக் கொள்கைகளின் படையெடுப்பு இவற்றிலிருந்து சமுதாயத்தைக் காத்திடும் பாதுகாப்புக் கேந்திரமாக விளங்குகின்றது ஜகாத். ‘ஜகாத்’ அதைக் கொடுப்பவரிடம் ஒரு பொறுப்பை ஏற்படுத்துகின்றது. சமுதாயத்தில் அவருக்கு இருக்கும் பொறுப்பை உணர்த்துகின்றது.
‘ஜகாத்’ அதைப் பெறுபவரிடத்தில் சமுதாயம் நம்மை வாட விட்டுவிடுவதில்லை என்ற பாதுகாப்பு உணர்வையும், நாம் சமுதாயத்தின் பொறுப்புமிக்க குடிமகன் என மதிக்கப்படுகின்றோம் என்ற நன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது.
5. தனிமனிதனும், சமுதாயமும் எப்படி ஆன்மீக உணர்வுடனும் மனிதாபிமான எண்ணத்துடனும் நடந்திட வேண்டும் என்பதன் தெளிவான விளக்கமாகத் திகழ்கின்றது ஜகாத். இஸ்லாம் எவ்வாறு தனியுடைமைக்குத் தடை போடாமல் பொதுவுடமையைப் பேணுகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது ஜகாத். தனிமனிதன் உழைத்து சம்பாதிப்பதையும், சம்பாதித்ததைக் கொண்டு முதலீடு செய்து தொழில் செய்வதையும் இஸ்லாம் தடை செய்வதில்லை. அதே நேரத்தில் மனிதன் பணம் பண்ணும் பணியில் சமுதாயத்தை ஆக்கிரமித்திடவோ, புறக்கணித்திடவோ இஸ்லாம் அனுமதிப்பதில்லை. அதுபோலவே மனிதன் சுயநலப் பேயாகப் படையெடுத்து பணத்தை சேர்ப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளியாக மாறிட இஸ்லாம் அனுமதிப்பதில்லை. மனிதன் சுயநலம் நிறைந்த முதலாளித்துவ முறையை சமுதாயத்தில் நிலைநாட்டிட அனுமதிப்பதில்லை இஸ்லாம். இவற்றிற்கெல்லாம் ‘ஜகாத்’ தெளிவான விளக்கமாக அமைகின்றது.
இஸ்லாம் தனிமனிதனுக்கும், சமுதாயத்திற்கும் இடையில் நியாயமானதொரு சமநிலையை ஏற்படுத்துகின்றது என்பதை ‘ஜகாத்’ எடுத்துக் காட்டுகின்றது. அதுபோலவே இஸ்லாம் மக்களுக்கும், அவர்களை ஆளும் அரசுக்கும் இடையில், தனியுடமைக்கும், பொதுவுடமைக்கும் இடையில், உலகியலுக்கும், ஆன்மீகத்திற்கும் இடையில் எப்படி ஒரு சமத்துவத்தை ஏற்படுத்துகின்றது என்பதை ‘ஜகாத்’ தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
ஜகாத் வழங்கவேண்டிய விகிதாசாரம்.
