சனி, 26 பிப்ரவரி, 2011

சீரமைப்பின் அவசியம்


-அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தனமானது, அவனது அருளும், சாந்தியும் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழி நடந்த ஸஹாபாக்கள், தாபீயீன்கள் தபவுத்தாபியீன்கள் அனைவர் மீதும் நிலையான சாந்தியும், சமாதானமும் நிலைக்கட்டுமாக!

சீரமைப்பின் அவசியம்

முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் மார்க்கம் தொடர்பான முரண்பாடுகளை இனம் கண்டு அவற்றை காத்திரமான வழிமுறைகள் மூலம் சீரமைப்பது தகுதியும், அறிவும் உள்ள இஸ்லாமிய அழைப்பாளர்கள் மீதுள்ள கடமையாகும்.
முன்னோர்களான அறிஞர்கள் நம்மை விட அறிவிலும், ஒழுக்கத்திலும், சட்டங்களை அகழ்ந்தெடுப்பதிலும் தமது காலங்களைத் தியாகம் செய்தவர்கள், அவர்கள் தமது பொன்னான நேர காலங்களை ஏன்? எதற்காக தியாகம் செய்தார்கள், எந்த அடிப்படைகளை எட்டுவதற்காக தம்மை அற்பணித்தார்கள் போன்ற கேள்விகளை நமக்கு நாம் எழுப்பிக் கொள்வதால் மார்க்கம் தொடர்பான நமது முரண்பாடுகளுக்கும் அலட்சியமாக நாம் விட்டுவிடும் மார்க்க அமச்ங்களுக்கும் தீர்வு காண வழி பிறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சமூக நல்லிணகத்தையும், ஐக்கியத்தையும் காரணம் காட்டிக் கொண்டு செத்துப் போன பித்அத்துக்கள் உயிரோட்;டம் பெறுவதையும், சவக்குளிக்குள் தள்ளப்பட்ட மௌட்டீகங்கள் புத்துயிர் பெறுவதையும் சீரமைப்பு என்ற போர்வையில் அரங்கேறுவதை உண்மையான ஒரு அழைப்பாளன் அங்கீகரிக்கமாட்டான்.

وَمَا أُرِيدُ أَنْ أُخَالِفَكُمْ إِلَى مَا أَنْهَاكُمْ عَنْهُ إِنْ أُرِيدُ إِلَّا الْإِصْلَاحَ مَا اسْتَطَعْتُ وَمَا تَوْفِيقِي إِلَّا بِاللَّهِ عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ  [هود : 88]

நான் உங்களைவிட்டும் எதைத் தடுக்கின்றேனோ அதில் உங்களுக்கு மாறாக நடக்க எனக்கு விருப்பம் கிடையாது. முடியுமானவரை சீர் திருத்துவதையே நான் விரும்புகின்றேன். எனக்குரிய அருள்பாலிப்பு அல்லாஹ்வைக் கொண்டே நடந்தேறும், அவன் மீதே நான் பூரண நம்பிக்கை வதை;துள்ளேன், அவன் பக்கமே மீளுவேன் (ஹுத்: வசனம்: 88) என இறைத்தூதர்களில் ஒருவரான ஷுஐப் (அலை) அவர்கள் கூறினார்கள்.
அடிப்படை அம்சங்களில் நபிமார்கள் முரண்படவில்லை. முரண்பாடு என்பது சட்ட விவகாரங்களில்தான் ஏற்பட்டிருக்கின்றது

شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ  [الشورى : 13]

நூஹுக்கு எதனை நாம் (மார்க்கமாக) உபதேசித்தோமோ அதையும், உமக்கும், இப்ராஹீம், மூஸா, ஈஸா ஆகியோருக்கு எதனை வஹியாக அறிவித்தோமோ அதையே உமக்கு (அல்லாஹ்) மாரக்கமாக்கியுள்ளான். (அது) நீங்கள் (அனைவரும்) மார்க்கத்தை நிலை நாட்டுங்கள், அதில் பிரிந்துவிடாதீpர்கள் (என்பதாகும்).(அஷ்ஷுரா: வசனம்: 13).
இங்கு நபிமார்கள் அனைவரும் நிலைநாட்டிய மார்க்கத்தை முஹம்மத் நபிக்கும் மார்க்கமாக்கினான் எனக் கூறப்படுவது அடிப்படையான அம்சமான (தவ்ஹீதுல் உலூஹிய்யா) சார்ந்த வணக்க அம்சங்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். (பார்க்க: இப்னு கஸீர்). இதை பின்வரும் நபி மொழியின் மூலம் இன்னும் தெளிவாக அறியலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَوْلَى النَّاسِ بِعِيسَى ابْنِ مَرْيَمَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَالْأَنْبِيَاءُ إِخْوَةٌ لِعَلَّاتٍ أُمَّهَاتُهُمْ شَتَّى وَدِينُهُمْ وَاحِد (صحيح البخاري / باب قَوْلِ اللَّهِ { وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذْ انْتَبَذَتْ مِنْ أَهْلِهَا] (مسلم / فضائل عيسى عليه السلام)

மர்யமின் ஈஸாவிற்கு இம்மையிலும், மறுமையிலும் மிகவும் அருகதையயுடையவன் (நெருக்கமானவன்)நானே! நபிமார்கள் தந்தைவழிச் சகோதரர்கள், அவர்களின் அன்னையர் வௌ;வேறானவர்கள், அவர்களின் தீன் -மார்க்கம்- ஒன்றாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
இந்தச் செய்தியின் அடிப்படையில் நபிமார்கள் போதித்த அடிப்படை அம்சமான அத்தவ்ஹீத் எனப்படும் ஓரிறைக் கோட்பாட்டின் நபிமார்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒன்று என்பதையும், சட்டம் சார்ந்தவைகளில் வேறுபாடுகளும், வேற்றுமைகளும் காணப்பட்டுள்;ளன என்ற உண்மையினையும் புரிந்து கொள்ளலாம்.

கருத்து முரண்பாடுகள் காலத்தால் அழியாதவை

இதைக் காரணமாகக் கூறிக் கொண்டு முரண்பாடற்ற கருத்துக்களை முரண்பாடுள்ளவைகள் எனக் கூறி சமூகத்தில் மார்க்கமாக அங்கீகரிக்கலாமா? அதை அறிவார்ந்த வாதமாகக் கொள்ளலாமா என்று அறிஞர் பெருமக்கள் சிந்திக்க வேண்டும். இதைக் காரணம் காட்டி மார்க்க அங்கீகாரமற்ற எத்தைனையோ விடயங்கள் மார்க்கமாகிவிட்டன, எத்தனை நவீன அனுஷ்டானங்கள் தொடர் அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டன என்று சிந்திக்க வேண்டும்.

وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ

நீங்கள் எந்த ஒரு விஷயத்தில் முரண்பட்டாலும் அதற்கான தீர்வு அல்லாஹ்விடம் உண்டு (அஷ்ஷுரா. வச: 10.) என்ற வசனத்தின் அடிப்படையில் சிந்தித்தால் அந்த விதி முரண்பாடாகத் தெரியவில்லையா?

وَلَا يَزَالُونَ مُخْتَلِفِينَ  إِلَّا مَنْ رَحِمَ رَبُّكَ

உமது இரட்சகன் அருள் செய்;தவர்களைத் தவிர (ஏனைய) அனைவர்களும் தமக்குள் முரண்பட்டுக் கொண்டே இருப்பார்கள். ( ஹுத் : வசனம்:118,119). என்ற வசனம் முரண்பாடு அல்லாஹ்வின் அருளை இல்லாதொழிக்கும் சக்தியுடையது என்பதை அறிய வேண்டும்.

மலக்குமார்களே கருத்து முரண்பட்டுக் கொண்டனர் ???

நூறு கொலை செய்த மனிதனின் உயிரைக் கைப்பற்ற வந்த வானவர்களே தமக்குள் கருத்து முரண்பட்டுக் கொண்டனர் என ஒரு ஷேக் கூறி குசியாக்கினாராம் சபையை. இவ்வாறு கூறுவதால் அ மலக்குகள் தமக்குள் முரண்பட்டுக் கொண்டனர் என்று முடிவுமில்லை, அவர்களின் முரண்பாட்டிற்கு தீர்வு இல்லாதிருந்தது என்ற அர்த்தமும் இல்லை.
மாற்றமாக, யார் இவ்வாறு கூறுகின்றார்களோ அவர்களே தொடர்ந்தும் முரண்பாட்டை விரும்புகின்றனர், தீர்வை விரும்பவில்லை என்பது அர்த்தமாகும். மலக்குகளின் முரண்பாட்டிற்கு அதில் தீர்வு எட்டப்பட்டது போல முரண்பாடானவற்றிற்கு தீர்வுகள் எட்டப்படும் என்பதை அவர் அறிந்து கொண்டே இவ்வாறு சொதப்பி இருக்கின்றார்.
இது இவரினதும், இவர் போன்ற பலரதும் பழக்கமும், இயல்பும். அதை நம்மால் மாற்ற முடியாது. இவரே ஒன்றும், ஒன்றும் இரண்டு என்றும் கூறலாம், ஒன்றும் ஒன்றும் பதின் ஒன்று கூறலாம் என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் கூறி இருந்தார். இது கணக்குப் பாடத்திற்கு வேண்டுமானால் சரிவரலாம், மார்க்க விவகாரங்களில் உள்ள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு ஒருக்காலும் உதவாது. இவர்தான் நபி (ஸல்) அவர்கள் டைலரின் சொல்லிக் கொடுக்கவா வந்தார்கள் என ஏழளமாகக் கேள்வியும் கேட்டாராம் அவரது உரை ஒன்றில்.

முரண்பாடுகளின் தன்மைகள்

முரண்பாடுகள் கொள்ள முடியாத அம்சங்கள்
(அல்லாஹ், மறுமை, சுவர்க்கம், நரகம், ஷீஆ, சன்னி போன்ற அகீதா சார்ந்த அம்சங்கள். சுபஹ் குனூத், கூட்டு துஆ, கத்தம், பாத்திஹா. ஆடையை கரண்டைக்குக் கீழால் தொங்கவிடுதல் போன்ற ஊர்ஜிதம் செய்யப்பட்ட வழிமுறைகள்)
முரண்பாடுகள் கொள்ள முடியுமான அம்சங்கள்
(பிறை விவகாரம், உறுப்புக்களைத் தானமாக வழங்குதல், இரத்ததானம், தாடியின் அளவு போன்ற அம்சங்கள்).

முரண்பாடுகள் வரவேற்கப்பட்டதா?

