சனி, 31 டிசம்பர், 2011

புத்தாண்டு கொண்டாடலாமா?


முஸ்லிம்கள் புத்தாண்டு கொண்டாடலாமா?

மனிதன் சந்தோசத்திற்கு எப்போதுமே அடிமை தான். மகிழ்ச்சிக்காக மனிதன் படாதபாடுபடுவதை கண்கூடாகக் கண்டிருக்கிறோம். அதே நேரம் ஒவ்வொரு மனிதனைப் பொறுத்தவரையிலும் சந்தோசத்தைத் தரும் விடயங்கள் வித்தியாசப்படுகின்றன. தனி நபர் சந்தோசத்தை விட ஒரு சமூகத்தின் மகிழ்ச்சி தான் முக்கியமான ஒன்றாகும்.

ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் அந்தந்த மதத்தோடு தொடர்பான பண்டிகைகள், கொண்டாட்டங்கள் குட்டிப்போட்ட பூனையைப் போல் வருடாவருடம் சுற்றிச் சுற்றி வந்துக் கொண்டேயிருக்கின்றன. அந்த வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை, பரவலாக கிறிஸ்தவர்களால் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் கடைசிப் பகுதியில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
எனவே முஸ்லீம்களாகிய நாம் எல்லா நிலைகளிலும் இஸ்லாத்தின் நிழலின் கீழ் நின்று தான் எந்த ஒரு விடயத்தையும் அணுகவேண்டும் என்ற கட்டாய நிலை இருக்கின்றது. ஏனென்றால் நாம் மறுமையை மையமாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிச்செல்பவர்கள்.
உலகில் கிடைக்கும் சந்தோசத்தை இழந்து விடக்கூடாது என்ற நிலை இருக்குமேயானால் கிறிஸ்மஸ் பண்டிகையில் முஸ்லீம்களும் பங்குகொள்ளலாமா? என்ற கேள்விக்கு விடைகாணத்தான் வேண்டும்.

கிரிஸ்தவர்கள் ஈசா (அலை) அவர்களை கடவுளாக வணங்கிக்கொண்டிருக்கின்றனர். ஈசா (அலை) அவர்கள் பிறந்த நாளை ஆண்டின் துவக்க நாளாக கருதுகிறார்கள். எனவே அந்த நாளை புனித நாளாக கொண்டாடுகின்றார்கள். கிரிஸ்தவர்களின் இக்கலாச்சாரம் உலகம் முழுவதும் புத்தாண்டு என்றப் பெயரில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஈசா (அலை) அவர்கள் எந்த நாளில் எப்போது பிறந்தார்கள் என்பதற்கோ அவர்களுக்கு எப்போது விருத்தசேதனம் செய்யப்பட்டது என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை.

எனவே புத்தாண்டு கொண்டாட்டம் கிரிஸ்தவர்களின் மத நம்பிக்கையுடன் ஒத்துப்போவதால் இவ்விஷயத்தில் அவர்களுக்கு ஒப்பாக நாம் நடக்கக்கூடாது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (மாற்று) சமூகத்தினருக்கு ஒப்பாக நடப்பவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை. அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : அபூதாவுத் (3512)

மேலும் புத்தாண்டு கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் உள்ளது. புதிய ஆண்டு துவங்குவதால் இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவிற்கு அதில் என்ன மகிழ்ச்சி அடங்கியிருக்கின்றது? புதிய ஆண்டு துவங்குவதால் மக்களுக்கு என்ன நன்மை ஏற்பட்டிருக்கின்றது?

ஆண்டின் துவக்கம் சந்தோஷமாக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் சந்தோஷமாக இருக்கலாம் என்ற மூட நம்பிக்கையே இந்த கொண்டாட்டத்திற்கு அடிப்படை.

இஸ்லாம் நமக்கு இரண்டு நாட்களையே கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக ஆக்கியுள்ளது. தேவையற்ற கொண்டாட்டங்களை தடைசெய்கின்றது.

மதீனாவாசிகள் எந்த ஒரு அடிப்படையும் இன்றி இரண்டு நாட்களை கொண்டாட்டத்திற்குரிய நாட்களாக கருதிவந்தனர். இதை கைவிட்டுவிட்டு நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளக ஆக்கிக்கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள். (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன. அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபி (ஸல்) கேட்டார்கள். அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்இ அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான். அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள். நூல் : அபூதாவுத் (959)

புத்தாண்டு என்ற மேலைநாட்டுக் கலாச்சாரம் நம் நாட்டில் ஊடுருவியதன் விளைவு அன்றைய நள்ளிரவில் விபச்சாரமும் மதுவும் தலைவிரித்து ஆடுகின்றது. பெண்கள் ஒழுக்கம் கெட்டு நடக்கின்ற கேவலமும் இந்நாளில் அரங்கேறுகின்றது. வானவெடிகள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை நாசமாக்கப்படுகின்றது. இவ்வளவு அனாச்சாரங்களும் புத்தாண்டு என்ற பெயரிலேயே நடக்கின்றன. எனவே புத்தாண்டை நாம் புறக்கணிக்க வேண்டும்.

புத்தாண்டு கொண்டாட்டம் மார்க்கத்திற்கு மாற்றமான காரியம் என்பதால் அதற்காக வாழ்த்துச் சொல்வதும் கூடாது. புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று கூறினால் புத்தாண்டை நாம் ஆதரித்ததாக ஆகிவிடும்.

ஆங்கிலப்புத்தாண்டு கொண்டாடுவது தான் மார்க்கத்தில் தடை. நாம் முஹர்ரம் முதல் நாளை இஸ்லாமிய அடிப்படையில் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று தவறாக விளங்கிக்கொண்டு 'முஹர்ரம் பிறை 1 அன்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறும் வழக்கமும் சில இடங்களில் உள்ளது'

மேற்கூறப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் 'இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்கள்' என்று சொல்வதும் அதை கொண்டாடுவதும் தவறாகு

வியாழன், 29 டிசம்பர், 2011

இதோ ஒரு கணம் சிந்திப்பீர்! நாம் முஸ்லிம்களா ?