ஆண்டின் இறுதியில் ஏறத்தாழ 15*டாலரை (*ஜகாத் தர வேண்டிய அளவினை தங்கம், வெள்ளி ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடுவது வழக்கம். இங்கே ஆசிரியர்டாலர்களை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டிருக்கிறார். நாம் நமது இந்திய சூழ்நிலையில் இது குறித்த அறிஞர்களை கலந்து முடிவு செய்திட வேண்டும்.) ரொக்கமாகவோ, வியாபாரப் பொருளாகவோ வைத்திருக்கின்ற ஒவ்வொரு முஸ்லிமும் குறைந்த பட்சம் இரண்டரை (2-1/2) விழுக்காடுகள் ஜகாத்தாக தந்திட வேண்டும். இந்தத் தொகை ரொக்கமாக இருந்தால் ஜகாத் கணக்கிடுவதில் சிரமமில்லை. ஆனால் இது, வாணிபப் பொருள்களாகவோ, வர்த்தகப் பொருள்களாகவோ இருந்தால், ஆண்டின் இறுதியில் அவற்றை அங்காடியில் அப்பொழுது நிலவும் விலையில் கணக்கிட்டு அந்த மதிப்பில் இரண்டரை (2-1/2) விழுக்காடுகள் ஜகாத்தாகத் தந்திட வேண்டும். ஒருவர் வருமானம் வரும் கட்டிடங்கள் (வியாபாரத் தலங்கள்) ஆலைகள் போன்றவற்றில் முதலீடுசெய்திருந்தால், அவர் அவற்றிலிருந்து வரும் நிகர வருமானத்தில் ஜகாத் கொடுக்க வேண்டும். அவற்றின் மொத்த மதிப்பில் அல்ல. ஆனால் ஒருவர் கட்டிடங்களையோ அல்லது வீடுகளையோ வியாபாரப் பொருள்களாக்கிக் கொண்டிருந்தால் (அதாவது அவர் வீடுகளையும், கட்டிடங்களையும் கட்டி அவற்றை விற்பதையே வியாபாரமாகக் கொண்டவராக இருந்தால்) அவர் அவற்றின் மொத்த மதிப்பில் ஜகாத் கொடுக்க வேண்டும்.
எல்லா நிலைகளிலும், ஜகாத் நிகர இருப்பிலிருந்தே கொடுக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள இரண்டரை (2-1/2) விழுக்காடு ‘ஜகாத்’ என்பது குறைந்தபட்ச அளவேயாகும். அவசரக் காலங்களிலும், தேவைகள் நிர்பந்தித்திடும் போதும் ஜகாத் தந்திட வேண்டிய அளவிற்கு வரையறையில்லை. அதிகமாக ஜகாத் தருவது தருபவருக்கு அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும். சமுதாயமும் அதிகமான நன்மைகளை அடையும்.
ஜகாத் முறையாக நிலைநிறுத்தப்பட்டால் அவ்வப்போது பிரச்சனைகளை முன்வைத்து நிதி திரட்டும் பணியிலிருந்து சமுதாயம் விடுவிக்கப்படுகின்றது.
இஸ்லாம் ஆட்சி செலுத்திய ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதன் எல்லைக்குள் ஜகாத்தைப் பெற்றுத்தான் வாழ்ந்திட வேண்டும் என்ற நிலையில் எவரும் இருந்ததில்லை. ஜகாத்தைப் பெறுபவர்களேயில்லை என்ற அளவிற்கு வறுமை முற்றாகத் துடைக்கப்பட்டிருந்தது, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள் இன்னும் இஸ்லாத்தின் எல்லைக்குள் வாழ்ந்த அத்தனைப் பேரும் தங்களது தேவைகளுக்குப் போதுமானவற்றைப் பெற்றிருந்தார்கள். ஆகவே அங்கு ஜகாத் பெறுகின்றவர்கள் யாரும் இருக்கவில்லை. இந்நிலையில் ஜகாத்தாகத் திரட்டப்பட்ட நிதி அரசின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது. இப்படி வறுமையை முற்றாக வெற்றிக் கொள்வதற்கு வலுவான ஆயுதமாக விளங்கியது ‘ஜகாத்’. இவை வரலாறு தரௌ ஆதாரபூர்வமான உண்மைகளாகும். இதற்கு இணையானதொரு வரலாற்றுச் சம்பவத்தை நாம் எங்கேயும் காண இயலாது.
இதன் பொருள், ஜகாத் முறை, முறையாக செயல்படுத்தபடுமேயானால், மக்களின் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். அரசின் கருவூலம் நிறையும். இல்லாமை இல்லாத நிலை உண்டாகும். நாடு வளத்தில் வாழும்.