பொதுவாக முரண்பாடுகள் வரவேற்கத்தக்கதன்று, மாத்திரமின்றி மார்க்கத்தில் வெறுக்கப்பட்ட அம்சங்களில் முக்கியமானதாகும். தொழுகையில் வரிசையில் நிற்போர் சீராக நிற்க வேண்டும் எனக் கட்டளையிடும் நபி (ஸல்) அவர்கள்

عَنْ أَبِي مَسْعُودٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْسَحُ مَنَاكِبَنَا فِي الصَّلَاةِ وَيَقُولُ اسْتَوُوا وَلَا تَخْتَلِفُوا فَتَخْتَلِفَ قُلُوبُكُمْ (صحيح مسلم / 654 ترقيم المكتبة الشاملة/  صحيح مسلم / بَاب تَسْوِيَةِ الصُّفُوفِ وَإِقَامَتِهَا وَفَضْلِ الْأَوَّلِ فَالْأَوَّلِ مِنْهَا وَالِازْدِحَامِ عَلَى الصَّفِّ الْأَوَّلِ وَالْمُسَابَقَةِ إِلَيْهَا وَتَقْدِيمِ أُولِي الْفَضْلِ وَتَقْرِيبِهِمْ مِنْ الْإِمَامِ )

‘தொழுகையில் எங்களது தோழப்புயங்;;களைத் தடவியவர்களாக நீங்கள் சரியாக நின்று கொள்ளுங்கள், முரண்பட்டுக் கொள்ளாதீர்கள், அதனால் உங்கள் இதங்களும் முரண்பட்டுக் கொள்ளும் எனக் கூறுவார்கள். (முஸ்லிம்) இங்கு முரண்பாடு என்பது வரிசையில் சீரற்று நிற்பதையும், இமாம் செய்வதற்கு மாற்றமாக செய்வதையும் கூறப்படும். இருந்தும் அதில் கூட முரண்பாடு விரும்பத்தக்கதல்ல என்பதே அந்தக் கூற்றின் உள்ளர்த்தமாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ (صحيح البخاري / الاقتداء بسنن رسول الله  / 6744 ترقيم الشاملة)

நான் உங்களை விட்;ட வழியில் என்னை விட்டுவிடுங்கள். (பின்பற்றுங்கள்), உங்களுக்கு முன்பு வாழ்ந்தோர் தமது நபிமார்கள் மீது கருத்து முரண்பாடு கொண்டதும், அவர்களிடம் அதிகப்படியான கேள்விகள் கேட்டதும்தான் அவர்களை அழிவுக்கு இட்டுச் சென்றது, நான் ஒன்றை விட்டும் உங்களைத் தடுத்தால் அதைத் தவிர்ந்து கொள்ளுங்கள், ஏதாவது ஒரு கட்டiயையைக் கொண்டு ஏவினால் முடியுமானவரை அதில் இருந்து பின்பற்றுங்கள் (புகாரி). என்று அல்லாஹ்வின் தூதர் எச்சரிக்கின்றார்கள் என்றால் முரண்பட்டுக் கொள்வது சரிதானா என்ற கேள்வி நியாயமற்றதல்லவே!

இப்படி ஒரு ஆதாரம்

((اختلاف أمتي رحمة)). موضوع. “الأسرار المرفوعة” (506) . “تنزيه الشريعة” (2/402) . وقال الألباني: لا أصل له. “الضعيفة” (11) .( يراجع كتاب : مائة حديث مشهورة على ألسنة الخطباء )

எனது சமுதாயத்தவர் கருத்து முரண்பாடு கொள்வது அருளாகும் என்று நபியின் மீது கூறப்படும் பொய்யான செய்தியை வைத்துக் கொண்டு முரண்பாடுகளுக்கு தீர்வை விரும்பாதவர்களால் ஷிர்க்குகளும், பித்அத்துக்களும் நியாயப்படுத்தப்பட்டு இப்போதும் பார்க்கின்றோம். நபியின் மீது இட்டுக்கட்டிக் கூறப்பட்டதை அமுதவாக்காகக் கொண்டு செயல்படும் இது போன்ற நடைமுறைகளும் கருத்து முரண்பாடுகள் வளரக் காரணமாக இருப்பதை மறுக்க முடியாது.

மற்றொரு ஆதாரம்

ஹாரூன் (அலை) அவர்களின் பிரச்சாரம் பற்றி அல்அஃராஃப் அத்தியாயம் 142 வது வசனம் முதல் 156 வது வசனம் வரை இடம் பெறுகின்றது. அவற்றில் காளைமாட்டை வணங்குவதை எச்சரித்து ஹாரூன் நபி (அலை) அவர்கள் தெளிவாக பிரச்சாரம் செய்தார்கள் என்பதைப் பார்க்கின்றோம்.
தாஹா அத்தியாம் 86 முதல் 98 வரையுள்ள வசனங்களில் காளைமாட்டை வணங்குவதை அல்லாஹ் விரும்பாத செயல் என்பதை எச்சரித்து மூஸா நபி பிரச்சாரம் செய்ததை இன்னும் தெளிவாகக் காணலாம்.
அந்த சரித்தரின் தொடரில் ‘எனது பேச்சை நீ கவனிக்காமல் பனூஇஸ்ரவேலர்கள் மத்தியில் பிரவினையைத் தோற்றுவித்தாய்’ என்று ஒரு இடத்தில் வரும் வசனத்தைத் தலை கீழாகப் புரிந்து ஹாரூன் நபி சமூக ஐக்கியத்தை நிலைநாட்டிட சிலை வழிபாட்டை அங்கீகரித்ததாக விளக்குகின்றனர்.
அல்குர்ஆனில் இக்திலாஃப் என்ற சொற்றொடரை ஆய்வு செய்தால் நபித்துவப் பிரச்சாரத்தின் பின்பே அப்போதய மக்கள் தமக்குள் முரண்பட்டுக் கொண்டனர் என்பதையும், நபித்துவத்தை நிராகரித்தனர் என்பதையும் அந்தச் சொல் அதிகம் விளக்குகின்றது.
குர்ஆன் பற்றிய இந்த அறியாமை மூலம் தமது கொள்கைகளை காய் நகர்த்த முணைவது எவ்வளவு பெருமம் அநீதி என்று என்று சிந்தியுங்கள், எப்போதுதான் இவர்கள் சத்தியத்தைச் சரியாகப் புரிவார்களோ தெரியவில்லை. பட்டதாரி சேக்குகளை உருவாக்கும் கலா நிலையத்தின் பிரதிப்பணிப்பாளராக இருப்பவர் கூட இதில் மூக்கை நுழைத்திருந்தாராம்.
உலகில் ஐக்கியத்தை நிலைநாட்டுவதில் பாரிய இடை வெளியினை இஸ்லாமியக் கொள்கைகள் தொற்றுவிப்பதாக கூச்சலிடும் ஐரோப்பியர்களும், யூதர்களும் அதன் பின்னணியின் இருப்பதாக கொக்கரிகின்றனர். அது தீக்கரையாக்கப்பட வேண்டும் என்றும் கோஷமிடுகின்றனர், குரல் கொடுக்கின்றனர் என்பது ஆச்சரியமான ஒன்றல்ல. மாற்றமாக, சமுதாய ஐக்கியத்தில் அகீதா பாரிய குந்தகத்தை ஏற்படுத்துகின்றது என்று ஐக்கியப் பிரியர்களும், கமால் அதாதுர்கின் அடிவருடிகளும் தூர நோக்கு தாயிக்களும் சொல்வதுதான் ஆச்சரியம்.

கருத்து முரண்பாடுகளைக் கழைய காத்திரமான வழிமுறைகள் வேண்டும்

மார்க்கத்தில் முரண்பாடு தோற்றுவதற்கான அணுகூலங்கள் இருக்கவே செய்கின்றன. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் குர்ஆனை ஓதும் முறையில் இரு ஸஹாபாக்கள் மத்தியில் முரண்பாடு தோன்றியது. ஒருவர் ஓதியமுறைக்கு மாற்றமாக மற்றவர் ஓதினார், தான் ஓதிய முறையே சரியானது என இருவரும் பிடிவாதமாக வாதிட்டுக் கொண்டனர், மாத்திரமின்றி அது ஒரு சர்ச்சையாகவும் காட்சியளித்தது, அதற்கான தீர்வை அல்லாஹ்வின் தூதரிடம் வேண்டிய போது:

عن عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو قَالَ هَجَّرْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قَالَ فَسَمِعَ أَصْوَاتَ رَجُلَيْنِ اخْتَلَفَا فِي آيَةٍ فَخَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَفُ فِي وَجْهِهِ الْغَضَبُ فَقَالَ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِاخْتِلَافِهِمْ فِي الْكِتَابِ  صحيح مسلم / باب النهي عن اتباع متشابه القرآن / 4818 ترقيم الشاملة)

நபி (ஸல்) அவர்களிடம் நான் ஒரு நாள் காலையில் சென்றிருந்தேன், இரு மனிதர்கள் ஒரு ஆயத்தில் முரண்பட்டுக் கொண்டதை செவியேற்ற நபி (ஸல்) அவர்களின் முகத்தில் வெறுப்பால் கோபம் பொங்கியது. உங்களுக்கு முன்பிருந்தோர் அல்லாஹ்வின் வேதத்தில் முரண்பட்டே அழிந்து கொண்டார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
குர்ஆனை விளங்குவதில் முரண்பட்ட விளக்கங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுக் கொண்டாலும், அதுவும் விரும்பத்தக்க ஒன்றல்ல.

عَنْ جُنْدَبِ بْنِ عَبْدِ اللَّهِ الْبَجَلِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ قُلُوبُكُمْ فَإِذَا اخْتَلَفْتُمْ فَقُومُوا عَنْهُ صحيح البخاري /باب كراهية الخلاف / 6816 ترقيم المكتبة الشاملة)  صحيح بخاري / بَاب اقْرَءُوا الْقُرْآنَ مَا ائْتَلَفَتْ عَلَيْهِ قُلُوبُكُمْ

உங்கள் இதயங்கள் ஒன்றுபடும் அம்சங்களில் குர்ஆனை ஓதுங்கள், நீங்கள் (அதை ஓதுகின்ற போது) முரண்பட்டுக் கொண்டால் அதை விட்டு விலகிக் கொள்ளுங்கள். (புகாரி – 6816) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
குர்ஆனை ஓதும் முறை இரண்டு விதமாக இருப்பதுண்டு, அதில் கூட முரண்பாடு ஏற்படுகின்ற போது உடன்பாடனது என முடிவு செய்யப்பட்ட முறையில் ஒன்றுபடுவதையும், முரண்படுகின்ற போது அதிலிருந்து விலகிக் கொள்வதையும் இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

மூன்றாம் கலீபாவிற்கு ஹுஸைஃபா (ரழி) அவர்களின் அறிவுரை

அல்குர்ஆனை ஒரே ஓசையின் அமைப்பில் முதலாவது தொகுத்துவர் என்ற பெயர் மூன்றாம் கலீஃபா உஸ்மான் பின் அஃப்பான் அவர்களுக்குண்டு. அவர்களின் ஆட்சியில் ஈராக்கின் கவர்ணராக இருந்து அர்மீனியா, அஸர்பைஜான் போன்ற பிரதேசங்களை வெற்றி கொள்வதற்காக ஈராக் மக்களை இணைத்து ஷாம் வாசிகளுக்கு எதிராக ஹஸுஸைஃபா இப்னில் யமான் (ரழி) அவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். மக்கள் குர்ஆனை ஓதும் முறையில் தமக்குள் குழம்பிக் கொள்வது ஹுஸைஃபா (ரழி) அவர்ளைத் திகில் கொள்ளச் செய்தது. கலீஃபா அவர்களுக்கு பின்வருமாறு அறிவுரை அனுப்பினார்கள்.

فَقَالَ حُذَيْفَةُ لِعُثْمَانَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَدْرِكْ هَذِهِ الْأُمَّةَ قَبْلَ أَنْ يَخْتَلِفُوا فِي الْكِتَابِ اخْتِلَافَ الْيَهُودِ وَالنَّصَارَى (صحيح البخاري)

அமீருல் முஃமினீன் அவர்களே! யூத, கிரிஸ்தவர்கள் (தமது) வேதத்தில் முரண்பட்டுக் கொண்டதைப் போல் இவர்கள் முரண்பட்டுக் கொள்வதற்கு முன்னதாகவே இந்த உம்மத்தை நீர் அடைந்து கொள்ளும்’ (புகாரி).
அல்குர்ஆன் எளிமைக்காக ஊழு முறைகளில் அருளப்பட்டதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி). இந்த ஏழு முறைகளையும் உள்ளடக்கி அமைப்பிலேயே இரண்டு கலீபாக்களின் காலம் வரையும் மக்கள் ஓதி வந்தனர். அரபுக்கள் அல்லாதவர்கள் இஸ்லாத்தில் இணைந்த போது ஓதும் முறைகளை அறியாதரவர்களாக இருந்தார்கள், குர்ஆனை அவர்கள் ஓதுவதில் பல பிரச்சினகைளை எதிர் நோக்கினார்கள். இது அவர்கள் மத்தியில் காலப்போக்கில் பாரிய பிளவை ஏற்படுத்தும் என தளபதி ஹுஸைபா அவர்கள் அஞ்சியதால் அனுமதிக்கப்பட்டிருந்த பல முறைகளில் ஒரு முறையிளன் மீது மக்களைப் பழக்கும்படி கலீஃபா அவர்களைப் பணித்தார்கள். முரண்பாடுகளின் போது எட்டப்பட முடியுமான வழிழமுறைகள் மூலம் முரண்பாடுகளை தாயிக்களும் அணுக வேண்டிய தேவை இருக்கின்றது.