1. அங்கே சிலை வணக்கம் : இங்கே கப்ரு வணக்கம்

2. அங்கே தேர் திருவிழா : இங்கே சந்தனக்கூடு

3. அங்கே பால் அபிசேகம் : இங்கே சந்தன அபிசேகம்

4. அங்கே சாம்பல் திருநீறு : இங்கே சந்தனத் திருநீறு

5. அங்கே சிலைக்குப்பட்டுப்புடவை : இங்கே கப்ருக்குப்பட்டுத்துணி

6. அங்கே பூமாலை பத்தி ஆராதனை : இங்கேயும் பூமாலை பத்திகள்

7. அங்கே குத்துவிளக்கு : இங்கேயும் குத்து விளக்கு

8. அங்கே அம்மன் முன் சாஷ்டாங்கம்: இங்கே கப்ரின்முன் சாஷ்டாங்கம்.

9. அங்கே கோயிலைச் சுற்றி வருதல் : இங்கே கப்ரை சுற்றி வலம்வருதல்

10. அங்கே சர்க்கரை கற்கண்டு பிரசாதம்: இங்கே சர்க்கரை பாயாசம் தபர்ருக்

11. அங்கே நேர்ச்சை காணிக்கை : இங்கேயும் நேர்ச்சை காணிக்கை

12. அங்கே சாமியிடம் வேண்டுதல் : இங்கே கப்ரிலே வேண்டுதல்

13. அங்கே பிள்ளைக்காக பூஜை : இங்கே பிள்ளைக்காகப் பிரார்த்தனை

14. அங்கே குழந்தைக்காக தொட்டில் : இங்கேயும் தர்காவில் தொட்டில்

15. அங்கே திருப்பதி மொட்டை : இங்கேயும் தர்காவில் மொட்டை.

16. அங்கே மயிலிறகு மந்திரம் : இங்கேயும் மயிலிறகு ஆசீர்வாதம்

17. அங்கே தீட்சை : இங்கே முரீது, பைஅத்

18. அங்கே மஞ்சள் கயிறு தாலி : இங்கே தங்கம்-கருக மணித்தாலி

19. அங்கே பக்திப்பாடல் : இங்கே மவ்லிது ராத்தீபு பைத்து

20. அங்கே சுப்ரபாதம் : இங்கே ஞானப்பாடல்.

21. அங்கே ஜோதிடம், ஜாதகம் : இங்கே பால்கிதாபு, இஸ்முகிதாபு

22. அங்கே நல்ல நாள், ராவு காலம் : இங்கே நஹ்ஸு நாள், ராவு காலம்.

23. அங்கே மார்கழி மாதம் பீடை : இங்கே ஸஃபா மாதம் பீடை

24. அங்கே கழுத்தில் கையில் தாயத்து : இங்கேயும் கழுத்தில், கையில் தாவீசு

25. அங்கே சாமி ஆடுவார் : இங்கே பே ஆடும்.

26. அங்கே சாமி அருள் வாக்கு : இங்கே அவ்லியா கனவில் அருள்வாக்கு.

27. அங்கே தீமிதி உண்டு : இங்கேயும் முஹர்ரம் மாதத்தில் தீமிதி உண்டு.

28. அங்கே திதி திவசம் : இங்கே ஃபாத்திஹா, கத்தம்.

29. அங்கே சரஸ்வதி, லட்சுமி படங்கள் : இங்கே நாகூர், அஜ்மீர் படங்கள்,

30. அங்கே துவஜா ரோகனம் கொடி : இங்கே நாகூர் அஜ்மீர் கொடியேற்றல்.

31. அங்கே வீட்டு முகப்பில் ஓ மந்திரம் : இங்கே வீட்டில் 786 மந்திரம்.

32. அங்கே விநாயகர் ஊர்வலம் : இங்கே மீலாது, யானை ஊர்வலம்.

33. அங்கே காவடி ஊர்வலம் : இங்கே அல்லாஹ்சாமி ஊர்வலம்.

இவை மட்டுமா? இன்னும் எத்னை எத்தனையோ? சடங்குகள் !

இவ்வாறு ஆயிரமாயிரம் மதச்சடங்குகள் நம்மிடம் புரையோடிப் 

போய்விட்டன. நவூது பில்லாஹ்! வல்லான் அல்லாஹ் நம் சமுதாய 

மக்களைக் காப்பானாக! இப்போது சொல்லுங்கள்! நம்மிடம் இஸ்லாம் 

இருக்கிறதா? நாம் இஸ்லாத்தில் இருக்கிறோமா? நாம் முஸ்லிம்களாக 

வாழ்கிறோமா? போலிகளாக வாழ்கிறோமா?


புதன், 28 டிசம்பர், 2011

இறை நேசர் என்பவர் யார்?


இறை நேசர் என்பவர் யார்?

Post image for இறை நேசர் என்பவர் யார்?