பொதுமக்களின் நலனுக்காக வகுக்கப்பெற்ற இந்தத் திட்டம் ஒருபோதும் தோல்வியுறுவதில்லை. ஏனெனில் இது இறைவனால் வகுக்கப்பட்ட திட்டம். இறைவனால் கட்டளையிடப்பட்ட கடமை. இது தனிமனிதர்களோடு மட்டும் சம்பந்தப்பட்ட சொந்த விஷயமல்ல! அதுபோலவே ‘நானும் கொடுப்பேன்’ என்ற அகந்தையோடு தரப்படுவதுமில்லை இது. மாறாக உளத்தூய்மையோடு கூடிய இறையச்சத்தின்பால் நின்று கணக்கிட்டுத் தரப்படுவதே ‘ஜகாத்’. வசதி படைத்தோர் அனைவரும் கண்ணெனக் காத்திருந்து நிறைவேற்றிட வேண்டிய கடமையே ஜகாத். தகுதியிருந்தும் யாரேனும் தர மறுத்தால் அவர் இறைவனால் தண்டிக்கப்படுவார். இது இறைவனால் சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக ஆக்கப்பெற்ற சட்டமாகும். தன்னை முஸ்லிம்கள் என சொல்லிக் கொள்பவர்கள் யாரும் இந்தக் கடமையை புறக்கணித்திட முடியாது. யாராவது இந்தக் கடமையை புறக்கணித்திட முனைந்தால், இஸ்லாமிய அரசு தலையிட்டு இதை நிலைநிறுத்த ஆவனச் செய்யும்.
ஜகாத்தைப் பெறுபவர்கள்.
திருக்குர்ஆன், பின்வருபவர்கள் ஜகாத்தைப் பெறும் தகுதி படைத்தவர்கள் எனக் கூறுகின்றது:
1. வறுமையின் கொடுமையில் சிக்கிக் கொண்ட ஏழை முஸ்லிம்கள். (வறுமையிலிருந்து அவர்கள் விடுதலை பெறுவதற்காக.)
2. தங்களது வாழ்க்கைத் தேவைகளைத் தேடிக் கொள்வதற்கான வழிவகையில்லாத வசதியற்ற முஸ்லிம்கள். (அவர்கள் வாழ்க்கைத் தேவைகளைத் தேடிட இஃது ஆரம்ப முதலீடாக அமையலாம்.)
3. புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய முஸ்லிம்கள். (தங்களுடைய புதிய தேவைகளைப் பூர்த்தி செய்து, புதிய வாழ்வைத் துவங்கிட இது உதவியாக அமையும்.)
4. எதிரிகளிடம் கைதிகளாகச் சிக்கிக்கொண்ட இஸ்லாமியப் போர்க்கைதிகள். (இவர்களுக்கான மீட்புத் தொகையை ஜகாத்திலிருந்து கொடுக்கலாம்.)
5. அவசரத் தேவைகளின்போது பட்ட கடன்களிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் முஸ்லிம்கள்.
6. இஸ்லாமிய ஆட்சியாளர்களால் ஜகாத்தை வசூலிப்பதற்காக நியமிக்கப்பட்ட முஸ்லிம் பணியாளர்கள். (அவர்களுக்கு ஊதியம் ஜகாத் பணத்திலிருந்து கொடுக்கலாம்.)
7. இறைப் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள்.
இஸ்லாமிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாத்தைக் கற்பதில் ஈடுபட்டுள்ளவர்கள், இஸ்லாமியப் பிரச்சாரப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்கள் ஆகியோர்களின் செலவுகளைச் சமாளிப்பதற்காக ஜகாத் திரட்டப்பட்ட நிதியிலிருந்து உதவி செய்யலாம்.
8. பயணத்தின்போது அந்நிய நாட்டில் அகப்பட்டுக்கொண்டு உதவிகோரும் முஸ்லிம் பயணிகள்.