கலந்தாலோசனை செய்தல்

கருத்து முரண்பாடுகளைக் கழைய இதுவும் முக்கியமானதொரு வழியாகும். இதை இரண்டாவது கலீபா உமர் பின் கத்தாப் (ரழி) அவர்கள் கடைப்பிடித்தார்கள். சிரியாவில் தாவூன் என்ற பிளேக்கை ஒத்த கொடிய நோய் பரவியது. அவர்கள் ஸரஹ் என்ற இடத்தை அடைந்த போது அங்கு நோய் ஏற்பட்டது தெரிய வந்தது. பயணத்தைத் தொடர்வதா? இல்லையா என்ற நிலையில் ஆரம்ப முஹாஜிரீன்களை அழைத்து கலந்தாலோசனை நடத்தினார்கள், அவர்கள் முரண்பட்ட கருத்தைத் தெரிவித்தனர், அன்ஸாரிகளை அழைத்து ஆலோசனை செய்தார்கள், அவர்களும் முஹாஜிர்களைப் போன்று நடந்து கொண்டனர், அவர்களது கருத்தையும் உதாசீனப்படுத்தி விட்டு குரைஷியர்களில் தலைவர்களாக உள்ள மக்கா வெற்றிக்கு முன்னர் ஹிஜ்ரத் செய்து வந்தோரை அழைத்து ஆலோசனை நடத்தினார்கள், அவர்களில் இருவர் வேறுவிதாமான கருத்தைக் கூறி இருந்தனர், இறுதியில் கலீபா அவர்கள் மக்களிடம் நாளை மதீனா திரும்பப் போவதாக அறிவித்தார்கள். படைகளின் தளபதியாக அபூ உiதா (ரழி) அவர்கள் அல்லாஹ்வின் கத்ரில் இருந்தா வெருண்டோடுகின்றீர் எனக் கேட்டதற்காக கோபத்தை கொப்பளித்தவர்களாக , ஆத்திரமாகப் பதிலளித்த கலீபா அவர்கள் திரும்பிச் செல்லும் வழியில் அப்;துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்கள் சந்தித்தார்கள். அவர்கள் தன்னிடம் அது பற்றிய அறிவு ஞானம் இருப்பபதாகக் கூறி இவ்வாறான நோய் ஏற்பட்ட பிரதேசத்தில் வெளியில் இருப்போர் உள்ளே நுழைவதையும், உள்ளே இருப்பவர் அங்கிருந்து வெளியேறுவதையும் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் விரும்பவில்லை என்ற செய்தியை எடுத்துரைத்தார்கள்;. இதைக் கேட்டு, அல்லாஹ்வைப் புகழ்ந்த கலீபா உமர் (ரழி) அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள் (புகாரி 5188- ஷாமிலா நூலகம்).
நேரடியான சான்றுகள் இல்லாதபோதே கருத்துக் குழப்பங்கங்கள் எழ வாய்ப்புண்டு. அதனைக் கலந்தாசோனை செய்கின்ற போது நேரடியான சான்றுகள் இன்றி கருத்துக்களை முன்வைக்கலாம். ஆனால் சான்றுகள் தெளிவாகக் கிடைத்த பின்பும் அதன் பக்கம் உடனே திரும்பி விடவேண்டும் என்பதை இந்த வரலாறு போதிக்கின்றது.

ஆதாரத்துடன் அமைந்த இரு கருத்துக்களை முகமலர்வுடன் ஏற்றுக் கொள்ளுதல்

இரு கருத்துக்களுக்கு இடம்பாடான விஷயங்கள் ஆதாரபூர்வமான செய்திகளில் வந்த பின்னர், அவற்றில் இரண்டையும் செய்யலாம் என்ற கொள்கைக்கும், மனப்பக்குவத்திற்கு அழைப்பாளராக இருப்பவர் முதலில் முன்வர வேண்டும். இது தாயிக்களிடம் இல்லாத பண்பாக இருப்பதால்தான் கருத்துக்களில் விரிசல்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதை அவதானிக்க முடிகின்றது.
ஒரு வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக்காண்பித்த முறைக்கு மாற்றமாக ஒரு மனிதர் ஓதுவதை நான் செவியுற்றேன், அவரை உடனே நபி அவர்களிடம் அழைத்துக் கொண்டு வந்து, விபரத்தைக் கூறிய போது, அவர்களின் முகத்தில் வெறுப்புத் தென்பட்டது,

وَقَالَ كِلَاكُمَا مُحْسِنٌ وَلَا تَخْتَلِفُوا فَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ اخْتَلَفُوا فَهَلَكُوا (صحيح البخاري)

நீங்கள் இருவரும் ஓதியது சரிதான் எனக் கூறிவிட்டு, நீங்கள் முரண்பட்டுக் கொள்ளாதீர்கள், உங்களுக்கு முன்பிருந்தோர் முரண்பட்டுக் கொண்டதால்தான் அழிந்து போனார்கள் என எச்சரித்தார்கள். (புகாரி)

முஸ்லிம் உம்மத்தில் அறிமுகற்ற சட்டத்தைக் கூறுவோரை சமூகத்தை விட்டும் விலக்குதல்

மூன்றாம் கலீஃபா உஸ்மான் (ரழி) அவர்களின் ஆட்சியில் அபுதர் அல்கிஃபாரி (ரழி) அவர்கள் தங்க நகை சேமித்து
ஸைத் பின் வஹ்ப் என்பவர் கூறுகின்றார்கள்: நான் ரப்ஸா என்ற இடத்திற்குச் சென்றிருந்தேன், அங்கு அபூ தர்அல்கிஃபாரி (ரழி) அவர்களைக் கண்டேன், அவர்களிடம், நீர் இங்கு இடத்தில் (தனிமையில்) தங்கி இருப்பதற்கான காரணம் என்ன எனக் கேட்டேன், அவர்கள், நான் ஷாமில் இருக்கின்ற போது நானும், முஆவியா அவர்களும் ‘ எவர்கள் தங்கம், மற்றும் வெள்ளியை சேமித்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யவில்லையோ என்ற வசனத்தில் முரண்பட்டுக் கொண்டோம். முஆவியா அவர்கள் ( நீர் கூறுவது போன்றல்ல), இது வேதக்காரர்கள் மீது இறங்கிய வசனமாகும் என்றதும், இல்லை. நம்பேரில்தான் இறங்கியது என்றேன். இதனால் அவருக்கும் எனக்கும் இடையில் இது விஷயமாக (சர்ச்சை) இருந்து வந்தது. என்னைப் முறைப்பாடு செய்து உஸ்மான் (ரழி) அவர்களுக்கு கடிதம் அனுப்பினார்கள், என்னை மதீனா வரும்படி உஸ்மான் (ரழி) அவர்கள் பணித்தார்கள், மக்கள் என்னை இதற்கு முன்னால் காணதாவர்கள் போல என்னிடம் மக்கள் அதிகமாக வந்தார்கள், உஸ்மான் அவர்களிடம் எனது கருத்தைக் கூறினேன், என்னிடம் உஸ்மர்ன அவர்கள்,

فَقَالَ لِي إِنْ شِئْتَ تَنَحَّيْتَ فَكُنْتَ قَرِيبًا فَذَاكَ الَّذِي أَنْزَلَنِي هَذَا الْمَنْزِلَ وَلَوْ أَمَّرُوا عَلَيَّ حَبَشِيًّا لَسَمِعْتُ وَأَطَعْتُ

‘நீ விரும்பினால் ஒதுங்கி, கொஞ்சம் தூரத்தில் இருந்து கொள்ளலாம் என்றார்கள். அதற்காவே நான் இங்கு வசித்து வருகின்றேன், ஹபஷி ஒருவரைத்தான் எனக்கு தலைவராக நியமித்தாலும் நானும் கேட்டு, வழிப்பட்டு நடப்பேன் எனக் கூறினார்கள். (புகாரி).
தங்கம், வெள்ளியை யாரும் சேமித்துக் கொள்ளக் கூடாது, அவ்வாறு சேமித்து வைப்பதால் அவர்கள் அல்லாஹ் எச்சரிக்கின்ற தண்டனையைப் பெறுவார்கள் என தலைகீழாக விளங்கிய அபூதர் (ரழி) அவர்களின் கருத்து முஸ்லிம் உம்மத்திற்கு அன்னியமான, அறிமுகமற்ற கருத்து என்பதாலும், ஸஹாபாக்கள் மத்தியில் அவ்வாறானதொரு கருத்து சரியான கருத்தில்லை என்பதாலும் இவருக்குப் பின்னால் மக்கள் செல்வதைத் தடுப்பதற்காக இவ்வாறான நடவடிக்கை அவசியமாகின்றது. இதை இன்றைய தவ்ஹீத் வட்டம் தெரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
காஃப் அத்தியாயம் ஓதாவிட்டால் ஜும்ஆக் கூடாது, மூன்று மிம்பர் படிகள் பித்அத், வழையலாகத் தயாரிக்கப்பட்ட தங்க நகைகள் பெண்கள் அணிவது ஹராம், திடலில் தொழுகின்ற போது ஸஃப் வரிசையை அடையாளப்படுத்துவதற்காக கட்;டப்படும் கயிர்கள் பித்அத் போன்ற பைத்தியங்கள் சமுதாயத்தில் உலா வருகின்றது.
இவ்வாறான ஆதாரமற்ற, சமூகத்தில் அறிமுகமற்ற கருத்துக்களால் நவீன முஃப்திகளால் கிளப்பப்படும் புரளிகளுக்கு குர்ஆன், ஹதீஸ் பேசுகின்ற மக்கள் இரையாகின்றனர், துண்டாடப்படுகின்றனர். இதற்கு உஸ்மான் (ரழி) அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கை போன்று குர்ஆன், நுன்னா பேசுவோர் முடிவெடுக்காத வரை தொடரவே செய்யும்.

நஸ்ஸுடன் நின்று செயல்படல்

நஸ் என்ற நேரடியான சான்று கிடைக்காத போது அறிஞர்கள் இஜ்திஹாதின் அடிப்படையிலான முடிவை முன்வைக்க மார்க்கம் அனுமதிக்கின்றது. சிலவேளை அதில் அவர் தவறிழைத்தாலும் பூதாகரமாக்க முடியாது.

عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ صحيح مسلم  3240

அறிஞர் ஒருவர் சட்டத்தீர்ப்பில் இஜ்திஹாத் செய்து தீர்ப்பளிக்கின்றார், சரியாகவும் அதை அணுகுகின்றார் என்றால் அவருக்கு இரு கூலிகள் அவருக்குண்டு. அதேவேளை, இஜ்திஹாத் செய்வதால் ஏற்படும் தீர்ப்பில் தவறிழைப்பாராயின் அவருக்கு ஒரு கூலி உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்). ஆனால் நேரடியாக சான்றாகிய குர்ஆனில் தெளிவாக வந்திருப்பதை திரித்துக் கூறவதை, அதில் இருந்து விலகுவதை ஆலிம்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يَرْضَى لَكُمْ ثَلَاثًا وَيَكْرَهُ لَكُمْ ثَلَاثًا فَيَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا وَيَكْرَهُ لَكُمْ قِيلَ وَقَالَ وَكَثْرَةَ السُّؤَالِ وَإِضَاعَةِ الْمَالِ  (صحيح مسلم / باب :  الشاملة3236 ترقيم / القضاء باليمين، والشاهد)

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு மூன்று அம்சங்களைப் பொருந்திக் கொள்கின்றான், மற்றும் மூன்று அம்சங்களை உங்களுக்கு வெறுக்கின்றான், நீங்கள் அவனுக்கு எந்த ஒன்றையும் கொண்டு இணைகற்பிக்காது, அவனை வணங்க வேண்டும், அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) நீங்கள் பற்றிக் கொள்ள வேண்டும், பிரிந்து விடக்கூடாது ஆகியவற்றை உங்களுக்கு அவன் பொருந்திக் கொள்கின்றான், சொல்லப்பட்டது- கூறப்பட்டது, அதிகமதிகமதிகம் (அவசியமற்ற) கேள்விகள் கேட்பது, பொருட்களை வீண்விரயம் செய்வது ஆகியவற்றை உங்களுக்கு அவன் வெறுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ قَالَ أَتَى ابْنُ مَسْعُودٍ فِي رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً فَمَاتَ عَنْهَا وَلَمْ يَفْرِضْ لَهَا وَلَمْ يَدْخُلْ بِهَا فَسُئِلَ عَنْهَا شَهْرًا فَلَمْ يَقُلْ فِيهَا شَيْئًا ثُمَّ سَأَلُوهُ فَقَالَ أَقُولُ فِيهَا بِرَأْيِي فَإِنْ يَكُ خَطَأً فَمِنِّي وَمِنْ الشَّيْطَانِ وَإِنْ يَكُ صَوَابًا فَمِنْ اللَّهِ لَهَا صَدَقَةُ إِحْدَى نِسَائِهَا وَلَهَا الْمِيرَاثُ وَعَلَيْهَا الْعِدَّةُ فَقَامَ رَجُلٌ مِنْ أَشْجَعَ فَقَالَ أَشْهَدُ لَقَضَيْتَ فِيهَا بِقَضَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بِرْوَعَ ابْنَةِ وَاشِقٍ قَالَ فَقَالَ هَلُمَّ شَاهِدَاكَ فَشَهِدَ لَهُ الْجَرَّاحُ وَأَبُو سِنَانٍ رَجُلَانِ مِنْ أَشْجَعَ مسند أحمد17732 -

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களிடம் திருமணமாகி மஹரை நிர்யமும் செய்யாது, மனைவியுடன் இல்லத்திலும் ஈடுபாடாது மரணித்தவரின் மனைவி பற்றி வினவப்பட்ட போது ஒரு மாத காலம் அது பற்றி எதுவும் கூறாதிருந்தார்கள். பின்பு அவர்களிடம் (அது பற்றி) கேட்ட போது எனது கருத்தினைக் கூறுகின்றேன், அது தவறாக இருப்பின் என்னாலும் (திறமைக்குறைவால்), ஷெதானின் மூலம் ஏற்பட்டதாகும். அது சரியானதாக இருக்குமானால் (அது) அல்லாஹ்விடம் இருந்துமுள்ளதாகும் எனக் கூறிவிட்டு .அந்தப் பெண்ணுக்கு அவளது சகோதரிகளின் மஹர் போன்று கொடுக்கப்படவேண்டும், அவளுக்கு மீராஸ் சொத்தில் பங்குண்டு, அவள் இத்தாவிலும் இருக்க வேண்டும் எனக் கூறினார்கள். உடனே அஷ்ஜஃ கோத்திரித்தைச் சேர்ந்த ஒரு மனிதர் எழுந்து, வாஷிக் என்பவரின் மகள் பர்வஃ என்பவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் தீர்ப்பளித்தது போன்றதொரு தீர்ப்பையே நீங்கள் தீர்ப்பாக முன்வைத்துள்ளீர்கள் என்றார். அதற்;கு இரு சாட்சிகளை வேண்டினார்கள், அதற்கு ஜர்ராஹ், அபூஸினான் என்ற இருவர் சாட்சியம் கூறினார்கள். (அஹ்மத்) இது அபூதாவூத், திர்மிதி போன்ற கிரந்தங்களிலும் பதிவாகி இருக்கின்றது.

திங்கள், 21 பிப்ரவரி, 2011

முஸ்லிம்கள் முஸ்லிம்களைக் கொல்வது ஹராமாகும்


துரதிஷ்டவசமாக இன்றைய உலகில் முஸ்லிம்களே முஸ்லிம்களின் இரத்தத்தை மிகச்சாதாரணமாக ஓட்டுகின்ற சம்பவங்களை நாம் அதிகளவில் பார்த்து வருகின்றோம். அல்லது கேள்விப்படுகின்றோம். அண்மைக்காலங்களில் பாகிஸ்தான், சோமாலியா, யெமன், பலஸ்தீனம் போன்ற நாடுகளில் இந்நிலை விருத்தியடைந்து வருகின்றமையை நாம் கண்டோhம். அண்மையில் வெளிவந்த அசோசியேட்டட் பிரஸ் அறிக்கையில் சோமாலியாவில் இரு முரண்பட்ட முஸ்லிம் தரப்புக்கள் மோதிக்கொண்டதில் 12 முஸ்லிம்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். அவ்வறிக்கை இதற்கு கிஸ்மாயோ எனும் சோமாலிய துரைமுக நகரை கைப்பற்றிக்கொள்வதற்காக அஸ்ஸபாப் அணியினரும், கிஸ்புல் இஸ்லாம் அணியினரும் மோதிக்கொண்டதே காரணமாகும் எனத் தெரிவித்திருந்தது. மறுபக்கத்தில் சவூதி அரேபியா மற்றும் ஈரானின் பின்னணியில் யெமனில் முஸ்லிம்கள் தமக்கிடையே மோதிக்கொள்வதைப் பார்க்கிறோம். மேலும் பலஸ்தீனத்தில் அல்பதாஹ் இயக்கமும் ஹமாஸ}ம் மோதிக்கொண்டு இரத்தம் சிந்தியதையும் நாம் மறக்க முடியாது. அதேபோல பாகிஸ்தானில் பாகிஸ்தானின் முஸ்லிம் அரச படைகள் தமது நாட்டையே சேர்ந்த ஸ்வாத் பிராந்தியி முஸ்லிம்களை இராணுவ hPதியாகத்தாக்குவதையும்;, தலிபான்களும் பாகிஸ்தான் துருப்புக்களும் தமக்கிடையே இரத்தம் சிந்திக்கொல்வதும் அப்பிராந்தியத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்திவருவதைப்பார்க்கிறோம். வளர்ந்து வரும் இந்த கொடிய செயலை அல்லாஹ்(சுபு) முற்றாக தடைசெய்திருந்தும்கூட அது உதாசீனம் செய்யப்படுகிறது. எமக்கிடையான பிணக்குகளை ஷாPஆவின் அடிப்பiயில் தீர்க்காமல் ஒருவருடன் ஒருவர் பொருதிக்கொண்டு இரத்தம் சிந்தி அவற்றை தீர்க்க முனையும் இந்த வழிமுறை இவ்வுலகில் மாத்திரமல்லாது மறுமையிலும் மிகவும் பாரது}ரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் மிக ஆழமாக உணர வேண்டும்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களைக் கொல்வது ஹராமாகும்!

முஸ்லிமை கொலை செய்வதன் விளைவுகள் குறித்து அல்லாஹ்(சுபு) கீழ்வரும் திருமறை வசனத்தில் எச்சரிக்கிறான்.

“ மேலும் எவர், விசுவாசியை வேண்டுமென்றே கொலை செய்தால், அவருக்குரிய கூலி நரகமாகும். அதில் அவர் நிரந்தரமாக(த்தங்கி)இருப்பவர். இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு, அவரைச் சபித்தும் விடுவான். மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான். ( 4:93)

மேலும் கீழ்வரும் ஹதீஸில் முஸ்லிம்களை கொலை செய்வதும், துன்புறுத்துவதும் ஹராமாகும் என்பதை முஹம்மத் (ஸல்) தெட்டத்தெளிவாக உரைத்துள்ளார்கள்.

“ ஓர் முஸ்லிமை களங்கப்படுத்துவது அத்துமீறலாகும். அவருடன் போராடுவது நிராகரிப்பாகும்.” (புஹாரி, முஸ்லிம்)

ரஸ}ல்(ஸல்) “ முஸ்லிம்களில் இருவர் போராடுவதற்காக எதிர்கொண்டு ஒருவர் மற்றவரை கொலை செய்து விட்டால் கொலை செய்தவரும், கொல்லப்பட்டவரும் நரகத்தையே சென்றடைவர்.” என்றார்கள். அதற்கு ஸஹாபிகள் கேட்டார்கள் “ அல்லாஹ்வின் து}தரே! நரகம் கொன்றவக்கென்றால் சரி, ஏன் கொல்லப்பட்டவருக்கும் நரகம்” என வினவினார்கள். நபி(ஸல்) சொன்னார்கள். “ அவரிடம் தனது தோழரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது” என்றார்கள்.

ஆகவே முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் கொலை செய்யும் நோக்குடன் யுத்தம் செய்தால் அவர்கள் மறுமையில் பாரிய நஷ்டத்தை சந்திக்க வேண்டியேற்படும். அதுமாத்திரமல்லாமல் ஒரு உயிரை, அது யாராக இருப்பினும் வீணாகக் கொலை செய்தால் இஸ்லாம் அதனை மிகப்பெரிய குற்றமாக நோக்குகிறது.ரஸ}ல்(ஸல்) கூறினார்கள்,

“ஒரு முஸ்லிமை கொலை செய்வதைவிட இந்த உலகம் அழிக்கப்படுவது அல்லாஹ்(சுபு) பார்வையில் மிகவும் அற்பமானதாகும்.” (திர்மிதி)

ஆகவே முஸ்லிம்களின் தலைமைகள் (ஆட்சியாளர்களோ அல்லது இயக்கத்தலைவர்களோ) ஆளுக்காள் போட்டிபோட்டுக்கொண்டு முஸ்லிம்களுடன் முஸ்லிம்கள் போரிடுவதற்காக அழைப்புவிடுக்கும் இக்காலப்பகுதியில் அத்தகைய பாரது}ரமான செயலிலிருந்து முஸ்லிம்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் அல்லாஹ்வின் படைப்புகளுக்கு கட்டுப்படாமல், அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவதில் முஸ்லிம்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும். தமது தலைமைகளை இத்தகைய கொடிய பாவத்தில் ஈடுபட வேண்டாம் என முஸ்லிம்கள் எச்சரித்து இந்தத்தீமையை முற்றாக ஒழிக்க வேண்டும். மாறாக தமது தலைமைகளும், தலைவர்களும் சொன்னார்கள் என்பதனால் இத்தகைய தீமையில் ஈடுபட்டுவிட்டு பின்னர் மறுமையில் அல்லாஹ்(சுபு)விடம் தமது செலுக்காக தலைவர்களை பொறுப்புச்சாட்டுவதில் எத்தகைய பயனுமில்லை. அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ்வருமாறு கூறுகிறான்.