இறைவனால் நேசிக்கப்படும் நேசர்களே இறை நேசர்களாவர்! எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரன்புக்கு உகந்தவர்கள் யார் என்பது இறுதித் தீர்ப்பு நாளில் அன்றோ தெரியும்! இவர், இவர் தாம் இறைநேசச் செல்வர்கள் என்னும் பட்டியலை இறுதி தீர்ப்பு நாளன்று தானே அல்லாஹ் வெளியிடுவான்.
இந்தப் பாமரர்கள், குறிப்பிட்ட கப்ருவாசிகளை இறைநேசர்கள் என்று எவ்வாறு உய்த்துணர்ந்தார்கள்? தர்காஹ்களுக்குள் அறைப்பட்டுக் கிடப்பவர்தான் இறைநேசர்’ என்றால் உலகில் வாழ்ந்த வாழ்கின்ற வாழப் போகின்ற முஸ்லிம்கள் – மூமின்கள் அனைவரும் ஷைத்தானுடைய நேசர்களா? தங்களை ஷைத்தான்களுடைய நேசர்கள் என்று கருதிக் கொள்பவர்கள் தாமே, குறிப்பிட்ட புதைக் குழிக்குள் அடங்கி இருப்பவரை இறைநேசராகப் போற்றிக் கொண்டாடுவார்! என்னே மதியீனம்?
அல்லாஹ் தன் வான் மறையிலே மிகத் தெளிவாக இறைநேசர்கள் என்பவர் எப்படிப்பட்ட தகுதியை உடையவர்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறான்.
அல்லாஹ் எவரை நேசிக்கின்றான்?
“அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்; இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்; இன்னும் நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை – நன்மை செய்வோரை நேசிக்கின்றான்” (21:95)
இவ்விறைவசனத்தில் மூன்றுவகை இறைநேசர்கள் பற்றி கூறப்படுகின்றது.
1) அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்பவர்களை, அல்லாஹ் “இறைநேசர்” எனக் குறிப்பிடுகின்றான்.
2) தங்கள் கைகளாலேயே தங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதவர்களை “இறைநேசர்” என அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
3) நன்மை செய்வோரை அல்லாஹ், “இறைநேசர்” எனச் சுட்டிக் காட்டுகின்றான்.
நாம் ஒன்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். சமுதாயத்துக்கு எந்த வகையிலும் பயன்படாத, ஞானிகளைப் போல்(?) பச்சைப் போர்வையுடன் (மெளனம் சாதித்து) அலைந்து திரிந்தவர்களை, வலியுல்லாஹ் (அல்லது) இறைநேசர் என்று பாமர மக்கள் முத்திரைக் குத்தி அவர்கள் இறந்தவுடன் அடக்கம் செய்து, சமாதி எழுப்பி “தர்காஹ்” பித்துக் கொண்ட சில தனவந்தவர்களின் உதவியுடன் சில லட்சங்களில் பெரிய கட்டடம் கட்டி ஆண்டு தோறும் பூஜைகள் – தேர் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அல்லாஹ்வே ‘வலீ” (பாதுகாவலன்) என்பதைக் கூட உணராத பாரமரர்களிடம் “வலீயுல்லாஹ்” என்பதாக தனி மனிதரைச் சுட்டிக் காட்டி. உண்டியல்களை நிரப்பி, பாவங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால், மொட்டை அடித்து, உடம்பில் அறவே ஆடையில்லாமல் அம்மணமாகத் திரிந்த ஒருவர் பாமரர்களால் இறைநேசராகக் கருதப்படுகின்றார். வாய்ப்பேசாமல் (மெளனியாக) அழுக்கு நிறைந்த ஆடையுடன் திரிந்த கையேந்திய மக்களுக்கு சர்க்கரை என்று மண்ணை அளிக் கொடுத்தவர் இறைநேசச் செல்வராக கருதப்படுகின்றார். “மகான் வாயிலிருந்து வரும் வார்த்தைகளால் தங்கள் துயரங்கள் நீங்காதா?” என்று தேட்டத்துடன் நாடி வந்த மக்கள் முன்னால், சொல்லவே நாகூசுகின்ற கெட்டவார்த்தைகளால் (பெண்களை கண்டபடி) ஏசியவர் இறைநேசராக அங்கீகரிக்கப்படுகின்றார். அமர்ந்து இருக்கும் நேரமெல்லாம் சீட்டு விளையாடி (சூதாடி), பீடி புகைத்துக் கொண்டு, எதுவும் பேசாமல் தெருவில் நடந்து போகும்போதே, தன் பைஜாமாவை இறக்கி, சாக்கடையில் மலம் கழித்து விட்டு, சுத்தம் செய்யாமல் பைஜாமாவைக் கட்டிக் கொண்டவர் இன்றைக்குப் பெரிய நகரம் ஒன்றில் அடக்கம் செய்யப்பட்டு இறைநேசராக ஏற்றிப் போற்றப்படுகின்றார். நான் கற்பனையாகக் கூறவில்லை. நடந்த உண்மைச் சம்பவங்களை நினைவில் வைத்தே சுருக்கித் தந்துள்ளேன்.
இவர்களும் இறைநேசர்களே!
“……..யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள்) உறுதியாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்” (3:76)
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுபவர்களையும், எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு அஞ்சி நடப்பவர்களையும் அல்லாஹ் தன்னடைய நேசர்களாக அறிவிக்கின்றார்கள்.
“(பயபக்தியுடையொர் எத்தகையோரென்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர, கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை) களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்” (3:134)
செல்வ நிலையிலும், ஏழ்மையிலும் அல்லாஹ்வின் பாதையில் செலவிடுபவர்களை அல்லாஹ், இறைநேசர்கள் எனக் கூறுகின்றான். தம்முடைய கட்டுக்கடங்காத கோபத்தை அடக்கிக் கொள்பவரை “இறை நேசர்” என அறிமுகப்படுத்துகின்றான். தனக்கு எதிராக ஒருவன் செய்யும் குற்றங்களை (குற்றம் செய்தவர்களை) மன்னிப்பவர்கள் இறை நேசர்களாகும் தகுதியைப் பெறுகின்றார்கள்.
“மூமின்களில் இருசாரர் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விரு சாரர்களுக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரர் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்தவர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில் (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால், உறுதியாக அவ்விரு சாரரிடையே சமாதானம் உண்டாக்குங்கள்”. (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்துக் கொள்ளுங்கள். உறுதியாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கின்றான்.” (49:9)
“எவர்கள் ஈயத்தால் வார்க்கப்பட்ட கெட்டியான கட்டடத்தைப் போல் அணியில் நின்று, அல்லாஹ்வுடையப் பாதையில் போரிடுகிறார்களோ , நபி அவர்களை உறுதியாக(அல்லாஹ்) நேசிக்கின்றான்” (61:4)
அல்லாஹ்வின் நல்லடியார்களே! இறைநேசர்கள் யார்? யார்? என்பதை இச்சிறு கட்டுரையின் மூலம் ஓரளவுக்குச் சுட்டிக் காட்டியுள்ளேன். எல்லாம் வல்ல அல்லாஹ், அவன் உவக்கும் இறைநேசர்களாக நம்மனைவோரையும் ஆக்கி பேரருள் புரிவானாக! (ஆமின்