தங்களுடைய அவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்திட முடியாத ஏழைகள் அல்லது ஆண்டின் இறுதியில் தங்களிடம் பதினைந்து டாலர் கூட இல்லாதவர்கள், இவர்களே ஜகாத் பெற்றிட உரியவர்கள். ஒருவரிடம் பதினைந்து டாலர்கள் ஆண்டின் இறுதியில் மிஞ்சிடுமேயானால் அவர் ஜகாத் பெறக்கூடாது. மாறாக அவர் ஜகாத் கொடுக்க வேண்டும். ஜகாத்தைப் பெறுபவரே தான் பெற்றது தனது அவசியத் தேவைகளை நிறைவு செய்திடப் போதுமானதாக இருந்தால், அவர் அத்துடன் ஜகாத் பெறுவதை நிறுத்திவிட வேண்டும். அவருடைய தேவைகளுக்குப் போக எஞ்சியிருப்பதை அவர் ஏனையவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும்.
ஜகாத்தை பெற்றிட தகுதியுடையோருக்கு அதனை நேரடியாகவே கொடுத்திடலாம். அல்லது அவர்களைப் பாதுகாத்துவரும் சமூக நல அமைப்புகளிடம் ஒப்படைத்திடலாம். கல்வியில் முதன்நிலையில் நிற்கும் ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையாகவும் தந்திடலாம். அல்லது இஸ்லாமிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வல்லுநர்களுக்கு ஆராய்ச்சியின்போது உதவித் தொகையாகவும் தந்திடலாம். இதுபோன்ற செயல்களுக்கு உதவி செய்து ஊக்கம் தந்திடும் சமுதாய அமைப்புகளிடம் ஒப்படைத்திடலாம்.
சற்றேனும் உழைக்க முடிந்த முஸ்லிமைவிட, சற்றும் உழைக்க முடியாத அளவிற்கு வலுவிழந்தவிட்ட முஸ்லிமிற்கே ஜகாத் கொடுப்பதில் முதலிடம் தந்திட வேண்டும். ஜகாத்தைக் கொடுப்பவர் யாருக்கு முதலிடம் தரவேண்டும் என்பதை நன்றாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டும்.
இன்றைய நாட்களில் நாம் அரசாங்கத்திற்குச் செலுத்திடும் வரிகள், இந்த மார்க்கக் கடமைக்கு பதிலாகாது. இதை வரிகளுக்கு அப்பால் நின்று தனியாகவே தந்திட வேண்டும். வரியாக செலுத்திடும் பணத்தை ஜகாத்திலிருந்து கழித்திடக் கூடாது.
ஜகாத்தைக் கொடுப்பவர், இதை முதலாகக் கொண்டு பெயரும் புகழும் சாம்பாதித்திட விழைந்திடலாகாது. இதனை அவர் முடிந்த அளவிற்கு மறைவாக நிறைவேற்றிட வேண்டும். இல்லையேல் அவர் புகழாசையால் பீடிக்கப்படுவார். இந்த ஆசையால் பீடிக்கப்பட்டவர்கள், தங்களது நல்ல செயல்களின் பலன்களை இழந்தே விடுவார்கள். ஆனால் கொடுப்பவரின் பெயரை பிறரறியச் செய்வதனால், இன்னும் பலர் ஊக்கம் பெற்று ஜகாத்தைக் கொடுத்திட முன்வருவார்களேயானால், கொடுப்பவர் பெயரை வெளிப்படுத்துவதில் தவறில்லை.
கால்நடைகள், விவசாயக் களஞ்சியங்கள் இவற்றிலிருந்து ஜகாத் கொடுத்திட வேண்டும். இவைகளிலிருந்து கொடுத்திட வேண்டிய ஜகாத்தின் அளவு பொருளுக்குப் பொருள் மாறும். ஆகவே இது குறித்து விரிவானதொரு விளக்கம் தேவைப்படுகின்றது. அதை விரிவான மார்க்க நூல்களில் பெறும்படி, வாசகர்கள் கோரப்படுகின்றார்கள்.