“ அவர்களுடைய முகங்கள் (நரக) நெருப்பில் புரட்டப்படும் நாளில், “ நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிபட்டிருக்க வேண்டுமே! (அவனுடைய) து}தருக்கும் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே” என்று கூறுவார்கள். மேலும் இரட்சகனே! நிச்சயமாக நாங்கள் எங்களுடைய தலைவர்களுக்கும், எங்கள் பெரியோர்களுக்கும் கீழ்ப்படிந்தோம், ஆகவே அவர்கள் எங்களை வழி தவறச் செய்து விட்டார்கள்.”(33:66-67)

இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்
முஸ்லிம்கள் எத்தகைய சமூகப்பின்னணிகளைக் கொண்டவர்களாக, எத்தகைய கருத்துமுரண்பாடுகளைக் கொண்டவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இடையிலான உறவு தாம் எல்லோரும் முஸ்லிம்கள் என்ற அடிப்படையிலேயே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிமை கொல்வது என்பது இன்னொரு முஸ்லிமுக்கு ஒரு தேர்வாகக்கூட இருக்கக்கூடாது. எமது தேசியங்களும், கோத்திரங்களும், மத்ஹப்களும், ஜமாஆத்களும் முஸ்லிம்கள் என்ற எமது அடையாளத்திற்கு முன்னால் வலுவிழந்தவைகள். அவை இரண்டாம் பட்சமானவை. முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவின் ஆட்சியாளாரானபோது முஸ்லிம்களுக்கும், யூதர்களுக்குமிடையில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டார்கள். அவ்வொப்பந்தம் கீழ்க்கண்டவாறே ஆரம்பிக்கிறது.

“ இது அல்லாஹ்வின் து}தர் முஹம்மத்(ஸல்) அவர்களின் புறத்திலிருந்தான ஓர் ஒப்பந்தமாகும். இது குரைஷிகளைச்சேர்ந்த முஸ்லிம்களினதும்;, யத்திரிப்பின் முஸ்லிம்களினதும், அவர்களை பின்பற்றியவர்களினதும், அவர்களுடன் இணைந்து கொண்டவர்களினதும், அவர்களுடன் சேர்ந்து போரிட்டவர்களினதும் உறவை ஒழுங்குபடுத்தும் ஆவணமாகும். ஏனையவர்களிலிருந்து வேறுபட்ட இவர்கள் அனைவரும் ஓர் உம்மாஹ் (சமூகம்) ஆகும்.”

சகோரத்துவம் குறித்து அல்லாஹ்(சுபு) இவ்வாறு கூறுகிறான்.
“ நிச்சயமாக விசுவாசிகள் (ஒருவர் மற்றவருக்கு) சகோதரர்களே!” (49:10)

முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என்பது குறித்து முஹம்மத்(ஸல்) இவ்வாறு கூறினார்கள்.

“ எவனுடைய கருத்தில் எனது உயிருள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் எவரும் சுவர்க்கம் புகமாட்டார் விசுவாசித்தவரைத் தவிர, உங்களில் எவரும் விசுவாசித்தவராக மாட்டார், நீங்கள் அல்லாஹ்வுக்காக ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை, நான் உங்களுக்கு மத்தியில் அன்பினை ஏற்படுத்தும் ஒன்று குறித்து வழிகாட்டாதிருக்கவா? உங்களுக்கு மத்தியில் ஸலாத்தைப் (சாந்தி) பரப்புங்கள்.” (முஸ்லிம்)

வேறுபாடுகளைத் தீர்ப்பதில் இஸ்லாம் கைக்கொள்ளும் வழிமுறை

உண்மையில் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அடிப்படைக்காரணம் முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தை அமுல்செய்யக்கூடிய பொறுப்பும், து}ய்மையுமுள்ள தலைமை இல்லாமையே. பெரும்பாலும் இஸ்லாத்தின் நீதியும், பாதுகாப்பும் மட்டுமே, பிரச்சனைகள் தோன்றுவதற்கு முன்னாலேயே அவை உருவாகாமல் இருக்க வழி செய்து விடுகின்றன. எனினும் அதனையும் தாண்டி பிரச்சனைகள் தோன்றும் பட்சத்தில் இஸ்லாமியத்தலைமை அதனை ஷாPஆவின் பிரகாசத்தில் தீர்த்து வைத்துவிடுகிறது.

இஸ்லாம் ஒர் சம்பூரண வாழ்க்கைத்திட்டமாகையால் அது எவ்வகையான பேதங்களையும் தீர்த்துவைக்கும் ஆளுமையைக் கொண்டுள்ளது. அது கிலாபாவின் குடிமக்களுக்கும், கலீபாவுக்கும் இடையில் தோன்றும் பேதங்கள் தொடக்கம் வௌ;வேறு குழுக்கள், இயக்கங்கள் என்பவற்குக்கிடையில் தோன்றும் சச்சரவுகள் மற்றும் இஸ்லாம் தொடர்பாக எழும் கருத்துவேறுபாடுகளால் உருவாகும் பிரச்சனைகள் வரை அனைத்து வகையான சச்சரவுகளையும் தனக்கேயுரிய பாங்கில் தீர்த்து வைத்து விடுகிறது. எனவே முஸ்லிம்களுக்கு மத்தியிலிருக்கும் பேதங்களைக் களைந்து அவர்களை ஓரணியாக மாற்றி பிளவு எனும் பாரிய ஹராத்திலிருந்து பாதுகாப்பதற்கு கிலாபா ஒன்றினாலேயே சாத்தியமாகும்.
கிலாபத் ஆட்சியிலே குடிமக்களுக்கும், கலீபாவுக்குமிடையில் தோன்றும் பிரச்சனைகளை மஹ்கமத் அல் மதாழிம் (அநீதச்செயல்களுக்கான நீதிமன்றம்) என்ற விஷேட நீதிமன்றம் தீர்த்து வைக்கும். அதேபோல ஒரு குறித்த விடயத்தில் ஷாPஆவின் நிலைப்பாடு தொடர்பாக முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றும் கருத்து பேதங்கள், கலீபா அந்நிலைப்பாடுகளில் (இஜ்திஹாத்) ஒன்றைத்தேர்வு செய்து முஸ்லிம்கள் மீது அமுல்படுத்தும் அதிகாரத்தை கொண்டிருப்பதால் அச்சிக்கல் நடைமுறை hPதியாகத் தீர்க்கப்பட்டு முஸ்லிம் உம்மத்தின் ஒற்றுமையும், கிலாபத்தின் ஒறுமைப்பாடும் உறுதி செய்யப்படும். மேலும் தனிநபர்களோ, அல்லது குழுக்களோ தங்களுக்கிடையில் முரண்பட்டுக்கொண்டால் அவர்களுக்கென நியமிக்கப்படும் நீதிபதி அது குறித்து விசாரித்து அவர் மேற்கொள்ளும் தீர்மானம் இறுதித்தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இத்தகைய பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்படும். எனவே கிலாபத்தை உருவாக்குவதில் நாம் முனைப்புக்காட்டுவது எமது முரண்பாடுகள் பலவற்றை தீர்ப்பதற்காக நாம் எடுத்து வைக்கும் எட்டுக்களாகும். எனினும் கலீபா இல்லாத நிலையில் தாண்தோன்றித்தனமாக இப்பிரச்சனைகளைத் தீர்த்துக்கொள்ளலாம் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. கலீபா ஒருவர் இல்லாத நிலையில் கூட முஸ்லிம் குழுக்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டால் ஷாPஆவிற்கு கட்டுப்பட்டு அல்குர்ஆன், சுன்னாவின் அடிப்படையில் தமது முரண்பாட்டை தீர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் இதன்போது எவர்களேனும் அல்லாஹ்வின் சட்டத்தை அத்துமீறி நடந்தால் அவர்களை அல்லாஹ்வின் சட்டத்திற்கு கட்டுப்பட வைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என முஸ்லிம்களுக்கு அல்லாஹ்(சுபு) தனது திருமறையில் கீழ்;வருமாறு கட்டளையிடுகிறான்.

“விசுவாசிகளிலுள்ள இரு கூட்டத்தார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருவருக்கிடையே சமாதானம் செய்து வையுங்கள். பின்னர் அவர்களில் ஒரு கூட்டத்தார் மற்றொரு கூட்டத்தாரின்மீது அக்கிரமம் செய்து வரம்பு மீறினால் (வரம்பு மீறிய ) அக்கூட்டத்தவர் (அல்லாஹ்வுடைய கட்டளையின் பால்) திரும்பி வரும் வரை நீங்கள் போர் செய்யுங்கள். அக்கூட்டத்தார் அல்லாஹ்வுடைய கட்டளையின்பால் திரும்பிவிட்டால் அவ்விருவருக்கிடையே நீதியைக்கொண்டு சமாதானம் செய்து வையுங்கள். (இதில்) நீங்கள் நீதியாகவும் நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.” (49:9)

ஆகவே சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றோ, அல்லது தமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்றோ அல்லது கிலாபத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முயற்சிக்கும் விடயத்தில் கூட வன்முறைகளில் ஈடுபட்டு முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு இரத்தம் சிந்துவதை இஸ்லாம் முற்றாக மறுத்துரைக்கிறது. இன்று முஸ்லிம் அரசுகளுக்கும் அதனை எதிர்த்து போராடும் போராட்டக்குழுக்களுக்குமிடையே இடம்பெறும் அதிகமான ஆயுதப் போராட்டங்களை எடுத்துக்கொண்டால் அவை இஸ்லாத்தின் அடிப்படையில் மாற்றத்தை அரச மட்டத்தில், சமூகத்தில் மட்டத்தில் ஏற்படுத்த வேண்டும் என முனையும் கூட்டத்தாருக்கும், அவற்றை நசுக்க முனையும் அரசுக்மிடையிலான போராட்டங்களாகவே இருக்கின்றன. எனவே முஸ்லிம்களுக்கிடையிலான இந்த முரண்பாடுகளுக்கு காரணமான இந்த முக்கிய விடயம் குறித்து இங்கே மிகச்சுருக்கமாக குறிப்பிடுவது பொருத்தமாகும். இஸ்லாமிய அரசை ஏற்படுத்த அல்லது ஷாPஅத்தை அமுல்படுத்த முனையும் இயக்கங்கள் இஸ்லாம் இது குறித்து எத்தகைய வழிகாட்டலை வழங்குகிறது என்பதை நிதானமாக ஆராய வேண்டும். அத்துடன் கிலாபத்தை நோக்கிய பாதை இஸ்லாத்தின் வெளித்தில் தீர்க்கமாக தீர்மானிக்கப்பட வேண்டும். இதற்கு முழுமையாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் எவ்வாறு கிலாபத்தை நோக்கி இயங்கினார்கள் என்பதையும், அவர்களுடைய பாதை எவ்வித முரண்பாடுகளுமின்றி எவ்வாறு தெளிவாக அமைந்தது என்பதையும் ஆராய்வது மிக மிக முக்கியமாகும். அல்லாஹ்(சுபு) தனது து}தரிடம்(ஸல்) நீங்கள் வழிநடாத்தும் உங்கள் சமூகத்தை நோக்கி இவ்வாறு கூறுங்கள் என்று கீழ்கண்டவாறு சொல்கிறான்.