திங்கள், 26 டிசம்பர், 2011


வன்மையாக கண்டிக்கிறோம்


அன்பு நிறைந்த அடியக்கமங்கலம் முஸ்லிம்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
இந்த கடிதம் இஸ்லாமிய சிந்தனையோடும், நடுநிலை சிந்தனையோடும் உங்கள் அனைவரையும் சந்திக்கட்டுமாக.
 நமதூரில் பல ஆண்டுகளுக்கு முன் அல்லாஹுவின் மார்கத்தில் தடை செய்யப்பட்ட அனாச்சாரமான சினிமா கச்சேரி வான வேடிக்கை மற்றும் நடனம் நாட்டிய குதிரைகள் இன்னிசை பாடல் திருமணத்தில் கேலி பாடல்கள் பாடுவது போன்ற இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்ட நிகழ்ச்சிகளை ஊரின் நலன் கருதி தடை செய்தார்கள் 
இதனை தமிழக முஸ்லிம் ஊர்களுக்கெல்லாம் முன்மாதிரியான 
முஸ்லிம் கிராமம் அடியக்கமங்கலம் 
என மறுமலர்ச்சி இஸ்லாமிய வார இதழ் தலையங்கம் எழுதியது அல்ஹம்துலில்லாஹ் பல இஸ்லாமிய நாடுகளில் கூட போடமுடியாத ஒரு தடை சட்டத்தை நிறை வேற்றிய அல்லாஹுவின் அருள் பெற்ற ஊராக திகழ்ந்து வந்த நமதூரில் கடந்த இரண்டு வருடமாக இஸ்லாமிய இன்னிசை கச்சேரி என்ற பெயரில் மார்க்கத்தில் தடை செய்யபட்ட வல்லமை மிக்க அல்லாஹுவிடம் கடுமையான தண்டனைக்குரிய பாவமான நபி(ஸல்)அவர்களால் சபிக்கப்பட்ட கூத்து கச்சேரிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுவருகின்றன இதனை அல்லாஹுக்காக மிக மிக மிக வன்மையாக கண்டிக்கிறோம் இந்த பாவமான நிகழ்ச்சிகளுக்கு யாரெல்லாம் ஆதரவு கொடுத்தீர்களோ பொருளாதார உதவி செய்கிறீர்களோ இன்னும் யாரெல்லால்ம் முன்னின்று நடத்துகிறீர்களோ யாரெல்லாம் இந்தகூத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டீர்களோ சகோதரர்களே அல்லாஹுவிடம்அழுது பாவமன்னிப்பு தேடி கொள்ளுங்கள் மவ்த்து எந்நேரமும் நம்மை வந்து சேரும் மரணத்திற்கு பிறகுள்ள வாழ்கையை எண்ணி பாருங்கள் தனி மனிதனின் தவறுகள் அவனை மட்டுமே சாரும் ஆனால் பலரும் சேர்ந்து செய்யும் பாவமான காரியம் பாவத்தில் செய்த செய்ய தூண்டிய மற்றும் பாவத்தை தடுக்காத அனைவரின்மீதும் அல்லாஹுவின் தண்டனை இறங்கி விடும் கருணை மிக்க அல்லாஹ் நம் அனைவரையும் மன்னிப்பானாகஆமின் என்று பிராத்திப்பதோடு பாவமான கச்சேரி நிகழ்ச்சியை அல்லாஹுவின் தண்டனையை அஞ்சி அல்லாஹுவுக்காக உடனே தடை செய்யுமாறு அடியக்கமங்கலம் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கிறோம் 
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் நாளை மறுமை நாளில் ஒவ்வொரு மனிதனும் பொருளாதாரத்தை எவ்வாறு சேர்த்தான்  எவ்வாறு செலவு செய்தான் என வினவப்படுவான் என்றார்கள் 
அன்பு நிறைந்த சகோதரர்களே நாம் அல்லாஹுவை அஞ்சி நன்மக்களாக வாழ்வோமாக மேலும் கச்சேரி நிகழ்ச்சியை தடை செய்ய உங்களின் மேலான ஆலோசனைகளை எங்களுக்கு தெருவிக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் ஆலோசனை வழங்கும் யாருடைய பெயரையும் அவர்களின் அனுமதுயின்றி வெளியிட மாட்டோம் என உறுதி அளிக்கிறோம் 
முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?

இந்திய விடுதலைக்கு வித்திட்ட அல்லாமா இக்பால் கூறுகிறார்:-
‘முஸ்லிம்கள் முஸ்லிம்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!
செயல்களில் சம்பிதாயச் சடங்குகளில நாம் இந்துக்களாக வாழ்கிறோம்.
ஆடைகளில் கலாச்சாரங்களில் மேலை நாட்டு மோகத்தில் கிறித்தவர்களாக வாழ்கிறோம்! வாணிபத்தில் வியாபார முறைகளில் யூதர்களாக வாழ்கிறோம்! அவ்வாறாயின் முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்? ‘முஸ்லிம்கள் எங்கே இருக்கிறார்கள்?’
‘அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டே (அவனுக்கு) இணையும் கற்பிக்கிறார்கள்.’ (அல்-குர்ஆன்12:106) என்ற மறை வசனமும்,
‘யார் எந்த சமுதாயத்தைப் பின்பற்றி வாழ்கிறார்களோ அவர்கள் அந்த சமுதாயத்தைச்சார்ந்தவர்களே!’ (நூல் அபூ தாவூது) என்ற நபி மொழியும் இன்று மிகவும் சிந்திக்க வேண்டிய வைர வரிகள்!
இவற்றையெல்லாம் அசை போட்டு சிந்தித்து சீர்தூக்கி நமது அறிவிற்கேற்ற உயரிய மார்க்கமாம் தூய இஸ்லாத்தை வழுவாது பின்பற்றி குர்ஆன் சுன்னாஹ் வழியில் உண்மை முஸ்லிம்களாக வாழ்வோமாக!

வியாழன், 15 டிசம்பர், 2011

‘பித்அத்’களை எதிர்ப்பது பயங்கரவாதமா?



கான் பாகவி
முஸ்லிம்கள் பிறந்தநாள் கொண்டாடுவதுதிருமணநாள் கொண்டாடுவதுநினைவுநாள் அனுசரிப்பதுமுஹர்ரம் மாதத்தில் தீ மிதிப்பதுபஞ்சா எடுப்பதுஇறைச்சி கூடாது என நம்புவது,தர்ஹாக்களில் சந்தனக்கூடு தூக்குவதுசமாதிகளைச் சுற்றிவருவது,அங்கு குழந்தைகளை உருட்டிவிடுவதுசமாதிகளுக்கு சஜ்தா (சிரவணக்கம்) செய்வதுகுழந்தைவரம் கேட்பதுதிருமண வரன் கேட்பதுகுழந்தைகளின் பிறந்தமுடி எடுத்து காணிக்கை செலுத்துவது,ஷைகுகள் மற்றும் பெரியவர்களின் கால்களைத் தொட்டுஅல்லது கால்களில் விழுந்து ஆசி கேட்பதுசிலவேளைகளில் அவர்களையே வணங்குவதுபெண்கள் ஷைகுகளின் கரம் பற்றி நல்லாசி பெறுவதுகத்னா (சுன்னத்) ஊர்வலம் நடத்துவதுதிருமணத்தில் பந்தல்கால் நடும் வைபவம்காதுகுத்து விழாமஞ்சள் நீராட்டு விழா,இறந்தவர்கள் பெயராலும் திருமணத்தை முன்னிட்டும் நடத்தப்படும் சில சடங்குகள்... இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
இவையெல்லாம் என்னஇவற்றுக்கும் இஸ்லாத்திற்கும் என்ன தொடர்புஇவையெல்லாம் நபிவழிகளாகுறைந்தபட்சம் மார்க்கம் இவற்றை அனுமதிக்கின்றதா? ‘பரக்கத்’ (வளம்) வேண்டி செய்யப்படும் இவற்றால் இறையருள் கிட்டுமாஅப்படி கிட்டும் என்றால்இறைவனோ இறைத்தூதரோ இறைத்தூதரின் அன்புத் தோழர்களோ சான்றோர்களோ யாராவது இவற்றைச் சொல்லியிருப்பார்களாஇல்லையா?
இதுபோன்ற கூத்துகளுக்கு மார்க்கத்தில் ஏதேனும் முன்மாதிரி இருக்க வேண்டுமாஇல்லையாஇவற்றைச் சொந்த விருப்பத்திற்காக -வாழையடி வாழையான ஒரு சம்பிரதாயத்திற்காக- பெண்கள் அடம்பிடிக்கிறார்கள் என்பதற்காகச் செய்கிறோம்மார்க்கத்தின் பெயரால் அல்ல என்கிறீர்களா?
இந்தச் சடங்குகளால் நன்மை கிடைக்கும்அல்லது ஆபத்து அகலும் என்று நம்புகிறீர்களாஇல்லையா?இந்த நம்பிக்கைஉங்களது ஏகஇறை நம்பிக்கைக்கு,இறைத்தூதர்மீது கொண்ட நம்பிக்கைக்குகுர்ஆன்மீது கொண்ட நம்பிக்கைக்கு முரண்படுகிறதே! என்ன செய்வீர்கள்அந்த நம்பிக்கையே இல்லை என்றாலும்,சடங்குகளுக்காகச் செலவழிக்கப்படும் பணம்நேரம்,உழைப்பு எல்லாம் வீண்தானே! இதற்கு மறுமையில் என்ன பதில் சொல்வீர்கள்?
ஆகமார்க்கம் சொல்லாதஅல்லது மார்க்கத்தில் முன்மாதிரி இல்லாத ஒன்றை மார்க்கத்தின் பெயரால்,அல்லது நன்மையைக் கருதி உருவாக்குவதும் அதைக் கடைப்பிடிப்பதும்தான் பித்அத்’ (அநாசாரம்) எனப்படுகிறது.
பித்அத் என்றால் என்ன?
பித்அத்’ எனும் அரபிச் சொல்லுக்கு, ‘முன்மாதிரியின்றி ஆரம்பிக்கப்பட்ட செயல்’ என்பது சொற்பொருளாகும். இஸ்லாமிய வழக்கில்மார்க்க ஆதாரமோ அடிப்படையோ இல்லாத செயலுக்குபித்அத்’ என்பர். வணக்கவழிபாடுகள்மார்க்க அடையாளங்கள்மார்க்க விதிமுறைகள் ஆகியவற்றில் மக்களாக உருவாக்கும் நடைமுறைதான் பித்அத் எனப்படுகிறது.
புதிதாக உருவாக்கப்படும் பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள்சமாதிகளில் நடக்கும் அநாசாரங்கள்புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் தொழுகைகள் மற்றும் நோன்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால்அது நிராகரிக்கப்படும். (புகாரீ)
மற்றொரு ஹதீஸ் இவ்வாறு எச்சரிக்கின்றது: உரைகளில் சிறந்தது இறைமறை;நடத்தைகளில் சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்கள் காட்டிய நடைமுறை;செயல்களிலேயே தீயது புதிதாக உருவாக்கப்படுவதுதான். புதிதாக உருவாக்கப்படும் (பித்அத்) ஒவ்வொன்றும் தவறான வழியாகும்தவறான ஒவ்வொரு வழியும் நரகத்திற்குச் செல்லும். (முஸ்லிம்நஸயீ)
ஆக, ‘பித்அத்’ எனும் சொல்லுக்கு அநாசாரம்குருட்டு நம்பிக்கைநவீன சித்தாந்தம் என்றெல்லாம் பொருள் செய்யலாம். இது எவ்வளவு பெரிய கேடானது என்பதற்கு நபிமொழிகளும் சான்றோரின் சொற்களும் ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ்,ஒவ்வொரு பித்அத்வாதியிடமிருந்தும் பாவமன்னிப்பை (தவ்பா) தடுத்துவிடுகிறான். (தப்ரானீஷுஅபுல் ஈமான்)
ஹஸ்ஸான் பின் அத்திய்யா (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்: ஒரு கூட்டம் தம் மார்க்க விஷயங்களில் அநாசாரம் ஒன்றை உருவாக்கினால்அதன் இடத்தை வகிக்கும் நபிவழியான சுன்னத்தை அல்லாஹ் அகற்றாமல் இருப்பதில்லை. பிறகு மறுமை நாள்வரை அந்த நபிவழி அவர்களிடம் திரும்பிவருவதே இல்லை. (தாரிமீ)
கப்றுகளில் சஜ்தா
அநாசாரங்களிலேயே மிகவும் கேடானது அல்லாஹ் அல்லாத பொருட்களுக்கு -மனிதருக்கோ சின்னத்திற்கோ கட்டடத்திற்கோ- சஜ்தா’ எனும் சிரவணக்கம் செய்வதுதான்.
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: அல்லாஹ்வுக்கே சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள்; (அவனையே) வழிபடுங்கள். (53:62)
அல்லாஹ்வையே வழிபடுங்கள்அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (4:36)