“(நபியே) நீர் கூறுவீராக! இதுவே எனது (நேரான) வழியாகும். நான்(உங்களை)அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின்மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கின்றோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் (அவனுக்கு) இணைவைப்போரில் உள்ளவனுமல்லன். (12:108)

கிலாபத்தை நோக்கிய ரஸ}ல்(ஸல்) அவர்களின் பயணத்தில் இராணுவ வழிமுறை உள்ளடங்கியிருக்கவில்லை என்பதை நாம் தெளிவாப்புரிந்து கொள்ள வேண்டும். மாறாக ரஸ}ல்(ஸல்) அவர்கள் மக்காவில் மக்களை இஸ்லாத்தை நோக்கி அழைத்து அவர்களை முற்றுமுழுதான இஸ்லாமிய முன்மாதிரிகளாக மாற்றினார்கள். இவ்வாறு எவரெல்லாம் ஏகத்துவத்தை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் அனைவரும் இஸ்லாத்தி;ன ஷரிஆவிற்கு முற்றிலும் கட்டுப்பட்டு சுவர்க்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற வரம்பற்ற அவாவுடன் உறுதியாக இஸ்லாத்திற்காக உழைத்தார்கள். பின்னர் ஈமானிலும், திருக்குர்ஆனிலும் நன்கு தோய்த்தெடுக்கப்பட்ட அந்த ஆரம்ப முஸ்லிம்கள் ரஸ}ல்(ஸல்) அவர்களின் தலைமையிலான ஒரு அரசியல் சமூகக் குழுவாக செயற்பட்டு மக்காவில் ஒரு அறிவார்ந்த போராட்டத்தையும், அரசியல் போராட்டத்தையும் மேற்கொணடார்கள். இதன்மூலம் அங்கு நிலவிவந்த பழக்க வழக்கங்களையும், சமூக, அரசியல் கட்டமைப்புக்களையும், அங்கு நிலைகொண்டிருந்த பாரம்பரியம், வழக்காறுகள் அனைத்தையும் இஸ்லாத்தின் துணைகொண்டு எதிர்த்தார்கள். இவ்வாறு ஜாஹிலிய சமூக வழமைகளையும், நம்பிக்கைகளையும் எதிர்த்து அதற்கு பகரமாக இஸ்லாமிய சிந்தனைகளையும், தீர்வுகளையும் முன்வைத்தார்கள். இவ்வாறு வளர்ந்த போராட்டத்திற்கு மத்தியில் இஸ்லாத்திற்கான உதவியை அதாவது நுஸ்ராவை சமூகத்தலைமைகளை நோக்கியும், ஆட்சி மற்றும் அதிகார வர்க்கத்தை நோக்கியும் கோருமாறு அல்லாஹ்(சுபு) முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிட்டான். அந்த தீர்க்கமான பாரிய முயற்சியில் இடைவிடாது முயற்சித்துக்கொண்டிருந்த முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறுதியாக நுஸ்ராவை யத்ரிபின் அன்ஸார்களிடமிருந்து அல்லாஹ்(சுபு) வழங்கினான். இந்த பரிணாம வளர்ச்சியையே நாமும் எமது உம்மத்தின் மத்தியில் பொறுமையுடன் ஏற்படுத்த வேண்டும். இது எமக்குளேயே நாம் ஐக்கியமிளந்து ஒருவரை ஒருவர் குறி வைக்கும் அழிவிலிருந்து பாதுகாக்கும்.

உம்மத்தின் பிளவும் காலத்துவ சக்திகளின் ஆதிக்கமும்


உண்மையில் முஸ்லிம்கள் தமக்குள்ளே யுத்தம் செய்து கொள்வதன் மிகப்பாரது}ரமான அடுத்த விளைவு காலனித்துவ குப்பார்கள் எம்மீது தமது இரும்புக்கரத்தை மென்மேலும் பிரயோகிப்பதற்கு வழிவிடுவதாகும். இது மிகவும் ஆபத்தான நிலையாகும். ஏனெனில் அமெரிக்கர்களும், ஐரோப்பியரும் முஸ்லிம் உம்மத்தின் பலத்தை குறைவாக எடைபோடவில்லை. ஐரோப்பாவின் ஒரு பாரிய பகுதியைக் கூட (அந்தலு}சியா - இன்றைய ஸ்பெய்ன் மற்றும் போர்த்துக்கல் உட்பட்ட பகுதி) முஸ்லிம் உம்மத் கிலாபத்தின் கீழ் பல நு}ற்றாண்டுகளாக ஆட்சி செய்தது என்பதையும், முஸ்லிம் உம்மத்தை ஓர் கட்டமைக்கப்பட்ட உம்மத்தாக யுத்தத்தில் சந்திப்பது மிகவும் ஆபத்தானது என்பதையும் அவர்கள் இன்னும் மறக்கவில்லை. எனவே அவர்கள் முஸ்லிம் உம்மத்தை எவ்வாறெல்லாம் பலகீனப்படுத்த முடியுமோ அத்தகைய அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். எம்மை மென்மேலும் பிளவுபடுத்த முனைவார்கள். இது குறித்து ரஸ}ல்(ஸல்) கூறிய கீழ்வரும் ஹதீஸ் ஓர்; முன்னறிவிப்பாக அமைந்துள்ளது.

“எவ்வாறு ஒரு பெரிய உணவுப்பாத்திரத்தை நோக்கி மக்கள் சூழ்ந்து கொள்வார்களோ, அதேபோல உங்களை நோக்கி பல தேசங்கள் சூழ்ந்துகொள்ளும். “ அப்பொழுது நாங்கள் சிறிய எண்ணிக்கையில் இருப்போம் என்பதாலா அவ்வாறு ஏற்படும்” என ஒருவர் கேட்டபோது, இல்லை, அப்பொழுது உங்களுடைய எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும், எனினும் நீங்கள் வெள்ளத்தில் உருவாகும் நுரைகளைப்போலிருப்பீர்கள்.” (அபுதாவூத்)

எனவே நிராகரிப்பாளர்களின் நாடுகள் எமது பிளவுகளை வலுப்படுத்தி எம்மை ஆதிக்கம் செலுத்த முனைவார்கள் என்பதையும், இதனையே காலணித்துவ தசாப்த்தங்களில் அவர்கள் நேரடியாக மேற்கொண்டார்கள் என்பதையும் நாம் மறந்து விடலாகாது. காலனித்துவ நாடுகள் எம்மீது முதலாளித்துவம் என்ற குப்ர் கட்டமைப்பை திணித்து அவர்களின் அரசியற் கைதிகளாக வைத்துக்கொள்ள முனைந்தார்கள். இதன்மூலம் முஸ்லிம்களை அடிமைப்படுத்தி எமது வளங்களை அளவுகணக்கின்றி சுரண்டினார்கள். “ பிளவுபடுத்துதலும், ஆக்கிரமித்தலும்” என்ற இந்த யுக்தியை டி.ஈ. லோரன்ஸ் (லோரன்ஸ் ஒப் அரேபியா) பின்வருமாறு கூறுகிறான். “அவரது அரசியல் மாற்றம் ஓர் வன்முறையான அரசியல் மாற்றமாக உருவெடுக்க செய்துவிட்டால் இஸ்லாம் என்ற அந்த சக்தியின் மீதான எமது அச்சத்தை அழித்துவிடலாம். பிரிப்பதன் மூலம் இஸ்லாத்தை அதன் இதயத்திலேயே அதற்கு எதிராகவே திருப்பிவிடலாம். பின்னர் துருக்கியில் ஒரு கலீபா இருந்து, அரேபியாவில் ஒரு கலீபா இருந்து மதச்சண்டை உருவாகும். பின்னர் இஸ்லாம் ஒரு அச்சுறுத்தலான ஒன்றாக இருக்காது”. இந்த யுக்தியை பின்பற்றியே சைக் - பிக்கட் ஒப்பந்தத்தின் மூலம் முஸ்லிம்களின் பூமி பிரித்தானியாவுக்கும், பிரான்ஸிற்குமிடையே பங்கு போடப்பட்டது. இந்த ஒப்பந்தமும், ஏனைய ஐரோப்பிய சூழ்ச்சித்திட்டங்களுமே ஒரே கிலாபத்தின் கீழ் இணைந்திருந்த முஸ்லிம் தேசம் இன்று ஐம்பதுக்குமேற்பட்ட தேசங்களாக பிரிந்து முஸ்லிம்கள் தமக்குள்ளேயே மோதிக்கொள்ளும் அவல நிலையை தோற்றிவித்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ஐரோப்பியர்களின் வழித்தடத்ததை பின்பற்றி அதற்கு தலைமைப்பொறுப்பை ஏற்று இன்று ஐக்கிய அமெரிக்கர் தொடர்ந்து வருகிறது. ஐரோப்பியர்கள் முஸ்லிம்களை பிளவுபடுத்தி எமது தேசத்தை தாம் விரும்பியவாறு பிரித்து, கூறுபோட்டு வரைந்தெடுத்த தேசப்படத்தை அமெரிக்கா திருப்த்தியுடன் பார்க்கவில்லை. மென்மேலும் அத்தேசங்களை கூறுபோட்டு தனது வேட்டைக்கேற்ற ஒரு புதிய தேச வரைபடத்தை வரைவதற்கு முஸ்லிம் தேசத்திற்குள் கால்பதித்து நிற்கிறது. முஸ்லிம் தேசங்களை மேன்மேலும் பிரிக்க நினைக்கும் அமெரிக்காவின் திட்டம் அமெரிக்க இராணுவ துருப்புக்களின் சஞ்சிகையொன்றில் 2006ம் ஆண்டு வெளிவந்திருந்தது. இத்திட்டத்தில் ஈராக், துருக்கி, பாக்கிஸ்தான், சவூதி அரேபியா உட்பட மேலும் பல முஸ்லிம் நாடுகளை மென்மேலும் பலகீனமான சிற்சிறு நாடுகளாக பிளவுபடுத்தும் சூட்சுமை அடங்கியிருந்தது. இந்தத்திட்டத்தின் அறுவடையையே ஈராக்கிலும், தற்போது பாக்கிஸ்தானிலும் நாம் கண்டு வருகிறோம். எனவே ஓர் உம்மத் என்ற கோட்பாட்டை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. ஓர் உம்மத் என்ற கோட்பாடுடையவர்களை “உம்மைடிஸ்” என்று அழைக்கும் “ராண்ட்” என்ற அமெரிக்கச் சிந்தனைத் தளமொன்று ‘பிளவுபடுத்தி ஆக்கிரமிக்கும் வியூகம்’ என்ற தனது கட்டுரையில் எத்தகைய வெட்கமுமற்று.“ முஸ்லிம்களின் அடிப்படைவாதிகளுக்கு எதிராக பழமைவாதிகளுக்கு ஆதரவு அளியுங்கள். பழமைவாதிகளுக்கும், அடிப்படைவாதிகளுக்குமிடையில் கூட்டிணைவு ஏற்படுவதை மட்டந்தட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.

இவ்வாறு குப்பார்கள் தமது குறிக்கோளில் தெளிவுடன் வெளிப்படையாகவே எம்முடன் மோதிவரும் நிலையில் நாம் எமக்குள்ளேயே போரிட்டுக்கொண்டு அவர்கள் விரித்த வலையில் அதுவும் அவர்கள் இங்கே வலையை விரித்து வைத்துள்ளோம் என வெளிப்படையாகவே தெரிவிக்கின்ற பொழுதும்கூட நாம் அல்லாஹ்(சுபு) மாறு செய்த நிலையில் அதற்குள் சென்று அகப்பட்டுக்கொள்வோமானால் எம்மை எப்படி வர்ணிப்பது.

எனவே கிலாபத்தை நிலைநாட்டுவதன் மூலமாக முஸ்லிம்களை முரண்பாடுகளிலிருந்து பாதுகாத்து அவற்றை ஷாPஆவின் அடிப்படையில் தீர்த்து வைத்து எதிரிகளின் சவால்களுக்கு தக்க பதிலடி கொடுக்கக்கூடிய ஒரு நீதியான ஆட்சியாளரை அல்லாஹ்(சுபு) எமக்கு நல்குவானாக!
“நிச்சமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிக்க கண்ணியமிக்கவர் உங்களில் மிகவும் பயபக்தியுடைவர்தான். நிச்சயமாக அல்லாஹ் யாவரையும் நன்கறிந்தவன். (யாவரையும்) நன்குணர்பவன்.”(49:13

செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

பெண்கள் பள்ளியில் தொழுவது கூடுமா?