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (இராக்கிலுள்ள) அல்ஹீரா’ எனும் ஊருக்குச் சென்றிருந்தேன். அங்குள்ள மக்கள்தங்களிடையே இருந்த ஒரு மாவீரனுக்கு சஜ்தா செய்வதைக் கண்டேன். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தா செய்யப்படுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள்’’ என்று (மனத்துக்குள்) சொல்லிக்கொண்டேன்.
நான் மதீனா திரும்பிநபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். நான் அந்த ஊரில் கண்டதைச் சொல்லிவிட்டு, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் சஜ்தா செய்வதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர்களாயிற்றே?’’ என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நான் இறந்து அடக்கம் செய்யப்பட்டபின்) என் அடக்கத்தலம் அருகில் நீங்கள் செல்ல நேர்ந்தால்அதற்கு நீங்கள் சஜ்தா செய்துவிடுவீர்களா?’’ என்று வினவினார்கள். நான்இல்லை’ என்றேன்.
அப்போது நபியவர்கள், ‘‘அப்படிச் செய்துவிடாதீர்கள். (அதாவது நான் உயிரோடு இருக்கும்போதும் இறந்தபிறகும் எனக்கு சஜ்தா செய்ய வேண்டாம்.) ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு சஜ்தா செய்ய நான் கட்டளையிடுவதாக இருந்தால்கணவனுக்கு அதைச் செய்யுமாறு மனைவிக்கு உத்தரவிட்டிருப்பேன். பெண்கள் தம் கணவன்மார்களுக்கு அந்த அளவுக்குக் கடமைப்பட்டுள்ளார்கள்’’என்று விளக்கினார்கள். (அபூதாவூத்ஹாகிம்தாரிமீதாரகுத்னீஸஹீஹ் இப்னு ஹிப்பான்)
சஜ்தா செய்த ஒட்டகம்
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரிகளில் ஒரு குடும்பத்தாருக்கு ஓர் ஒட்டகம் இருந்தது. அதுதான் அவர்களின் தோட்டத்தில் நீர் இறைக்கும். ஒரு தடவை அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தது. நீர் இறைக்க மறுத்தது.
அந்த அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார்கள். நபியவர்கள் தம் தோழர்களிடம் எழுந்திருங்கள்’ ன்று சொல்லிவிட்டுதோட்டம் வந்துசேர்ந்தார்கள். ஒட்டகம் ஓர் ஓரத்தில் நின்றிருக்கஅதை நோக்கி நபியவர்கள் நடந்தார்கள். தோட்ட உரிமையாளர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! அது வெறிபிடித்த நாயாக மாறியிருக்கிறது. உங்கள்மீது பாய்ந்துவிடும் எனப் பயப்படுகிறோம்’’ என்று தடுத்தார்கள்.
ஆனால் நபியவர்கள்அதனால் எனக்கு எந்தத் தீங்கும் நேராது என்று சொல்லிவிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஒட்டகம் கூர்ந்து பார்த்துவிட்டுஅவர்களை நோக்கி நேராக வந்துஅவர்களுக்கு முன்னால் அப்படியே சரிந்து சஜ்தா செய்தது. பின்னர் அதன் நெற்றியில் வருடிக்கொடுத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அது அடங்கிவிட்டது. தன் பணியைத் தொடங்கியது.
இக்காட்சியைக் கண்ட தோழர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இதோ இந்த அறிவற்ற விலங்கு உங்களுக்கு சஜ்தா செய்கிறது. நாங்கள் ஆறறிவு உள்ளவர்கள். உங்களுக்கு சஜ்தா செய்ய நாங்களே பொருத்தமானவர்கள்’’ என்றார்கள்.
அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேசினார்கள்: எந்த மனிதரும் எந்த மனிதருக்கும் சஜ்தா செய்வது தகாது. அப்படித் தகும் என்றிருந்தால்பெண் தன் கணவனுக்கு சஜ்தா செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருப்பேன். அவனுக்கு அவள் அந்த அளவுக்குக் கடமைப்பட்டிருக்கிறாள்.
என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீதாணையாக! கணவனின் பாதத்திலிருந்து தலைவரை கொப்புளம் இருந்துஅதில் சீழும் சலமும் வடிந்துகொண்டிருக்கமனைவி வந்து அதைத் தன் நாக்கால் சுத்தம் செய்தாலும்கணவனுக்கு அவள் செய்ய வேண்டிய கடமை தீராது. (முஸ்னது அஹ்மத்)
என்ன செய்ய வேண்டும்?
அநாசாரங்களைத் தடுப்பதும்அநாசாரங்களுக்கு எதிராகப் பரப்புரை செய்வதும் கற்றறிந்தவர்களின் தலையாய கடமையாகும். அதை விட்டுவிட்டுசமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கின்ற குருட்டு நம்பிக்கைகளுக்கும் தவறான செயல்முறைகளுக்கும் பரிந்துபேசுவதும் வக்காலத்து வாங்குவதும் கடுமையான குற்றமாகும்பெரும்பாவமாகும். கற்றவர்கள் இவ்வாறு ஆதரவு தெரிவிப்பது சாமானியர்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துவிடும்அவர்கள் அநாசாரங்களிலிருந்து மீள வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.
ஒரு செயல் சரியாதவறா என்ற சர்ச்சை எழுந்துவிட்டால் நாம் செய்ய வேண்டியது என்னஇதோ அல்லாஹ்வே கூறுகின்றான்:
ஒரு விஷயத்தில் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால்அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புகிறவர்களாயின்அதை அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் விட்டுவிடுங்கள். இதுவே சிறந்ததும் நல்ல முடிவும் ஆகும். (4:59)
அதாவது இறைமறையிடமும் இறைத்தூதரின் வழியிடமும் விட்டுவிட வேண்டும். அல்லாஹ்வோ அவன் தூதரோ என்ன சொல்கிறார்களோ அதையே தீர்வாக ஏற்க வேண்டும்.
மற்றொரு வசனம்‘‘நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டாலும் அதன் முடிவு அல்லாஹ்விடமே உள்ளது’’ (42:10) என்று கூறுகின்றது.
இவ்வாறிருக்கஇறைவசனத்திற்கும் நபிமொழிகளுக்கும் மனவிருப்பத்திற்கேற்ப விளக்கமளிப்பதும்,அவற்றை வளைத்து ஒடிப்பதும் எவ்வாறு தகும்?
இது பயங்கரவாதமா?
தாருல் உலூம் தேவ்பந்த் அரபிக் கல்லூரி
எல்லாவற்றையும்விட பெரிய கொடுமை என்னவென்றால்குருட்டு நம்பிக்கைகளையும் அநாசாரங்களையும் யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களையெல்லாம் பயங்கரவாதிகள்’ என்று முத்திரை குத்த ஒரு கூட்டம் பிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதுதான்.
இதற்கு இவர்கள் கையாளும் தந்திரம் என்னவென்றால்அநாசாரங்களைச் சாடுபவர்கள் வஹ்ஹாபிகள்வஹ்ஹாபிகள் பயங்கரவாதிகள் என்ற சொத்தை வாதம்தான். அநாசாரங்களை எதிர்ப்பவர்கள் எல்லாரும் வஹ்ஹாபிகள் என்பது பொய்;வஹ்ஹாபிகள் எல்லாரும் பயங்கரவாதிகள் என்பதும் பொய்.
கடந்த மாதம் உத்திரபிரதேசம் மாநிலம் மொராதாபாத் நகரில் ஒரு மாநாடு நடந்தது. மாநாட்டின் பெயர்: சூஃபி மகா பஞ்சாயத்துக் கூட்டம். முக்கியப் பேச்சாளர்: மஷாயிக் வாரியத்தின் தலைவர். அவர் பேசியதுடன் மாநாட்டின் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்ட சில வரிகள்:
  • தேவ்பந்த் மதரசாஜம்இய்யத்துல் உலமா அமைப்புவஹ்ஹாபிஸம் எல்லாம் பயங்கரவாத இயக்கங்கள்.
  • இவர்களின் பிடியில் சிக்கியுள்ள பள்ளிவாசல்களையும் மதராசக்களையும் கைப்பற்ற வேண்டும்.
  • வக்ஃப் சொத்துகளை அவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது.
  • காங்கிரஸ் கட்சியை நம்பக் கூடாதுதோற்கடிக்க வேண்டும். இதற்காக மஷாயிக் வாரியம் அரசியலில் குதிக்க வேண்டும்.
அகில இந்திய மஷாயிக் வாரியம், பத்திரிகையாளர் சந்திப்பு
இந்தக் கூட்டத்தின் கோஷங்களும் தீர்மானங்களும் இந்துத்துவா சக்திகளுக்கு நல்ல ஊட்டச் சத்தாகும். இவ்வாறு ஒருவரை ஒருவர் பகைத்துக்கொண்டுஒருவர்மீது ஒருவர் தவறான குற்றச்சாட்டுகளைச் சுமத்திக்கொண்டுஇன்னும் சொல்லப்போனால்ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தால்,இரு பக்கமும் அழியப்போவது கலிமா’ சொன்ன முஸ்லிம்கள்தான்.
இது ஏன் இவர்களுக்குப் புரியவில்லைஅநாசாரங்களை எதிர்ப்பவர்கள் சமூக சீர்திருத்தவாதிகள் அல்லவாமூடநம்பிக்கைசமூகத்தீமை ஆகியவற்றைக் களைய பாடுபடுவோர் நாலு பேர் இருப்பதால்தான்சமுதாயம் சிறிதளவாவது மார்க்க வழியிலும் பகுத்தறிவு பாதையிலும் நடைபோட முடிகிறது.
உங்களுக்கு அநாசாரங்கள் பிடிக்கும் என்றால்அறிவால்வாதத்திறமையால்உண்மையால்,ஆதாரங்களால் நிரூபியுங்கள். அது முடியவில்லை என்பதற்காக பயங்கரவாத முத்திரை குத்துவதும் அபாண்டங்களைச் சுமத்துவதும்தான் நாகரிகமாகஅல்லது நீங்கள் சொல்லும் ஆன்மிகமா?
வெளியேற்றாதீர்கள்!
அதே நேரத்தில்பித்அத்களை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நிதானமிழந்து செயல்படுவோர் பற்றியும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். பித்அத்களை எதிர்க்கும் சாக்கில் சமுதாயத்தில் பிளவை உண்டாக்குவதையும் முஸ்லிம்களையே இஸ்லாத்திலிருந்து வெளியேற்றுவதையும் இவர்கள் தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். இது எப்படி நியாயமாகும்?
ஈமான்’ என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். பித்அத் செய்யும் ஒருவர்ஓரிறைக்கொள்கைஇணை கற்பிக்காமைமுஹம்மத் (ஸல்) அவர்கள்மீதான நம்பிக்கை முதலான அடிப்படைக் கோட்பாடுகளில் உறுதியாக இருந்தால்அவரை எப்படி இஸ்லாத்திலிருந்து வெளியேற்ற முடியும்இந்த உரிமையை இவர்களுக்கு வழங்கியது யார்?
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (முஸ்லிம்) சகோதரரை நோக்கி காஃபிரே!’ (இறைமறுப்பாளனே!) என்று கூறினால்,அவ்விருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராகத் திரும்புவார். (புகாரீ)
அதாவது காஃபிர் என்ற சொல்லுக்கு உண்மையிலேயே அவர் தகுதிபெற்றவராக இல்லை என்றால்,அச்சொல் சொன்னவரையே திருப்பித் தாக்கும்.
எனவேபரப்புரை (தஃவா) வெறுப்பேற்றக்கூடியதாக இருக்கலாகாதுசிந்திக்கத் தூண்டக்கூடிய வகையில் நளினமானதாகப் பிரசாரம் அமையம் வேண்டும். புரிந்துகொள்வார்களா...?