பெண்கள் கொடுமைப்படுத்தப்பட்டு, பெண் பிள்ளைகள் உயிருடன் குளிதோண்டிப் புதைக்கப்பட்ட காலத்தில் அல்லாஹ்வின் தூதராகஅனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் பெண்களுக்குரிய உரிமைகளை மிகத் தெளிவாக விளக்கினார்கள். அவற்றை முஸ்லிம்கள் காலம் காலமாகப் பேணி வந்தார்கள். அவற்றில் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதும் அடங்கும்.
பிற்பட்ட காலங்களில் இஸ்லாத்தில் இணைந்தவர்களாலும், மாற்று மத கலாச்சாரத்தின் தாக்கம் பெற்ற முஸ்லிம்களாலும் இவ்வாறான உரிமைகள் பறிக்கப்பட்டன என்பதே உண்மை.
பெண்ணை மணமுடிக்கின்ற போது சீதனம், சீர்வரிசை என்ற பெயரில் பெண்ணின் பொறுப்பாளியிடம் பலவந்தமாகப் பறித்தல், உயர்கல்வியை தொடர்வதை, இஸ்லாமிய அடிப்படையில் தொழில் புரிவதை மறுத்தல், பெண,; ஒப்பமிடத் தெரிந்தால் போதும் என்ற வரட்டுத் தத்துவம் பேசுதல், கட்டாயம் முகத்தை மூட வேண்டும் என்ற போக்கு, மார்க்கத்தின் பெயரால் நிகழும் இத்தாக்கால கொடுமைகள், மாமியார் மருகளை அடிமையாக வைத்தல், மாமனாரையும், மாமியாரையும் தலைகுனிந்து மரியாதை செய்யும்படி பணித்தல் போன்ற கொடுமைகளுடன் பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை ஹராமாக்கும் தீர்ப்பையும் இணைத்துக் கூற முடியும்.
ஒரு காலத்தில் பெண்களுக்கு உரிமைகள் மதங்களில் மறுக்கப்பட்டதன் விளைவுதான் இன்று பெண்கள் நிர்வாணிகளாக, போகப்பொருளாக திட்டமிட்டே மாற்றப்படுகின்றனர், மாத்திரமின்றி அது அவர்களின் உரிமை என்றும் சங்கநாதம் முழங்குவதையும், பெண்ணுரிமைக் கோஷமாகவும் எழுதப்படுகின்றது. இந்த நிலைக்கு மத குருமார்கள் வழி வகுத்தது போல பள்ளிக்குச் செல்வதை தடுக்கும் மெளலவிகளின் நடவடிக்கையும் அமைகின்றது என்பது கசப்பான உண்மை.
பெண்களும், தேவைக்காக வெளிச் செல்தலும்:
பெண்கள் தமது தேவவைகளை நிறைவேற்றிக் கொள்ள மஹ்ரமான ஆண்களுடன் வெளியில் செல்வதைக் கட்டாயப்படுத்தும் கலாச்சாரத்தை இஸ்லாம் உருவாக்கி இருப்பது போல மஹ்ரம் துணையின்றி செல்வதையும் சில சந்தர்ப்பங்களில் அனுமதித்தும் இருக்கின்றது.
ஆரம்ப காலப் பெண்கள் தமது மல சலத்தேவைக்காக இரவு வேளைகளில் திறந்த வெளிக்கு வெளியேறிச் செல்பவர்களாக இருந்தனர். அல்லாஹ்வின் தூதரிடம் உமர் (ரழி) அவர்கள் உங்கள் மனைவியருக்கு ஹிஜாபைக் கொண்டு வாருங்கள் எனக் கூறுபவர்களாக இருந்தார்கள். ஆனால் நபி (ரழி) அவர்கள் அதைச் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் மனைவியரில் ஒருவரான ஸவ்தா பின்த் ஸம்ஆ (ரழி) அவர்கள் ஒரு இரவு வெளியேறிச் சென்றதை அவதானித்த உமர் (ரழி) அவர்கள், அவர்கள் கொழுத்த பெண்ணாக இருந்ததால் சவ்தாவே! உங்களை நாம் அறிந்து கொண்டோம், ஹிஜாப் சட்டம் சீக்கரம் வந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இவ்வாறு கூறுவார்கள். அதற்கமைவாக ஹிஜாபின் வசனத்தை அல்லாஹ் இறக்கிவைத்தான் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி ஹதீஸ் எண்: 143. பாடம்: பெண்கள் மலசலத் தேவைக்காக வெளியில் செல்லுதல்), (முஸ்லிம் ஹதீஸ் எண்: 4030)
மற்றொரு அறிவிப்பில், ஹிஜாப் இறங்கிய பின்னர் ஸவ்தா (ரழி) அவர்கள் ஒரு தேவையின் நிமிர்த்தம் வெளியேறிச் செல்வதைக் கண்ட உமர் (ரழி) அவர்கள் ஸவ்தாவே உம்மை எமக்குத் தெரியாமல் இல்லை. நீங்கள் எப்படி வெளியேறலாம் என்று சிந்தியுங்கள் என்று சொன்னதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதரிடம், அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் எனது தேவைக்காக வெளியேறிச் சென்ற நேரத்தில் உமர் எனக்கு இவ்வாறு, இவ்வாறெல்லாம் சொன்னார் எனக் கூறினாரே எனக் கூறும் ஸவ்தா (ரழி) அவர்கள், உடன் அல்லாஹ்வின் தூதருக்கு வஹி அறிவிக்கப்பட்டது, (அதனால் ஏற்பட்ட) வியர்வையைத் துடைத்துக் கொண்டே
 ففَقَالَ إِنَّهُ قَدْ أُذِنَ لَكُنَّ أَنْ تَخْرُجْنَ لِحَاجَتِكُنَّ (البخاري )
‘நீங்கள் உங்கள் தேவைகளுக்காக வெளியேறிச் செல்வது நிச்சயம் அனுமதிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்’ என்ற ஸவ்தா (ரழி) அவர்கள் கூறும் செய்தி புகாரி, முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
மேற்படி ஹதீஸுக்கு இமாம்கள் தரும் விளக்கம்.
قَالَ اِبْن بَطَّال : فِقْه هَذَا الْحَدِيث أَنَّهُ يَجُوز لِلنِّسَاءِ التَّصَرُّف فِيمَا لَهُنَّ الْحَاجَة إِلَيْهِ مِنْ مَصَالِحهنَّ  ، ………. وَفِيهِ جَوَاز كَلَام الرِّجَال مَعَ النِّسَاء فِي الطُّرُق لِلضَّرُورَةِ ، ………   وَفِيهِ أَنَّ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَنْتَظِر الْوَحْي فِي الْأُمُور الشَّرْعِيَّة ؛ لِأَنَّهُ لَمْ يَأْمُرهُنَّ بِالْحِجَابِ مَعَ وُضُوح الْحَاجَة إِلَيْهِ حَتَّى نَزَلَتْ الْآيَة ، وَكَذَا فِي إِذْنه لَهُنَّ بِالْخُرُوجِ . وَاَللَّه أَعْلَم (فتح الباري لابن حجر – (1 / 238)

பெண்கள் தமது நலனுடன் தொடர்புடைய தமது தேவைகளை தாமே நிறைவு செய்து கொள்வதை அனுமதித்தல், அவசியத்தேவைகளின் போது பாதைகளில் பெண்களுடன் பேசுதல், பெண்கள் மறைந்தும், மறைத்தும் வாழ வேண்டும் என்ற நிலை இருந்தும் அவ்வாறு தன்னிச்சையான கட்டளைப்பிறப்பிக்காது மார்க்க விவகாரங்களில் நபி (ஸல்) அவர்கள் வஹியை எதிர்பார்ப்பவர்களாக இருந்தமை போன்ற விளக்கங்கள் இதில் பெறப்படுகின்றன என்ற கருத்தை இமாம் இப்னு பத்தால் (ரஹ்) அவர்கள் மூலம் இப்னு ஹஜர் (ரஹ்) வெளியிட்டுள்ளதைப் பார்க்கின்றோம். (பார்க்க: பத்ஹுல்பாரி).
شرح النووي على مسلم – (7 / 306)
….. فيه جَوَاز خُرُوج الْمَرْأَة مِنْ بَيْت زَوْجهَا لِقَضَاءِ حَاجَة الْإِنْسَان إِلَى الْمَوْضِع الْمُعْتَاد لِذَلِكَ بِغَيْرِ اِسْتِئْذَان الزَّوْج ، لِأَنَّهُ مِمَّا أَذِنَ فِيهِ الشَّرْع .
ஒரு பெண் தனது கணவனின் அனுமதியின்றி வழமையான இடத்திற்கு தேவையை நிறைவு செய்ய வெளியேறிச் செல்வது அனுமதி என்பதைக்காட்டுகின்றது. ஏனெனில் இது மார்க்கம் அனுமதித்த ஒன்றில் உள்ளதாகும் என இமாம் நவவி (ரஹ்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: ஷரஹ் முஸ்லிம்) இந்த கருத்தைத்தான் நாமும் முன்வைக்கின்றோம்.
பள்ளிவாசலுக்கு வருவதை அனுமதிக்கும் நபிமொழிகள்