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

இஸ்லாமிய (அரபு) வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை இஸ்லாமிய சமூகம் சரிவர முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்றே கருத வேண்டியுள்ளது.
அதன் காரணமாகத்தான் இம்மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு வகையிலான அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் தமிழ் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கின்றி கூடுதலான பல அம்சங்களோடு அவற்றை கடமையான செயல்களைப் போல் நிறைவேற்றி வருவதை காண்கிறோம்.
இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவனவற்றில் பிரதானமான ஒன்று முஹர்ரம் ஒன்று முதல் பத்து வரை நடத்தப்படும் சடங்குகள், அவை தொடர்பான சம்பிரதாயங்கள். ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு போரைச் சுற்றியே இவை அமைந்துள்ளன. இதன் நினைவாக ஷியா பிரிவினரிடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என அறியப்பட்டவர்களிடத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவி உள்ளதை இங்கு வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.
முஹர்ரம் பத்தாம் நாளைப் பொறுத்த வரை, வேறு ஒரு காரணத்திற்காக நினைவுபடுத்தி அந்நாளில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க, நமது சமூகம் அதே நாளில் நோன்பிருந்து கொண்டு வேறு காரணங்களை கூறி வருவது வேதனையானது.
இஸ்ரவேலர்களிடமிருந்து நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் முஹர்ரம் பத்தாம் நாளில் காத்தருள் புரிந்ததற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்க, நமது சமூகமோ அந்நாளை துக்க நாளாக அனுஷ்டிப்பதும் அந்நாளில் ஹஸன் ஹுஸைனுக்காக நோன்பிருப்பதாக கூறிக் கொள்வதும் அறியாமை மாத்திரமல்லாமல், இணை வைப்புமாகும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ
 மன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும் (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 4031, அஹ்மத் 5114)
என்பது நபிமொழி. எவ்வித உருவ வழிபாட்டிற்கும் அனுமதி இல்லாத மார்க்கத்தில் கையை (ஐந்தை உருவகப்படுத்தி) வழிபாடு நடத்தக்கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான, ‘யார் பிற சமூக மக்களின் நடைமுறைகளை பின்பற்றுகின்றனரோ அவர்கள், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே’ என்ற வாக்கை எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளனர். மற்றும் ஒர் அறிவிப்பில், ‘அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களல்லர்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நபிமொழிகள் மூலம் அத்தகையோர் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவர்.
தீவிரமான ஷியா பிரிவு முஸ்லிம்களும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் படிப்படியாக தங்களது கை சின்னத்தை தெருமுனைக்கு கொண்டு வந்து முஹர்ரம் ஒன்று முதல் பத்து நாட்களும் சடங்கு செய்து வருகின்றனர் (இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்றவர்களால் வீதி முனைகளில் நிறுத்தப்பட்டுள்ள வினாயகர் சிலைகளைப் போல) தாயத்து, தட்டு போன்றவற்றை தொழிலாக செய்து வரும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் இந்த கை சின்னத்திற்கு பத்து நாட்களும் சாம்பிராணி சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன (பத்து நாட்களுக்கு வினாயகர் சிலைகள் பூஜை செய்யப்படுவது போல) பின் முஹர்ரம் பத்தாம் நாள் கொடூரமான ஆயதங்களால் தங்களை தாங்களே தாக்கிக் கொண்டு இந்த கை சின்னத்தை பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக பவனி வந்து ஒரிடத்தில் கூடி கலைகின்றனர். (வினாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் கரைத்து மாசுபடுத்தி பின்னர் கலைந்து செல்பவர்களைப் போல).
இங்கு நாம் சுட்டிக்காட்டியிருப்பது ஒப்பீட்டுக்காக மட்டுமே. அதுவும் ஒருசில விஷயங்களை மாத்திரமே. விரிவஞ்சி விளக்கங்களை தவிர்த்துள்ளோம். இந்த சிறிய ஒப்பீட்டில் இருந்தே இவை எந்த அளவிற்கு மாற்று மதத்தவரின் வணக்க வழிபாடுகளை ஒத்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இவை தெளிவான இணைவைப்பு என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.
சிலர் மேற்குறிப்பிட்ட சடங்குகளை தவிர்ந்து கொண்டாலும், வேறு சில வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அவற்றில் தமிழக கிராம அளவில் பிரசித்த பெற்ற ஹஸன் ஹுஸைன் ஃபாத்திஹா முக்கியமான ஒன்றாகும்.
முஹர்ரம் பத்தாம் நாள் அன்று கர்பலா யுத்தத்தின் நினைவாக அரிசி மாவில் கொழுக்கட்டைகள் செய்து அந்நாளில் (அப்போரில்) உயிர் நீத்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் பழக்கம் காலகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக அப்போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகளை உருவகப்படுத்த இக்கொழுக்கட்டைகள் உருண்டையாகவும் நீளமாகவும் உருவாக்கப்படுகின்றன. நாங்கள் பாஞ்சா (கை உருவத்தை) தூக்குவதில்லை என பெருமைப்பட்டுக் கொள்ளும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் இத்தகைய கை, கால், தலை கொழுக்கட்டைகளை உருட்டி (படையல்)விழா நடத்துக் கொண்டுள்ளனர்.
இச்சடங்கு சம்பிரதாயங்கள் சில இடங்களில் வெவ்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு. நமது நோக்கம் அவற்றை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அல்ல. எனவே பரவலாக அறியப்பட்ட இரு விஷயங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்.
பொதுவாகவே ஒரு பிதஅத் (தூதன அனுஷ்டானம்) நுழையுமானால், அங்கு ஒரு சுன்னத் (நபிவழி) மறைந்து விடும். இங்கே மேற்குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற அளவுகோலையும் தாண்டி, ஷிர்க் (இணை வைப்பு) என்கிற அபாய கட்டத்தை தொட்டு விடுகின்றன என்பதனை உணர (அ) உணர்த்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.
அப்படியானால், முஹர்ரம் மாதம் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழி வாயிலாக நமக்கு கிடைப்பது என்ன? என்பதனை முழுமையாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.
முதலாவதாக, அல்குர்ஆனைப் பொறுத்தவரை,
முழுவருடத்தின் நான்கு மாதங்களை போர் செய்ய தடை செய்யப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்களாக குறிப்பிடுகின்றது. அந்த நான்கு மாதங்கள் ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவைகளாகும்.
இன்னும் அத்தியாயம் அல்ஹஜ்ஜின் 32 ஆம் வசனத்தில் குறிப்பிடும் போது, ‘யார் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவரது உள்ளத்திலுள்ள தக்வாவின் அடையாளமாகும்’ என்று குறிப்பிடுகின்றான். அதே அத்தியாயம் 36 ஆவது வசனத்திலும் இதே போன்றே குறிப்பிடுள்ளதையும் காணலாம்.
அதேபோல், ஹதீஸைப் பொறுத்தவரை,
‘முஹர்ரம் மாதத்தை ‘அல்லாஹ்வின் மாதம்’ என ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2157)
‘முஹர்ரம் பத்தாம் நாள் நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2082)
‘முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் இதே காரணத்திற்காக நபி (ஸல்) அவர்கள் நோன்பிருந்து உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2083)
‘முஹர்ரம் 9 இலும், 10 இலும் நோன்பிருக்கும் படி தனது தோழர்களை அறிவுறுத்தி உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2088)
ஆக, முஹர்ரம் மாதத்தில் நாம் செய்யக்கூடிய அமல்களாவன: நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பிருப்பதும், அம்மாதத்தை கண்ணியப்படுத்தும் முகமாக திக்ருகளை நஃபிலான வணக்கங்களை அதிகப்படுத்துவதுமேயாகும்.
வல்ல அல்லாஹ் நமக்கு அத்தகைய பண்பையும் பக்குவத்தையும் தந்தருள்வானாக.