பெண்கள் பள்ளிக்குச் சென்று தொழுவதை அனுமதிக்கின்ற ஆதாரபூர்வமான பல நபிமொழிகள் இருக்கின்றன. அவற்றில் சிலதை மாத்திரம் இங்கு தருகின்றோம்;.
1) உமர் (ரழி) அவர்களின் மனைவி ஒருவர் இஷா, மற்றும் சுபஹ் தொழுகைக்காக பள்ளியில் நடை பெறும் (ஜமாஅத்) கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்பவராக இருந்தார்கள். உமர் (ரழி) அவர்கள் இதை வெறுத்து, ரோஷப்படுகின்ற போதும் நீங்கள் ஏன் இவ்வாறு செல்கின்றீர்கள் என அவர்களிடம் கேட்கப்பட்டது. அப்போது, அவர்கள் என்னைத் தடுக்க தடையாய் இருப்பது என்ன தெரியுமா? எனக் கேட்டபின் ‘அல்லாஹ்வின் அடிமைகளை (பெண்களை) அல்லாஹ்வின் பள்ளிகளை விட்டும் தடுக்காதீர்கள் என்ற இறைத்தூதரின் வார்த்தைதான் அவரைத் தடுக்கின்றது எனக் கூறினார்கள். (புகாரி).
2) உங்கள் பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதி கோரினால் அங்கு செல்லவிடாது அவர்களைத் தடுக்காதீர்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் அவரது மகன் பிலால், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயம் நாம் அவர்களைத் தடுப்போம் எனக் கூறினார், அதற்கு அவரைத் தாறுமாறாகத் திட்டிவிட்டு, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூலம் செய்தியை அறிவிக்கின்றேன், நீ சத்தியம் செய்து தடுப்பேன் என்கின்றாயா? எனக் கேட்டார்கள். (முஸ்லிம். 667).
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளியில் தொழுததற்கான சான்றுகள்.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் அவர்களின் பள்ளியில் ஜமாத் தொழுகையில் கலந்திருக்கின்றார்கள் என்பதை பின்வரும் நபிமொழிகள் மூலம் உறுதி செய்யலாம்.
1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழும் ஆண்கள் தங்களது வேஷ்டிகள் சிறியவையாக இருந்தாதால் அவற்றை (கீழாடைகளை) தங்கள் பிடரியில் கட்டிக்கொண்டு தொழுபவர்களாக இருந்தார்கள்.
     …..   فَقِيلَ لِلنِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا(صحيح البخاري )
‘ஆண்கள் சம நிலைக்கு வரும்வரை நீங்கள் உங்கள் தலைகளை உயர்த்தாதீர்கள் என அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களால் (அறிவுரை) கூறப்பட்டது (புகாரி, முஸ்லிம், நஸயி). இது பெண்கள் ஆண்களுடன் பள்ளியில் கூட்டுத் தொழுகையில் கலந்து கொண்டதை நிரூபிக்கும் செய்தியாகும்.
2) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபஹ் தொழுகையை நேரகாலத்துடன் தொழுவார்கள். அதில் கலந்து கொள்ளும் முஃமினான பெண்கள் தங்கள் போர்வையால் போர்த்திக் கொண்டு திரும்பும் வேளை இருட்டின் கடுமையால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது போகும் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி 825, முஸ்லிம் 1026, அபூதாவூத், நஸயி).
3) நான் தொழுகையில் நின்று அதில் நீடிக்க நினைத்துக் கொண்டிருப்பேன், அப்போது சிறுபிள்ளையின் அழுகுரலை செவிமடுப்பேன். அதன் தாய் அதன் மீது படும் கஷ்டத்தை அஞ்சி அதை நான் சுருக்கமாக்கிக் கொள்வேன். என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவூத்).
4) ஆண்களில் தொழுகை வரிசையில் சிறந்தது முதலாவதும், பெண்களின் வரிசையில் சிறந்தது அதில் இறுதியானதுமாகும் என நபி (ஸர’) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத்).
5) உம்மு சுலைம் (ரழி) அவர்களின் வீட்டில் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நானும், ஒரு அநாதையும் அவர்களுக்குப் பின்னால் நின்றோம். உம்மு சலைம் அவர்கள் எமக்குப் பின்னால் நின்றார்கள். என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி).
6) நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடிந்து ஸலாம் சொன்னால் பெண்கள் எழுந்து செல்வார்கள். அதில் சற்று தாமதிப்பார்கள். (புகாரி). இது ஆண், பெண் கலப்பில்லாதிருக்கவே இவ்வாறு செய்திருக்கிறார்கள் என இது பற்றி விளக்குகின்ற அறிவிப்பாளர் (அல்லாஹ் மிக அறிந்தவன்) எனக் கூறியே கூறுகின்றார்;.
பெருநாள் தொழுகை
முஸ்லிம் பெண்கள் ஆண்கள் பங்கு கொள்ளும் இவ்வாறான நிகழ்வில் கலந்து கொள்ள மார்க்கம் பின்வருமாறு அங்கீகாரம் தந்துள்ளது. பெருநாள் தினத்தில் குமரிப்பெண்கள், மாதவிடாய் பெண்கள் உட்பட அனைவரும் பெருநாள் தொழுகை நடைபெறும் திடலக்கு புறப்பட வேண்டும் என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கட்டளையிட்டார்கள். அப்போது ஒரு பெண் ‘அல்லாஹ்வின் தூதரே! எம்மில் ஒருத்திக்கு தலையில் அணிய முந்தாணை இல்லாவிட்டால் (போகாமல் இருக்கலாமா)? என நபி (ஸல்) அவர்களிடம் வினவினார். அவளது தோழி அவளது (மேலதிக) முந்தாணையை தனது சகதோரிக்கு அணிவிக்கட்டும், நன்மையிலும், முஸ்லிம்களின் பிரார்த்தனையிலும் பங்குகொள்ளட்டும். என நபியவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
இந்த ஹதீஸைப் பதிவு செய்யும் இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் இதை உறுதி செய்யும் வண்ணம்;
 ;;  بَاب خُرُوجِ النِّسَاءِ وَالْحُيَّضِ إِلَى الْمُصَلَّى (البخاري)
‘சாதாரண நிலையில் உள்ள பெண்களும், மாதவிடாய்ப் பெண்களும் திடலுக்கு வெளியாகிச் செல்லுதல் ‘ என தலைப்பிட்டுள்ளதையும், முஸ்லிமின் கிரந்தத்திற்கு விளக்கம் தரும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள்,
بَاب ذِكْرِ إِبَاحَةِ خُرُوجِ النِّسَاءِ فِي الْعِيدَيْنِ إِلَى الْمُصَلَّى وَشُهُودِ الْخُطْبَةِ مُفَارِقَاتٌ لِلرِّجَالِ (صحيح مسلم   (4 / 404)
பெண்கள் ஆண்களைப் பிரிந்தவர்களாக இரு பெருநாளில் திடலுக்;குச் செல்வதும், குத்பாவிற்குச் சமூகம் தருவதும் ஆகுனுமானது என்பதை விளக்கும் பாடம்’ என தலைப்பிட்டுள்ளதையும் பார்க்கின்றோம்.
சிறந்தது எது பள்ளியா ? வீடா?
இப்படி தெளிவான அனுமதி இருப்பதை யாரும் மறுப்பது போன்று பேசினால் அவர்கள் இந்தச் செய்தி பற்றிய தெளிவற்றவர்கள் என்றே கருத வேண்டி ஏற்படும் என்பதை சாதாரண அறிவு படைத்தவருக்கும் தெரிந்ததேளூ! இருப்பினும் சிறப்பு எதில் இருக்கின்றது என்பதை பற்றிப் பேசினால் வீடுதான் என்பதை பின்வரும் நபி மொழியின் மூலம் உறுதி செய்ய முடியும்.
عنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ وَبُيُوتُهُنَّ خَيْرٌ لَهُنَّ (سنن أبي داود)
உங்கள் பெண்களை பள்ளிவாயில்களை விட்டும் தடை செய்யாதீர்கள். அவர்களின் வீடுகள் அவர்களுக்குச் சிறந்ததாகும். (அபூதாவூத்) பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்ய கணவன் மாருக்கு அனுமதி இல்லை என்பதை உமர் (ரழி) அவர்களின் மனைவியரில் ஒருவர் கூறிய செய்தியை முன்னர் குறிப்பிட்டிருந்தோம் அதையும் இணைத்தே படிக்கவும்.
 
பெண்கள் பள்ளிக்கு வரும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள்.
பெண்கள் பள்ளிக்கு வருகின்ற போது பின்வரும் ஒழுங்குகள் பேணப்படுவது அவசியமாகும்.
1) மணம் பூசி வருவதைத் தவிர்த்தல்.
عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا (صحيح مسلم)
(பெண்களே!) உங்களில் யாராவது பள்ளிக்கு வந்தால் அவர் வாசைன பூச வேண்டாம் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரழி) அவர்களின் மனைவி ஸைனப் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (முஸ்லிம்). அவர்களின் மற்றொரு அறிவிப்பில், ‘ உங்களில் ஒருவர் இஷாவுக்கு பள்ளிக்கு வருகின்ற போது அவ்விரவு நறுமணம் பூசி வரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளதைப் பார்க்கின்றோம். (முஸ்லிம்).
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ  (صحيح مسلم)
எந்தப் பெண் நறுமணத்தைப் பூசிக் கொண்டாளோ அவள் இஷாத் தொழுகைக்கு நம்முடன் சமூகம் தரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறியு;ளளார்கள். (முஸ்லிம்).
இவ்வாறான செய்திகள் மூலம் பெண்கள் நறுமணம் பூசியவர்களாக தொழுகைக்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளதைப் பார்க்கின்றோம்.
2) இஸ்லாமிய ஆடையுடன் செல்லுதல்.
முஃமினான பெண்கள் தமது போர்வைகளால் போர்த்தியவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் கலந்து கொள்வார்கள், தொழுகை முடிந்து கலைந்து செல்வார்கள். இருளின் கடுமையால் அவர்களை யாரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;. (புகாரி).
நரகவாதிகளான இரு பிரிவினர் உள்ளர். அவர்கள் போன்றோரை நான் என்றும் கண்டதில்லை எனக் கூறிய நபி (ஸல்) அவர்கள் ‘ ஆடை அணிந்தும் நிர்வரிணிகளான பெண்கள், வளைத்தும், வழைந்தும் நடப்பவர்கள், அவர்களின் தலைகள் சாய்ந்து செல்லும் ஒட்டகத்தின் திழ்கள் போன்றிருக்கும், அவர்கள் சுவர்க்கத்தில் நுழையவோ, அதன் வாடையை நுகரவோமாட்டார்கள் எனக் கூறினார்கள். (முஸ்லிம்).
3) பார்வைகளைத் தாழ்த்தி, அலங்காரங்களை வெளிப்படுத்தாது செல்லுதல்.
பெண்கள் பள்ளிக்கு மாத்திரமல்ல, வெளியில் செல்லுகின்ற போதும் கூட பொதுவாக கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகளில் இதுவும் ஒன்றாகும்.
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்புகளைக் காத்துக் கொள்ளுமாறும், (முகம், கை போன்ற) தானாக வெளிப்படும் உறுப்புக்கள் நீங்கலாக ஏனைய எல்லாப்பகுதிகளையும் மறைக்கும்படியும், தங்களது முந்தாணைகளால் (முழுமையாக) போர்த்திக் கொள்ளும்படியும், தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்றும் முஃமினான பெண்களுக்கு நபியே நீர் கூறுவீராக! (அந்நூர்: வச: 31).
இந்த வசனத்தைக் கவனத்தில் கொண்டு பெண்கள் தாம் வெளியில் செல்லுகின்ற போதுள்ள ஒழுங்குகளைப் பேண வேண்டும்.
4) வீதி ஓரங்களால் செல்லுவதும், திரும்புவதும்.
வீதியில் பெண்கள் ஆண்களுடன் கலக்கின்ற நிலை தவிர்க்கப்பட வேண்டும். பள்ளிக்குச் செல்லும் போதும், வீடு திரும்பும் போதும் இந்த ஒழுங்கை கட்டாயம் பேணியாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி போது ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து நிற்பதைக் கண்டார்கள். பெண்களைப் பார்த்து கொஞ்சம் தாமதியுங்கள், பாதையில் முட்டிக் கொண்டு செல்வது உங்களுக்குரியதல்ல, நீங்கள் பாதை ஓரத்தைப் பிடித்துச் செல்லுங்கள் எனக் கூறினார்கள். அதனால் பெண் செல்லுகின்ற போது தனது ஆடை சுவரில் உரசியபடி செல்பவளாக இருந்தாள். (அபூதாவூத்)

பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுப்பதாக நம்பப்படும் செய்தியும், அதற்கான மறுப்பும்

பெண்கள் பள்ளிக்கு வருவதையும், அவர்கள் அனுமதி கோரும் பட்சத்தில் அனுமதி வழங்கப்படல் வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் பல நபி மொழிகளைக் கண்டு கொள்ளாத மெளலவிகள் பலர் ஆயிஷா (ரழி) அவர்களின் கருத்துடன் அமைந்த பின்வரும் கூற்றை நபி மொழிகளை விட முன்னிலைப்படுத்தி அனைத்து ஹதீஸ்களையும் செயலிழக்கச் செய்யும் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கையை அவதானிக்கின்றோம். இது சான்றுகளை அணுகத் தெரியாதவர்களின் செயல்முறையாகும்.
عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهَا سَمِعَتْ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ بَنِي إِسْرَائِيلَ قَالَ فَقُلْتُ لِعَمْرَةَ أَنِسَاءُ بَنِي إِسْرَائِيلَ مُنِعْنَ الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ  (صحيح مسلم )
பெண்கள் உருவாக்கிக் கொண்ட(புதிய)வைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவதானித்திருந்தால் பனூ இஸ்ரவேலரின் பெண்கள் தடுக்கப்பட்டது போல நமது பெண்களையும் பள்ளிக்கு வராது நிச்சயம் தடுத்திருப்பார்கள்; என அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் குறிப்பிடுவதை அவர்களின் கருத்தாகக் கொள்ளாமல் நபி மொழியாகக் கொண்டு பள்ளிக்குச் செல்வதை அனுமதிக்கும் பல நபி மொழிகள் இதன் மூலம் உதாசீனம் செய்யப்படும் நிலையைப் பரவலாக அவதானிக்கின்றோம்.
இது அன்னை அவர்களின் கூற்று என்பதே உண்மை. பள்ளிக்குச் செல்வது அல்லாஹ்வின் தூதர் தனது மரணத்துக் முன்னால் அனுமதித்த ஒன்றாகும். அவர்களின் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வந்து சென்றார்கள். அவ்வாறு அவர்களை தடை செய்வதாக இருந்தால் நிச்சயமாக அவர்கள் உயிருடன் இருக்கின்ற போதே தடை செய்திருப்பார்கள்.
அல்லாஹ் அனைவருக்கும் மார்க்கத்தில் விளக்கத்தை தருவானாக!